மனித உடலமைப்பு தீமைகளின் வடிவமைப்பு
மனிதனின் உடலமைப்பும்
தீமைகளின் வடிவமைப்பும்
♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1225
16-01-19 செவ்வாய் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
மனிதனின் உடலுக்கு எந்த பொருள் ஏற்காதோ
மனிதனின் உடலுக்கு எந்த பொருள் தீங்கு தருமோ
அந்த பொருட்களை உண்ணும் துவக்கத்தில் அவைகளை மனிதனின் உடல் இயல்பாகவே வெறுக்கும் விதத்தில் தான் இறைவன் மனிதனின் உடலமைப்பை படைத்துள்ளான்
ஒரு வேளை அது போல் பொருட்களை நாவு ஏற்று கொண்டாலும் அவைகளை ஜீரணிக்காது செய்து உடலின் உள் அமைப்புகள் அந்த பொருட்களை ஏதோ ஒரு வகையில் குறிப்பாக மனிதனை வாந்தி எடுக்க செய்வதின் மூலமாக அல்லது உடல் உபாதைகளை ஏற்படுத்துவதின் மூலமாக வெளியே தள்ளி விடுகிறது
மதுபானம் புகையிலை போன்ற எந்த பொருட்களும் இதே நிலையில் தான் உள்ளது
இவைகளுக்கு தற்காலத்தில் அடிமையாக இருக்கும் மனிதனும் கூட அவைகளை பழகும் துவக்கத்தில் அரைகுறை மனதோடும் முகச்சுழிப்போடும் தான் அவனது பழக்கத்தில் மெதுவாக கொண்டு வந்திருப்பான்
இயற்கைக்கும் இயல்புக்கும் மாற்றமான ஒன்றை சர்வ சாதாரணமாக செய்ய பழகி விடும் போது அவைகளை விட்டு தவிர்ந்து கொள்வதை மிகவும் சிரமத்திற்க்குரிய காரியமாக மனிதனின் உடலமைப்பு மனிதனின் மனதை திசை மாற்றி விடுகிறது
இதன் விளைவு தான் உடலுக்கு ஆரோக்யம் தரும் தேனை கூட அன்றாடம் குடிப்பதில் இருந்து விலகி இருக்கும் மனிதன் அவனது உடலுக்கு கெடுதல் தரும் மதுபானத்திற்க்கும் புகையிலை சாதனங்களுக்கும் அடிமைபட்டவனாக வாழ்கிறான்
சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதன் தனது உடல் ஆரோக்யத்திற்க்கு முதல் விரோதியாக அவனையே முன்னிருந்தி கொள்கிறான் என்பது தான் உண்மை
அந்த தவறை மூடி மறைக்கவே அவனது நட்பு வட்டத்தையும் இதர சூழ்நிலைகளையும் சந்தர்ப்ப குற்றவாளியாக சித்தரிக்க துவங்குகிறான்
குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரம் செய்து மதுபானத்தை விற்க்கும் அரசாங்கத்திற்க்கு மூளையின் செயல்பாடுகள் சரியில்லை
அந்த விளம்பரத்தை கண்டும் போதை பொருளில் மூழ்கி இருப்போருக்கு அவர்களின் மூளையே செயலில் இல்லை என்பது தான் உண்மை
எனவே வாழ்கையில் எந்த ஒரு செய்கையை கற்பதற்க்கும் முன்பாகவும்
அந்த செயல் நமது உடலுக்கு ஏற்றதா ? அல்லது நமது ஆரோக்யத்திற்க்கு உவந்ததா அல்லது எதிரானதா ? என்பதை பல முறை யோசிக்க பழக வேண்டும்
சிந்தனைக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத எந்த ஒன்றுக்கும் நம் வாழ்வின் சில மணி துளிகளை கூட வீணாக செலவு செய்வதை அவமானமாக கருத வேண்டும்
இஸ்லாத்தை பொருத்தவரை தீமையான பழக்கங்களில் இருந்து தூரமாக விலகி இருப்பதும் ஒரு முஸ்லிமின் மீது இறைவன் விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றாகும்
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்
(அல்குர்ஆன் : 42:30)
اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَيَّـنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُوْنَ
உண்மை யாதெனில், யார் மறுமையை நம்புவதில்லையோ அவர்களுக்கு அவர்களின் தீயசெயல்களை நாம் அழகுபடுத்திக் காட்டினோம் எனவே, அவர்கள் தடுமாறித் திரிகின்றார்கள்
(அல்குர்ஆன் : 27:4)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment