பெருநாள் தொழுகை சர்சை

        பெருநாள் தொழுகை
                   சர்ச்சை

          *********************
                   03 -07-19
           கட்டுரை எண்1250
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

பெருநாள் தொழுகை பர்ளா  அல்லது சுன்னத்தா ? என்ற சர்ச்சை சமீபகாலமாக சில ஏகத்துவவாதிகள் அவசியமின்றி தர்க்கம் செய்வதை  பரவலாக சமூகவலைதளங்களில் காண முடிகிறது

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் பெருநாள் தொழுகையை தவறாது கடை பிடித்து வரும் சூழலில் பெருநாள் தொழுகை பர்ளா சுன்னத்தா என்று விவாதிப்பது அவசியமற்றது

காரணம் இதை விவாதித்து சமூகத்தில் இவ்விசயத்தில்  என்ன மாற்றத்தை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது

பெருநாள் தொழுகையை பொறுத்தவரை பர்ளு என்று விவாதிப்பதும்  சுன்னத்து என்று விவாதிப்பதும் ஹதீஸ்களின் புறக்காரணங்களை கொண்டு நிலைநாட்டப்படும் வாதமே தவிர நேரடியாக ஆதாரங்களை காட்டி பர்ளு என்றும் அல்லது சுன்னத்து என்றும் நூறு சதவிகிதம்  எவராலும் தெளிவாக முரண்பாடில்லாது வாதிக்க இயலாது

ஹதீஸ்களில் நேரடியாக ஆதாரம் இல்லாத காரணத்தால் தான் மேன்மைமிகு மத்ஹப் இமாம்கள் காலத்தில் இருந்தே பெருநாள் தொழுகையை பற்றி மாறுபட்ட பல கருத்துக்கள் நிலவி இருப்பதை காண இயலுகிறது

اختلف العلماء في حكم صلاة العيدين على ثلاثة أقوال :

القول الأول :

أنها سنة مؤكدة . وهو مذهب الإمامين مالك والشافعي .

والقول الثاني :

أنها فرض على الكفاية ، وهو مذهب الإمام أحمد رحمه الله .

القول الثالث :

أنها واجبة على كل مسلم ، فتجب على كل رجل ، ويأثم من تركها من غير عذر. وهو مذهب الإمام أبي حنيفة رحمه الله ورواية عن الإمام أحمد . وممن اختار هذا القول شيخ الإسلام ابن تيمية والشوكاني رحمهما الله .

انظر : المجموع (5/5) ، المغني (3/253) ، الإنصاف (5/316) ، الاختيارات (ص 82) .

இமாம் மாலிக் (ரஹ்) இமாம் ஷாஃபி( ரஹ்) அவர்கள் பெருநாள் தொழுகையை சுன்னத் முஅக்கதா என்றும்

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பெருநாள் தொழுகையை பர்ளு கிபாயா என்றும்

இமாம் அபூஹனீபா( ரஹ்) அவர்கள் பெருநாள் தொழுகையை வாஜிப் என்றும்

ஹதீஸ்களின்  புறக்காரணங்களை மேற்கோள் காட்டி கருத்துக்களை எடுத்து வைத்துள்ளனர்

அவைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பெருநாள் தொழுகையை பர்ளு என்று சொல்வதற்க்கு எடுத்து வைக்கும் ஆதாரங்கள் இரண்டாம் நிலையை தான் அடைந்துள்ளது

       ************************

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து  இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்று பதில் கூறினார்கள்

அவர் இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (பர்ளு அதாவது  கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க
இல்லை நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

               நூல் புகாரி
            ******************
ஜும்மா தினமும் பெருநாள் தினமும் ஒரே நாளில் வந்து விட்டால் அந்நாளில் ஜும்மா தொழுகையை நிறைவேற்றாது இருந்தாலும் அது தவறு இல்லை மாறாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்  என்ற வாதமும் பெருநாள் தொழுகை பர்ளு என்று சொல்வதற்க்கு வலுவான ஆதாரமாக ஆகாது

காரணம் அந்த ஹதீசிலும்  பெருநாள் தொழுகை கடமை என்ற வாசகம் இடம் பெறவில்லை

மாறாக புகாரி 2678 இலக்க எண் ஹதீசை வைத்து பார்க்கும் போது பெருநாள் தொழுகை வலியுருத்தப்பட்ட ஒன்றே என்று தான் முரண்பாடில்லாமல் விளக்க முடிகிறது அவ்வாறு விளங்குவதே சிறந்த முடிவாக தெரிகிறது

இதில் எந்த கருத்தை ஏற்று கொண்டாலும் சரி பெருநாள் தொழுகை அவசியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை

எனவே வீணான விவாதங்களில் கவனம் செலுத்தி அதன் மூலம் விருப்பு வெறுப்புகளை தூண்டுவோரை தனிமைபடுத்துவோம்

இதை பற்றி நமது யூடியூப் சானலில் இடம் பெற்றுள்ள 706 இலக்க கேள்வி பதிலை விரும்பினால் காணுங்கள்

அதற்கான லின்ங்

https://youtu.be/85n5zURtqao

        நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்