இஸ்லாமிய வாட்சப் குரூப்கள்

   சீரழிவுக்கு தூண்டில் போடும்

                 இஸ்லாமிய
           வாட்சப் குரூப்கள்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1224

       24-01-18 ஞாயிறு கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

நன்மையை நாடி எந்த வழிகளில்  சென்றாலும் அந்த வழிகளை குறி வைத்தே சாத்தான் தனது தந்திரத்தை நடைமுறை படுத்தி சீரழிவை ஏற்படுத்தி  வருவதை பரவலாக காண முடிகின்றது

அவ்வகையில் தற்கால சூழலில் ஈமான்தாரிகளை தடம் புரள செய்யும் முக்கியமான ஒன்றாக இஸ்லாமிய  வாட்சப் குரூப்கள் இருப்பதை சமூகத்தில் நடக்கும் சில அவலங்கள் அன்றாடம் வெளிப்படுத்தி வருகிறது

மார்க்கத்தை பயிலுகிறோம் எனும் பெயரில் இஸ்லாமிய குடும்ப பெண்கள் வாட்சப் குரூப்களில் இணைந்து கொண்டு

1 -  வீட்டு வேலைகளில் முறையாக கவனம் செலுத்துவது இல்லை என்பதும்

2 - குடும்ப விவகாரங்களை சொந்த பந்தங்களுக்குள்  பரிமாறி கொள்ளாது
அதை மூன்றாம் நபர்களிடம் பகிருவதில் மன நிம்மதி கிடைப்பதாக பிரம்மையில் சுற்றுகிறார்கள் என்பதும்

3 -இதன் மூலம் அந்நியர்களிடம் பல மணி நேரங்கள் மொபைல் மூலம் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பதும்

பரவலாக குற்றம் சாட்டப்பட்டு  வருகிறது

ஒரு சில ஜமாத்துகளில் இது போன்ற விவகாரங்கள்  கேவலங்களுக்கு பயந்து மறைவாகவும் இரு குடும்பத்தார்களுக்கு மத்தியில்  பேசி தீர்க்கப்பட்டு வருகிறது

குறிப்பாக ஆலீம்களும் ஆலீமாக்களும் அந்நியர்கள் பங்கு பெறும் வாட்சப் குரூப்களில் அங்கம் வகிப்பதை அல்லது அவைகளுக்கு அட்மின்களாக இருப்பதில்  கவனம் செலுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது அவர்களின் கண்ணியத்திற்க்கு ஏற்றதாகும்

சமூகத்தில் மரியாதையை பெறுவதற்க்கு பல வருடங்கள் ஆகலாம்

ஆனால் பெற்ற மரியாதையை தொலைப்பதற்க்கு ஒரு சில விநாடிகளே போதுமானது

அதிலும் குறிப்பாக ஒரு சில ஜென்மங்கள் இது போன்ற செய்திகளை காரணம் காட்டியே அவதூறுகளை திட்டமிட்டு பரப்புவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَي زَوْجِهَا أَوْ عَبْدًا عَلَي سَيِّدِهِ

ஒரு பெண்ணை அவளுடைய கணவனுக்கு எதிராக, அல்லது ஓர் அடிமையை அவனுடைய எஜமானனுக்கு எதிராக எவர் தூண்டி விடுவாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

            நூல்   அபூதாவுத்

       நட்புடன்  J  .  இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்