சாத்தானுக்கு தாலி கட்டிய சமூகம்
சாத்தானுக்கு தாலி கட்டிய
சோம்பேறிகளாய் மனித சமூகம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
16-12-18- ஞாயிறு
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1213
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
அதிகாலையே எழுந்து இறைவனை நினைப்பதும் சற்று நேரம் அவனை துதிப்பதும் தான்
காலம் காலமாக அனைத்து மதத்தவர்களும் கடை பிடித்து வந்த அழகிய நெறியாகும்
இருள்களை பகலாக்கி தூக்கத்தை நாசமாக்கும் தொலைகாட்சிகளும்
நவீன சாதனங்களும் வந்த பிறகு தான் அனைத்து மதத்தினர்களும் அதிகாலை எழுவதையே சோம்பலாக கருத துவங்கினர்
அதிகாலை எழுந்தவுடன் குடிக்கும் தேனீரை கூட விடிய விடிய சாராயம் போல் குடித்து தேனீருக்கு அடிமைகளாகி விட்டனர்
விழித்திருக்கும் நேரங்களில் குத்தாட்டம் மயிலாட்டம் போன்ற நிகழ்வுகளை காட்டியே மனிதனின் மனதை கெடுக்கும் தொலைகாட்சிகள்
அனைவரும் உறங்கும் அதிகாலை நேரங்களில் பக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்து பக்தியை கூட போலியாக மாற்றி விட்டது
அதிகாலை நேரம் வீட்டு வாசலில் கோலம் போட்டு சரஸ்வதியை வரவேற்க காத்திருந்த இந்து சமூக பெண்களும்
அதிகாலை நேரம் ஜெப கீதம் போட்டு கர்த்தரின் ஆசியை அரவணைக்க காத்திருந்த கிருஸ்தவ சமூக பெண்களும்
இறையருளை வாரி வழங்க வருகை தரும் வானவர்களின் வருகையை எதிர் பார்த்து அதிகாலை தொழுகையை நிறைவேற்றி வந்த முஸ்லிம் பெண்களும்
இன்று தலையணையை கட்டி பிடித்து குறட்டை விட்டு அருள் தர வருகை தரும் வானவரை கூட விரட்டி விடுவதில் முன்னனியில் உள்ளனர்
குடும்ப தலைவிகளின் நிலையே இதுவென்றால் அவர்களோடு வாழ்வில் பிணைந்துள்ள
குடும்ப தலைவர்களின் அவலத்தை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை
அதிகாலை விடியும் சூரிய வெளிச்சத்தை கூட இவர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தான் திரை காட்சியாக பார்த்துள்ளனர்
எப்படியோ சாத்தானுக்கு தாலி கட்டி அதிகாலை உறக்கத்திற்க்கு மாலை போட்டு
சுறுசுறுப்புக்கு வேலியை போட்டு
பாடையில் போகும் பிணங்களாக மாறி இருப்பது தான் தற்கால சமூகத்தின் அவல நிலை
فَالِقُ الْاِصْبَاحِ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
அவனே பொழுது விடியச் செய்பவன்
(நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் -இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும் எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்
(அல்குர்ஆன் : 6:96)
வேதனையுடன் J . இம்தாதி
Comments
Post a Comment