சமூக சேவையில் சிறந்து விளங்கும் முஸ்லிம் சமுதாயம்

    சமூக சேவையில் சிறந்து
         விளங்கும் முஸ்லிம்
             !!  சமுதாயம்  !!
   ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1206

      02 -12-18 ஞாயிறு கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு பதினேழு  நாட்கள் கழிந்த பிறகும் அரசாங்கத்தின் சீரமைப்பு  நடவடிக்கைகள் உதவி தொகைகள்  ஆமை வேகத்தில் தான் இப்போதும் பயணிக்கிறது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக தற்போது தான் அறிக்கையே வெளியிட்டு உள்ளது

சுருங்க சொன்னால் மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஊழியர்களும்
மக்கள் போட்ட ஓட்டுகளின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து விதமான சலுகைகளையும் பதவிகளையும் சொகுசாக  அனுபவிக்கும் அரசியல்வாதிகளும் இது போன்ற கடமைகளை செய்வதற்க்கும் கூட ஏதாவது வகையில் தனக்கு  இலாபம் கிடைக்குமா என்ற மோகத்தில் தான் அலைகின்றனர்

ஆனால் எந்த சமூகம் இந்திய அளவில் படிப்பு விசயத்தில் பின் தங்கியுள்ளார்களோ  , அரசியல் பதவிகளில் அனாதைகளாக உள்ளார்களோ, மத ரீதியாக
தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக ஊடகங்கள்  மற்றும்  சினிமாக்களின் மூலம்  சித்தரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு உள்ளார்களோ, அந்த முஸ்லிம் சமூகம் தான்

கஜாபுயல் ஏற்பட்ட மறுநிமிடம் முதல் இந்த நிமிடம் வரை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் களமிறங்கி  அரசாங்க ஊழியர்களே அதிசியக்கும் விதமாக பல விதமான சேவைகளை தியாகங்களை செய்து வருகின்றனர்

பள்ளிவாசல்களின் மேடைகளில் பொதுசேவைகளின் சிறப்புகளையே( ஆலீம்கள்)  மதகுருமார்கள் தொடர்ந்து  பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்ய அழைப்பு விடுத்து கொண்டுள்ளனர்

தங்களது தேவைகளுக்கு கூட பிறர்களிடம் கையேந்தாமல்  சுயமரியாதை பேணும் நபர்கள் எல்லாம் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெரு தெருவாக பிச்சை எடுப்பதை போல் களமிறங்கி வசூல் செய்து தரமான உணவு பொருள் மற்றும் வீட்டுக்கு தேவையான  பொருள்களை டன்கணக்கில் அனுப்பி வைத்து கொண்டுள்ளனர்

இந்த தியாகங்களை கூட மூடி மறைக்கும் விதமாக ஊடகங்கள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன

தலைப்பு செய்திகளில் சொல்ல வேண்டிய முஸ்லிம் சமூகத்தின் தியாக தகவல்களை விரைவு செய்திகளில் கூட சொல்வதற்க்கு மனம் இல்லாத கொடூர குணமுடையவர்களாக மதவெறி பிடித்த கயவர்களாக ஒன்றிணைந்து  செயல்பட்டு வருகின்றனர்

இந்த மோசமான குணத்தை அவர்கள் மாற்றுகிறார்களோ இல்லையோ

ஆனால் சமூக சேவைகளை தியாகங்களை ஆற்றுவதில் இருந்து முஸ்லிம் சமூகம் தனது நிலையை மாற்றப்போவது இல்லை

காரணம் மனித நேயத்தின் மணிமகுடமாய் திகழும் இஸ்லாத்தை நெறியாக ஏற்று கொண்டுள்ளவர்களே முஸ்லிம்கள்


عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وَسَّعَ عَلَي مَكْرُوْبٍ كُرْبَةً فِي الدُّنْيَا وَسَّعَ اللهُ عَلَيْهِ كُرْبَةً فِي اْلآخِرَةِ، وَمَنْ سَتَرَ عَوْرَةَ مُسْلِمٍ فِي الدُّنْيَا سَتَرَ اللهُ عَوْرَتَهُ فِي اْلآخِرَةِ، وَاللهُ فِيْ عَوْنِ الْمَرْءِ مَاكَانَ فِيْ عَوْنِ اَخِيْهِ

உலகில் துன்பத்தில் சிக்கியவரின் துன்பத்தை யார் நீக்குகிறாரோ

அவருடைய மறுமையின் துன்பத்தை அல்லாஹுதஆலா நீக்கிவைக்கிறான்

உலகில் ஒருவர் ஒரு இறைநம்பிக்கையாளனின்  குறையை மறைத்தால், மறுமையில் அவருடைய குறையை அல்லாஹுதஆலா மறைத்துவிடுவான்

ஒருவன் தன் சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹுதஆலாவும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்

என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

    நூல்   முஸ்னத்  அஹ்மத்

         நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்