பகுத்தறிவு இழிக்கும் சமாதிகள்

       பகுத்தறிவு இழிக்கும்  
              சமாதிகளும்

     பகுத்தறிவு ஜொலிக்கும் 
  நபிகளாரின்  போதனைகளும்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1217

     20 -11-18 வியாழன் கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

        

மண்ணறைகளை மூடி அதன் மீது சமாதிகளை பிரமாண்டமாக எழுப்புவதின் மூலமும்

சிலைகளை செதுக்கி அவைகளை பொது இடங்களில் நிறுத்தி வைப்பதின் மூலமும் தான்

ஒரு மனிதனின் பெயரை வரலாற்றிலே நிலைத்திருக்க செய்ய இயலும் என்பதே

அரசியல்வாதிகளின் அரிய ( ? ) கண்டு பிடிப்பு

மண்ணறைகளை கண்டும் சிலைகளை கண்டும் அது யார் என்றே அறியாத மக்கள் தான் உலகில் அதிகமாக உள்ளனர் என்பதை ஏனோ இவர்களுக்கு இவர்களின் பகுத்தறிவு பாடம் புகட்டவில்லை

ஒரு மனிதனின் கொள்கை தெளிவும் சமுதாய புரட்சியும் தான் அந்த மனிதனின் வரலாற்றை அவன் முகத்தை  அறியாத உலக மக்களுக்கும் கூட உணர வைக்கும்

அவ்வகையில் கோடான கோடி மக்களின் உள்ளத்தில் பதினான்கு நூற்றாண்டாக  நிலையாய் வாழும் ஒருவர் தான்

!! மாமனிதர் நபிகள் நாயகம் !!
           ( ஸல்)  அவர்கள்

அவர் வாழும் காலத்தில் கூட அவரது புகைப்படம் பாதுகாக்க படவில்லை

அதே நேரம்

அவரது ஆன்மீகம்

அவரது வீரம்

அவரது தியாகம்

அவரது புரட்சி

அவரது எழுச்சி

அவரது அரசியல்

அவரது நாணயம்

அவரது ஒழுக்கம்

அவரது பண்பாடு

அவரது சாதனை

அவரது எளிமை

அவரது கனிவு

அவரது தன்னடக்கம்

அவரது கொள்கை தெளிவு

அவரது முரண்பாடின்மை

இப்படி நபிகளாரின் ஒவ்வொரு அசைவுகளும் வரலாற்று சுவடுகளில் காவியமாய் இன்று வரை  மின்னுகிறது


நபிகளாரின் நிறம் என்ன

நபிகளாரின் உயரம் என்ன

நபிகளாரின் வடிவம் என்ன

நபிகளாரின் உருவம் என்ன

என்பதை அவரது காலத்தில் வாழாத எவரும் எந்த முஸ்லிமும் கண்களால் கண்டது இல்லை

ஆனால் அவரது ஒரு சொல்லை பாதுகாக்கவும் அதற்க்கு செயல் வடிவில்  உயிரூட்டவும்  கோடான கோடி மக்கள் உலகமுழுவதும் வியாபித்துள்ளனர்

இது யாவற்றுக்கும் மேல் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவே யாரும் தனிமரியாதை செலுத்த கூடாது என்பதை கட்டளையாக போட்டு அதில் நிலையாக நின்றவர் மாமனிதர் நபிகள் நாயகம்

தன் மண்ணறையை கூட கட்டிடமாக எழுப்ப கூடாது என்றும்

அதில் விழாக்கள் நடத்த கூடாது என்றும்

அங்கு வருவோர் தனது மண்ணறையில்  கையேந்தி பிராத்தணை செய்ய கூடாது என்றும்

கடுமையாக கட்டளையிட்டதின் காரணத்தால்
அதை பதினான்கு நூற்றாண்டுகளாக கடை பிடித்து வரும் ஒரே சமூகம் முஸ்லிம் சமுதாயம் தான்

உயிரை விட மேலாக நபிகளாரை மதிக்கும் கோடான கோடி முஸ்லிம்களில்  ஒரு முஸ்லிம் கூட

நபிகளாரை இதய தெய்வம் என்று சொல்ல மாட்டான்

நபிகளாரே !!   உங்களால் தான் வானம் பொழிகிறது பூமி நனைகிறது என்று மடமை புகழ் பாட மாட்டான்

நபிகளாருக்கு கற்பனையில் ஒரு சிலை வடித்து
அந்த சிலைக்கு மரியாதை செலுத்துவதை கூட சுயமரியாதைக்கு இழுக்காகவே நினைப்பான்

காரணம் நபிகளார் காட்டி தந்த வழிமுறை அறிவுப்பூர்வமானது

கடவுளை மறுத்து பகுத்தறிவை பேசிய பகுத்தறிவாளர்கள் எல்லாம் தனது மரணத்திலும் கூட  தங்களுக்கு பகுத்தறிவு சரியாக வேலை செய்யவில்லை என்பதை தான் நிரூபித்து வருகின்றனர்

ஆனால் சரியான கடவுள் கொள்கையை பகுத்தறிவு ரீதியாகவே  முழங்கி
தனது மரணத்திலும் பகுத்தறிவை பக்குவமாக பாதுகாத்து மரணித்தவர் மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்)  அவர்கள் மட்டுமே என்பதில் கடுகளவு சந்தேகமும் இல்லை

முஹம்மத் என்றாலே புகழுக்கு உரியவர் என்று தான் பொருள்
அந்த வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாய் வாழ்ந்து மரணத்தை எய்தவர் மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்

      *************************

3445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல்
நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்

ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான்

(அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார் என்றும் இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்

"என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்

           ஸஹீஹ் புகாரி

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர் அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்

அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா?

     (அல்குர்ஆன் : 3:144)

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்