எலி கறியும் புலி கறியும்
எலி கறியும் புலி கறியும்
தேவையற்ற கேள்விகளும்
ஆய்வுகளும்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1223
01-01-18 வியாழன் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
கேள்வி ஞானமே ஒரு மனிதனின் சிந்தனையை அதிகரிக்க செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை
அதே நேரம் கேள்வி என்றால் என்ன ?
கேட்கப்படும் கேள்விகள் முதலில் கேட்பவருக்கு பயன் தருவதாக அமைய வேண்டும்
அல்லது அதை செவியுறும் நபர்களுக்கு பயன் தரும் விதத்தில் கேள்விகள் அமைய வேண்டும்
இந்த இரு பயன்களும் இல்லாத எந்த கேள்விகளும் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தை அல்லது மறுமை வாழ்கையின் முன்னேற்றத்தை நிச்சயம் பெற்று தராது
கால் நடையும் மனிதனும் இணைந்து குழந்தை பெற்றால் அந்த குழந்தையை குர்பானி கொடுக்கலாமா ?
அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கிய பின் அவரையே இமாமாக முன்னிருந்தி நாம் தொழுகையை நிறேவேற்றலாமா ? என்ற மத்ஹபு சட்டங்களை விமர்சித்த ஏகத்துவவாதிகள்
இன்றைக்கு அவசியமில்லாத பயன்தராத கேள்விகளை கேட்பதையும் அதற்க்கு பதில் சொல்வதையும் மார்க்க ஞானமாக நினைத்து கொண்டுள்ளனர்
எலி கறியை சாப்பிடலாமா என்ற கேள்வியும் இவ்வகையை சார்ந்ததே
காரணம் எலி கறியை பற்றிய கேள்வியை எழுப்பியவரும் அதற்கான பதிலை அறிந்து இனி வருங்காலங்களில் எலி கறியை சாப்பிட போவதும் இல்லை
பதில் கூறிய ஆலிம் அல்தாஃபியும் அதை கூடும் என்று சொல்லியதால் அதை இனி அவரும் சாப்பிட ஆசை பட போவதும் இல்லை
நிர்பந்தமான சூழலில் உணவுக்கு வழி இல்லாத போது எலி கறியை மட்டும் அல்ல ஒரு மனிதன் புலி கறியை உண்டால் கூட மார்க்கம் அதை கேட்கப்போவது இல்லை
காரணம் நிர்பந்தமான சுழலில் ஹராமை செய்யும் நிலையில் ஒருவன் இருந்தால்
அந்த நிலைக்கு மாத்திரம் தேவையான அளவு தடுக்கப்பட்ட அல்லது நேரடியாக தடுக்கப்படாத எந்த ஒன்றையும் நிர்பந்த சூழலில் சிக்கி கொண்ட மனிதன் பயன்படுத்தி கொள்வதை இறைவன் தடுக்கவில்லை
இக்கட்டான சூழலில் தடை செய்யப்பட்ட இரத்தமும் கூட அனுமதிக்கப்பட்ட சட்டத்தை போன்று தான் இது அமைந்துள்ளது
இதற்க்கு பெரிய ஆய்வும் தேவை இல்லை இதை பற்றிய கேள்விகளும் தேவை இல்லை
********
2599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள்
அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான் எனவே, ஹஜ் செய்யுங்கள் என்றார்கள்
அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்
அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் ஆம் என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும்
பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும் என்று கூறிவிட்டு
நான் எதை (செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள்
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும்
அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான்
ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்
ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள் என்றார்கள்
ஸஹீஹ் முஸ்லிம்
وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا َنَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۘ
ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள்
அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோஅதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்
(இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்
நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்
(அல்குர்ஆன் : 59:7)
*********
எலி கறி உண்ணலாமா ?
எலி என்பது மனிதனுக்கு தீங்கு தரும் உயிராகவும்
துன்பம் தரும் பட்சத்தில் அதை கொலை செய்வதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்ட உயிராகவும்
வெறிநாய் தேள் போன்ற விஷ ஜந்துக்களை பற்றி பேசும் ஹதீஸ்களில் மாத்திரம் எலியை பற்றி பேசப்படுகிறது
இதை சாதாரணமாக சிந்திக்கும் போதே எலி என்பது எவ்வகையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதே புலனாகிறது
*********
1826 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
خمس من الدّوابّ من قتلهنّ وهو محرم فلا جناح عليه: العقرب، والفأرة، والكلب العقور، والغراب، والحدأة
ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும் அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை
அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்
இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்
ஸஹீஹ் புகாரி
وعن الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَرْبَعٌ كُلُّهُنَّ فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْحِدَأَةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ . رواه مسلم
2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஐந்து உயிரினங்கள் உள்ளன அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும் அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை
தேள், (நீர்க்)காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியவையாகும்
இதை நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்
நூல் முஸ்லிம்
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment