ஹதீஸ் மறுப்பும் ஈமானிய சிந்தனையும்

         ஹதீஸ் மறுப்பும்
   ஈமானிய சிந்தனையும்
    ***********************   

                16-10-19
        கட்டுரை எண் 1270
      !!J . Yaseen iMthadhi !!
             ************* 
                     ﷽
                !!!!!!!!!!!!!!!!!

ஆதாரப்பூர்வமாக இருக்கும் பிரபல்யமான  நபி மொழிகளை நடைமுறை படுத்துவதில் இருக்க வேண்டிய அக்கரை

ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸ்கள் எல்லாம் ஏற்க தகாதவை  என்பதை சிந்திக்கும் நிலையின் பக்கம் தள்ளப்பட்ட நபர்களை நினைத்து வருந்துவதா அல்லது மகிழ்சி அடைவதா  ?

அறிந்த செய்தியை நடை முறை படுத்தினாயா என்பது இறைவனின் கேள்வியாக இருக்குமா  ?

அல்லது அங்கீகரிக்கப்பட்ட செய்திகளில் எந்த செய்தியை தள்ளுபடி செய்ய முயற்சி செய்தாய் ? என்பது மறுமையில் இறைவனின் கேள்வியாக இருக்குமா  ?

இவர்களால் மறுக்கும் ஆணித்தரமான  ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ள நூற்களை இனிமேல் இவர்களே அச்சிட்டு  வெளியிடும் போது  குர்ஆனுக்கு எதிரான ஹதீஸ் என்று இவர்கள் நம்பும்   ஹதீஸ்களை நீக்கி விட்டு வெளியிடுவார்களா

அல்லது பொய்யான ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ் என்று வீரியமாக பேசி கொண்டே அவைகளை நீக்காது தொடர்ந்து வழக்கம் போல் பொய்யான குர்ஆனுக்கு எதிரான ஹதீஸ்களை  அச்சிட்டு தொடர்ந்து  வெளியிடுவார்களா   ?

அவ்வாறு தொடர்ந்து வெளியிட்டால் அதற்கு என்ன காரணம்  ?

பலவீனமான தகவல் என்று திட்டவட்டமாக எழுதி வைத்து கொண்டே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அந்த ஹதீஸ்களை மக்கள் கண்களில் மறைக்காது அது போன்ற ஹதீஸ்களையும் பதிவு செய்தது ஏன் என்ற தாத்பிரீயத்தை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்  ?

அல்லாஹ்வின் ஞானம் இறைதூதரின் ஞானம்  நிலையானதா ? அல்லது அறிவியல் கலந்த அறிவு ஞானம் என்றும் நிலையானதா  ?

நான் கூறும் கருத்துக்கள் யாவும்  அறிவியலுக்கு  மட்டுமே ஒத்து இருக்கும் என்றோ
அல்லது அறிவியலுக்கும் மனிதனின்  அறிவுக்கும் எதிராக நான் வசனங்களை இறக்கவே இல்லை என்று   அல்லாஹ் குர்ஆனில்  கூறியுள்ளானா  ?

அல்லது அறிவுக்கும் அறிவியலுக்கும் உட்பட்ட செய்திகளை மட்டுமே எனது தூதர்கள் பேசுவார்கள் என்று இறைவன் திருகுர்ஆனில் கூறியுள்ளானா  ?

அப்படியானால் இஸ்லாத்தில் அறிவை வைத்து சிந்திக்க இயலாத  ஈமான் எனும் ஒரு பகுதியை இறைவன்  ஏன் இடம் பெற செய்ய வேண்டும்   ?

மாறாக அல்லாஹ்வும்  இறைதூதரும் ஒன்றை கூறினால் அது ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் மாற்று கருத்து கூற எவருக்கும் அனுமதி இல்லை என்பது தான் குர்ஆனின் கட்டளை

அறிவிப்பாளர்கள் வரிசையில் விமர்சனம் உள்ள ஹதீஸ்களை மறுப்பது என்பது ஒரு வகை

அறிவிப்பாளர்கள் வரிசையில் குளருபடியே இல்லாத ஹதீஸ்களை குர்ஆனுக்கு எதிரானது என்று தர்கித்து மறுப்பது என்பது அதில் தற்போதைய புது வகை

இதுவரை பழங்கால ஹதீஸ்கலை வல்லுனர்கள் கடை பிடிக்காத ஒரு வகை

அஹ்ல குர்ஆன் எனும் வழிகேடுகளை மறைமுகமாக நுழைக்கும் சித்தாந்தமே இந்த நவீன  கொள்கை

இது போன்ற சிந்தனையில் இருந்து எச்சரிக்கை பேணுவோம் 

       நஊதுபில்லாஹ்

اَللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏ 
நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்

    (அல்குர்ஆன் : 22:69)

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰىۙ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا  وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ‏ 
நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும் நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ  அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்

    (அல்குர்ஆன் : 47:32)

2155. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்
(பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன் நபி(ஸல்) அவர்கள் நீ விலைக்கு வாங்கி விடுதலை செய் (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான் என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்து அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது?
யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை வீணானது (செல்லாதது;)
அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும் எனக் கூறினார்கள்

நூல் ஸஹீஹ் புகாரி

    நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்