மன்னர் பாபர் ராமர் கோயிலை இடித்தாரா
ராமர் கோயிலை மன்னர்
பாபர் இடித்தாரா
இந்து சமுதாயமே சிந்திப்பீர்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1209
06 -12-18 வியாழன் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ராமர் கோயிலை இடித்து விட்டு அவ்விடத்தில் இறைவனை வணங்குவதற்க்கு ஒரு பள்ளிவாசலை எழுப்ப வேண்டும் என்று எந்த அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை
அவ்வாறு ஒரு கோயிலை இடித்து விட்டு அவ்விடத்தில் ஒரு பள்ளிவாசல் எழுப்பப்பட்டு இருந்தால் கட்டப்பட்ட அந்த பள்ளிவாசலை இடித்து விட்டு முஸ்லிம்களே தங்களது செலவில் ராமருக்கு ஒரு கோயிலை கட்டி தர தயங்க மாட்டார்கள்
ஆனால் உண்மையான நிலவரம் என்ன என்பதை இந்து அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஆட்சியை பிடிப்பதற்காக வந்த முகலாய மன்னன் பாபர் ராமருக்கு அயோத்தியில் எழுப்பப்பட்ட கோயிலை இடிக்கவும் இல்லை
அவ்வாறு மன்னர் பாபர்
ராமர் கோயிலை இடித்து இருந்தால் நம் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் இந்து மக்களை
இந்தியாவில் சிறுபான்மையாக இருந்த மன்னர் பாபரும் அவருடைய பரம்பரைகளும் எழு நூறு வருடங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்கவும் இயலாது
ஒரு வேளை ராமர் கோயிலை பாபர் இடித்திருந்தாலும் பாபர் வாழ்ந்த காலத்திலேயே அவரை எதிர்த்து கடுமையாக புரட்சி செய்திருப்பார்கள்
ஆனால் அது போல் ஒரு வரலாறும் பாபர் காலத்தில் எழுதப்பட்ட எந்த வரலாற்று குறிப்புகளிலும் காணப்படவில்லை
பாபர் வாழ்ந்த காலத்தில் பாபர் ஆட்சியை கடுமையாக எதிர்த்து பல நூல்களை எழுதிய குருநானக் எனும் சீக்கிய மத நிறுவனர் பாபரை விமர்சித்த செய்திகளில் மன்னர் பாபர் கோயிலை இடித்து விட்டு பள்ளியை கட்டினார் என்று குறை கூறவில்லை
இது யாவற்றுக்கும் மேல் பாபர் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது அயோத்தியில் பாபர் ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர் இந்து மக்களால் அறியப்பட்ட துளசிதாசர் என்பவர்
ராமரை பற்றிய கதைகளை பேசும் ராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் துளசிதாசர் ஆவார்
இவர் காலத்தில் பாபர் ராமருக்கு எழுப்பப்பட்ட கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டி இருந்தால்
நிச்சயம் துளசிதாசர் அவர் எழுதிய ராமாயணத்தில் பாபர் ராமர் கோயிலை இடித்துவிட்டு தான் பள்ளிவாசலை கட்டினார் என்று பதித்திருப்பார்
ஆனால் இந்து மத பங்தியாளர் துளசிதாசரும் கூட அப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்ததாக குறிப்பிடவில்லை
காரணம் என்ன ?
இந்து சமூகத்தை எதிர்த்து மன்னர் பாபர் ஆட்சி செய்தவரும் அல்ல
இந்து மக்கள் வழிபடும் ராமர் கோயிலை இடித்து பள்ளிவாசலை எழுப்பியவரும் அல்ல
பாபர் மஸ்ஜித் கட்டப்பட்ட 450 வருட காலமாக பாபர் ராமர் கோயிலை இடித்தார் என்ற ஒரு பேச்சே இந்தியாவில் இருந்ததே இல்லை
450 வருடங்களாக பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் ஐந்து நேர தொழுகைகளை நடத்தியே வந்துள்ளனர்
வெள்ளையர்கள் ஆட்சியில் கூட இதை பற்றி யாரும் முறையிட்டது இல்லை
ஆனால் எப்போது நம் நாடு சுதந்திரம் அடைந்ததோ அப்போது தான் ராமர் கோயில் விவகாரமே காவிகளால் திட்மிட்டு பரப்பப்பட்டது
இது ராமர் மீது கொண்ட பக்தியால் அல்ல
மாறாக ராமர் பெயரை பயன்படுத்தி இந்து மக்களிடம் இருந்து முஸ்லிம்களை பிரிக்கவும் அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தான் திட்டமிட்டு இந்த விவகாரம் பூதாகரமாக்கப்பட்டது
ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் ராமர் கோயில் கட்டுவதற்க்கு முயற்சி செய்யாது ஆட்சியில் இல்லாத நேரங்களிலும் அல்லது ஆட்சி நிலைக்காது என்ற சூழ்நிலையிலும் ராமர் கோயிலை பற்றி பேசுவதும் விவாதிப்பதும் இவர்களின் போலியான பக்தியை வெளிப்படுத்தி கொண்டுள்ளது
عَنْ اَبِيْ حُمَيْدِ نِ السَّاعِدِيِّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لاَ يَحِلُّ لِامْرِئئٍ اَنْ يَأْخُذَ عَصَا اَخِيْهِ بِغَيْرِ طِيْبِ نَفْسٍ مِنْهُ
தனது சகோதரரின் தடியை (ப் போன்ற சாதாரண பொருளை)க் கூட அவரது விருப்பமின்றி எடுப்பது எவருக்கும் ஆகுமானதல்ல'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுமைத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் இப்னு ஹிப்பான்
**************************
அறிவீர்களின் பேச்சை கேட்டு பாபர் மஸ்ஜிதை இடித்து தள்ளிய நபர்களில் முக்கியமான ஒருவரே இஸ்லாத்தை ஏற்று கொண்டு
பாபர் மஸ்ஜிதை இடித்த பாவத்தை கலைவதற்காக 1000 பள்ளிவாசல்களை கட்டுவேன் என்று சூளுரைத்த வீடியோ லின்ங்
https://youtu.be/g6GUyUMmAWI
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment