ஜெயலலிதா நினைவு நாளா

  ஜெயலலிதா  நினைவு நாளா

        மரண நினைவு நாளா

♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1208

      05-12-18 புதன்  கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

அரசியல் தலைவர்கள் இறந்து விட்டால் வருடா வருடம் அவருடைய மரண தினத்தை நினைத்து அஞ்சலி செலுத்தும் சடங்கு உலகம் முழுவதும் பரவலாக  உள்ளது

நம்மோடு வாழ்ந்த ஒருவர்

நாட்டையே  கட்டி ஆண்ட ஒருவர்

சர்வ வசதிகளையும் பெற்ற ஒருவர்

யாருடைய துணையும் இல்லாது மரணத்தின் மூலம்  மண்றைக்கு தனிமையில் சென்று விட்டார் என்று சொன்னால்

அதே போன்ற ஒரு சூழலை நோக்கி நாமும் பயணிக்கிறோம் என்ற நினைத்து பார்ப்பதே சரியான நினைவு நாள்

ஜெயலலிதா அப்ப்பல்லோ  மருத்துவமனையில் இருக்கும் போது

இதோ நாளை வந்து விடுவார்
மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து சாதனை செய்வார் என்று மருத்துவமனை வளாகத்தை சுற்றி நின்று கொண்டு
கற்பனைகளை பொய்களை கடவுள் வாக்குறுதி போல் அளித்த சாமியார்களும் மந்திரவாதிகளும் கடவுளின் நாட்டத்தால் தலைகுனிவை சந்தித்து அவமானப்பட்ட நினைவு  நாள்  இது

உயிரோடு வாழும் எந்த மனிதனுக்கும் அவனுடைய உயிர்

அவனது உடலில் எங்கு உள்ளது

அதன் நிறம் என்ன

அதன் சுவை என்ன

அதன் எடை என்ன

அது எப்போது உடலில் வந்தது
அது எப்போது பிரியும்

என்ற எந்த ஞானமும் இல்லை

காரணம் உயிரை தந்தவனும் அதை பறிப்பவனும் இறைவனே

அந்த இறைவன் யார்  ?
அந்த இறைவனின் தன்மைகள் என்ன ?
மண்ணும் மலையும் செடிகளும் கொடிகளும் கற்களும் சிலைகளும் நாம் வணங்கும் தகுதியை பெற்றவை தானா  ?

நாம் படைப்பாளனை வணங்குகிறோமா ? அல்லது படைப்பினங்களை வணங்குகிறோமா  ?

அந்த இறைவன் நம்மை ஏன் படைத்தான்  ?

என்றெல்லாம் நினைத்து பார்ப்பவனே உண்மையில் சிறந்த  அறிவாளி

காரணம் ஒரு பொருளாகவும் இல்லாது இருந்த நம்மை தாயின் கருவறையில் உருவாக்கி ஆளாக்கி சகல வசதிகளையும் தந்து பகுத்தறிவுள்ள மனிதனாக படைத்து இப்போது வரை நம்மை பரிபாலனம் செய்யும் இறைவன் ஒருவனே அந்த ஒரு  இறைவனுக்கே அஞ்சுவோம்

ஆட்சியும் அதிகாரமும் கடவுளை மறந்து அல்லது கடவுளை மறுத்து வாழ்வதற்க்கு அல்ல

மாறாக கடவுளை நினைத்து  வாழ்வதற்க்கு தான்

   சிந்திப்பீர் இறைவசனத்தை

وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا  وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏ 

மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை

எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்

இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்

நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்

      (அல்குர்ஆன் : 3:145)

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏ 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்

அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்

எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை

       (அல்குர்ஆன் : 3:185)

اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ 

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே

       (அல்குர்ஆன் : 4:78)

       நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்