நீங்கள் மார்க்கத்தை சிரைக்கும் நாவிதர்களா

  நீங்கள் மார்க்கத்தை சிரைக்கும்

            !!   நாவிதர்களா !!
    
   ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1210

        09 -12-18 ஞாயிறு கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************

                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

ஒரு கொள்கையை சரி என்று நாம் நினைத்தால் அந்த கொள்கையில் தடம் புரளாது இருப்பது தான் கொள்கை உறுதியே தவிர

அந்த கொள்கைக்கு எதிரானவர்களை மார்க்க நெறிகளை தாண்டி கடுமையாக எதிர்ப்பதற்க்கும் அதை சார்ந்த நபர்களை  தூற்றுவதற்க்கும் பெயர் அல்ல கொள்கை உறுதி என்பது

தமிழகத்திலும் இலங்கையிலும் இந்த மோசமான இழி செயல்கள் அநேகமான  முஸ்லிம்களிடம் குடி கொண்டு  இருப்பதை மறுக்க இயலாது

இதன் விளைவாகத்தான் ஒரே ஜமாத்தில் பல்வேறு விவகாரங்கள் புற்றீசல்களாக பரவி வருகிறது

இஸ்லாம் மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும்  ஆழமாக போதிக்கிறது என்று மாற்றார்களுக்கு சொல்லி கொண்டு இஸ்லாத்தை ஏற்றுள்ள முஸ்லிம்களிடம் அதை முஸ்லிம்களே கடை பிடிக்காது இருப்பது வேடிக்கையாக உள்ளது

தொப்பி அணிவது மார்க்கம் இல்லை என்பதனால் மார்கத்தில் தடுக்கப்படாத தொப்பியை அணிபவர்களை ஏளனமாக பார்ப்பது

மார்க்கத்தில் வலியுருத்தப்படாத தொப்பியை அணியாதவர்களை இஸ்லாத்தின் எதிரிகளாக சித்தரிப்பது

இஸ்லாத்தில் தனிமனித துதி தடை செய்யப்பட்டது என்பதற்காக அவரவர்களுக்கு உரிய கண்ணியத்தையும்  கூட  கொடுக்காது இருப்பது

பிறர்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட நபர்களின் மீது மோகம் கொண்டு அலைவது

இப்படி பலவிதமான மோச செயல்கள் முஸ்லிம்களிடம் பரவலாக காண முடிகின்றது

சுருக்கமாக சொன்னால் தங்களிடம் உள்ள மார்க்கத்தை தாங்களே சிரைத்து கொண்டு திரிவதையே கொள்கை உறுதியாக நினைக்கின்றனர்

வழிகேடுகளில் இருந்து விடுதலை கேட்டு பிராத்திக்கும் நாம் குறிப்பாக இது போன்ற வழிகேடுகளில் இருந்தும் பாதுகாவல் தேடுவதை கடமையாக கருத வேண்டும்

عَنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: دَبَّ اِلَيْكُمْ دَاءُ اْلاُمَمِ قَبْلَكُمْ: اَلْحَسَدُ وَالْبَغْضَاءُ هِيَ الْحَالِقَةُ، لاَ اَقُوْلُ تَحْلِقُ الشَّعْرَ وَلكِنْ تَحْلِقُ الدِّيْنَ

உங்களுக்கு முன் சென்ற சமூகத்தாரின் நோய் உங்களிடத்திலும் குடிகொண்டுள்ளது

சிரைத்துவிடக் கூடிய அந்த நோய் பொறாமையும், குரோதமும் ஆகும்

முடிகளை சிரைத்துவிடக் கூடியவை என்று நான் சொல்லவில்லை

மாறாக அவை தீனைச் சிரைத்துவிடும்

(இந்த நோயினால் மனிதனுடைய நற்குணங்கள் அழிந்து நாசமாகிவிடுகின்றன) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜுபைரிப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

               நூல்  .  திர்மிதி

       நட்புடன்  J  .   இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்