தூர்வாரும் முஸ்லிம்கள்
தூர்வாரும் முஸ்லிம்களே
சுவனத்தின் வாரிசுகள்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1207
04-12-18 செவ்வாய் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
கழிவுகளை எந்நேரமும் தனது உடலில் சுமந்து கொண்டிருப்பதை கேவலமாக கருதாத மனிதன்
அந்த கழிவுகளை தூய்மை படுத்தி தூர் வாரும் வேலை செய்யும் மனிதர்களை கேவலமாக கருதும் இழிவான புத்தி உடையவர்களாக இருக்கின்றான்
தூர்வாரும் மனிதனே கீழ்ஜாதி என்றால் அந்த கழிவுகளை உடலில் சுமந்து மேக்கப்போட்டு திரியும் மேல்ஜாதிக்காரன் உண்மையில் அவர்களை விட படு கீழ்ஜாதிகாரன் என்பதை ஏனோ சிந்திக்க மறுத்து விடுகிறான்
அத்தர்களை பூசி தனது மேனியை அலங்காரம் ஆக்கி பெருமை அடிப்பவனை விட பிறர் கழிவுகளை தூய்மை படுத்தி அதன் மூலம் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆரோக்யத்தை பெற்று தரும் தூர்வாரும் மனிதர்களின் மனங்களே உண்மையில் அழகானவை ஆகும்
மனம் வீசும் சென்ட் கடைகளின் முதலாளிகள் கூட அவர்களின் கழிவுகளை சுமந்து கொண்டு தான் அவர்கள் பார்க்கும் தொழிலை பெறுமையாக கருதுகின்றனர்
இந்த ஆணவமும் கூட முஸ்லிம்களின் உள்ளத்தில் கடுகளவும் வந்து விட கூடாது என்பதற்காகவே பிறர்களின் அசுத்தங்களை அப்புறப்படுத்தும் காரியங்களை கூட சிறந்த பொது சேவையாக மறுமையில் நன்மையை பெற்று தரும் காரியமாகவே இஸ்லாம் மனித சமுதாயத்திற்க்கு பாடம் கற்பிக்கிறது
கொள்கை அளவில் இதை ஏற்று கொண்டுள்ள முஸ்லிம்களும் கூட செயல் வடிவில் இதை நடைமுறை படுத்துவதில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை
சிந்தித்து பாருங்கள் உங்கள் வீட்டு கழிவறையை சுத்தம் செய்யும் உங்கள் கைகள் என்றைக்காவது பொது கழிவறையை சுத்தம் செய்ய முன் வந்துள்ளதா ?
குறைந்த பட்சம் பள்ளிவாசல்களில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய உங்கள் கரங்கள் முன் வந்துள்ளதா ?
இஸ்லாம் தூய்மையான மார்க்கம் மட்டும் அல்ல
தூய்மை படுத்தும் சேவையை வலியுருத்தும் மார்க்கமும் இஸ்லாம் என்பதை உணருங்கள்
عَنْ أَنَسٍ ؓ أَنَّ امْرَأَةً كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ فَتُوُفِّيَتْ فَلَمْ يُؤْذَنِ النَّبِيُّ ﷺ بِدَفْنِهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِذَا مَاتَ لَكُمْ مَيِّتٌ فَآذِنُونِي، وَصَلَّي عَلَيْهَا، وَقَالَ: إِنِّي رَأَيْتُهَا فِي الْجَنَّةِ لِمَا كَانَتْ تَلْقُطُ الْقَذَي مِنَ الْمَسْجِدِ
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஒரு பெண்மணி பள்ளிவாசலில் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி வந்தார் அப்பெண்மணி இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்த விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதன் பிறகு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு ஜனாஸாத் தொழுகை தொழுதார்கள் இப்பெண்மணி பள்ளியில் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்து வந்ததால் இவர் சொர்க்கத்தில் இருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்
நூல் தப்ரானி
***********
407. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்
ஸஹீஹ் புகாரி
**********
2631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கு வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின்
அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான்
பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது
ஹதீஸ் சுருக்கம் ஸஹீஹ் புகாரி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment