பொறாமையே நம்மை தீயவனாக்குகிறது
பொறாமையே நம்மை
தீயவனாக்குகிறது
************************
12-10-19
கட்டுரை எண் 1269
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
பிறர் நலம் நாடுதல் என்ற நபிமொழியின் போதனை
மனிதனிடம் குன்றிவிட்டதின் விளைவு தான் மற்றவர்களின் முன்னேற்றத்தின் மீது பொறாமை படும் தீய எண்ணம் வளர்ந்திருப்பதற்கு மூல காரணம்
இந்த தீய எண்ணம் தான் நாளடைவில் ஒரு மனிதனை பற்றி தவறான பல எண்ணங்களை உண்டாக்கவும் அதன் மூலம் பல விளைவுகளை அந்த மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தவும் ஊன்று கோலாக அமைகிறது
இதன் காரணத்தால் பிற மனிதன் செய்யும் நலவுகள் கூட நமக்கு தீங்கு போல தோற்றம் தருகிறது
சம்மந்தப்பட்ட மனிதன் நமக்கு எதிராக செயல் படுவது போன்ற தீய எண்ணத்தையும் சைத்தான் ஏற்படுத்தி விடுகிறான்
வஞ்சகம் துரோகம் குழப்பம் அர்ப்பமானதையும் பூதாகரமாக சித்தரிக்கும் கீழ்நிலை எண்ணத்தையும் சாத்தான் நம்மில் விதைத்து விடுகிறான்
இறைவன் விதித்த ஒரு மனிதனின் முன்னேற்றத்தை யார் நினைத்தாலும் தடுக்க இயலாது என்ற சாதாரண சிந்தனையை கூட இவர்கள் உட்கொள்வது இல்லை
இதன் காரணத்தால் மற்றவர்களின் சாபத்திற்கு உள்ளாவதோடு நாம் உலகில் சிறிதளவு செய்யும் நன்மைகளை கூட மறுமையில் இழக்கும் சூழ்நிலையை தான் நிச்சயம் சந்திப்போம்
தவிர்போம் பொறாமை எனும் தீய குணத்தை
மற்றவர்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வடையும் நற்குணத்தை வளர்ப்போம்
தனக்கு இறைவன் செய்த பாக்கியங்களை அன்றாடம் நினைவு கூறினாலே பிறர்களுக்கு இறைவன் வழங்கி இருக்கின்ற பாக்கியங்கள் மீது நமக்கு பொறாமை ஏற்படாது
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா?
(அல்குர்ஆன் : 4:54)
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்)
(அல்குர்ஆன் : 113:5)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment