வரம்பு மீறும் விமர்சனங்கள்
வரம்பு மீறும் விமர்சனங்கள்
அறிவாளிகளுக்கு
உவந்தது அல்ல
!!***************!!
19-12-18- வியாழன்
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1217
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
இஸ்லாத்திற்க்கு மாற்றமான கருத்தை அல்லது எதிரான கருத்தை ஒருவர் கூறுகிறார் என்பதற்காக அவரை வரம்பு மீறி விமர்சிப்பதும் வசை பாடுவதும் முஸ்லிம்களில் அநேகமான நபர்களிடம் காணப்படுகிறது
இதனால் நம் நாட்டில் நடுநிலையோடு கருத்து சொல்லும் சிந்தனையாளர்கள் கூட
நம் சமூகத்திற்க்கு இயன்ற வரை குரல் கொடுக்கும் தலைவர்கள் இயக்கங்கள் கட்சிகளும் கூட
விரக்தியால் நம்மை விட்டு அகன்று போகும் சூழ்நிலையே நிலவி வருகிறது
குறிப்பாக கட்டுப்பாடுகள் இல்லாத சமூகவலைதளத்தில் இருந்து கொண்டு
நாம் எதை கூறினாலும் எவரும் நம்மை கேட்க வரமாட்டார்கள் என்ற குருட்டு தைரியத்தில்
எந்த ஒன்றுக்கும் மாற்று கருத்தை சொல்வதையே புத்திசாலித்தனமாக கருதும் அறிவீனர்களாக பல முஸ்லிம்கள் இருப்பதை மறுக்க இயலாது
மனிதனின் அறிவு நபருக்கு நபர் இறைவனே மாறுபட்டு படைத்திருக்கும் போது கருத்து வேறுபாடுகளும் எதிர்ப்புகளும் இயல்பானது
நாம் ஒரு கருத்தை அல்லது கொள்கையை சரியாக தானே சொல்கிறோம் பிறகு ஏன் எதிர்க்க வேண்டும் என்று தனது வரம்பு மீறலை நியாயப்படுத்த கூடாது
நபிமார்களையும் நல்லோர்களையும் அவர்களது கருத்துக்கு ஒத்து வராதவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்று தான் திருக்குர்ஆனே நமக்கு பாடம் கற்பிக்கிறது
காரணம் அவ்வாறு நீங்கள் எதிர்க்கப்படும் பொழுது நீங்களும் அவர்களின் பொறுமையையும் எதிரிகளிடம் அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளையும் கடை பிடிக்க வேண்டும் என்பது தான் இதற்க்கு மூல காரணம்
இதை உள்வாங்காது மறுப்பு சொல்வதையே அறிவின் அடையாளமாக கருத வேண்டாம்
فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى
நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள்
அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்
(அல்குர்ஆன் : 20:44)
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்
(சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால் அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்
எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக
தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்
பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக!
நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்
(அல்குர்ஆன் : 3:159)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment