மொபைல் மோகம்

        இளைய சமூகத்தின் லட்சியத்தை
                 அலட்சியமாக்கும்
       
           மொபைல் மோகம்
             !!***************!!

             19-12-18- புதன்
          J . Yaseen iMthadhi
          கட்டுரை எண் 1216
               ***************
                  بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
                 ***********

இன்றைய இளைய சமுதாயம்  தனது லட்சியத்தை  மறந்து

பிற்கால வாழ்கையின் முன்னேற்ற வழிகளின் பக்கம் தனது சிந்தனையை பயன் படுத்தாது இருப்பதற்க்கு மூல காரணமாகவும்  முதல் காரணமாகவும் அமைந்திருப்பது மொபைல் எனும் சாதனமே என்பது உளவியல் ஆய்வு கழகம் அடிக்கடி எச்சரிக்கை செய்து வரும் நிகழ்வாக மாறி விட்டது

கண் விழிக்கும் போதே தனது மொபைலில் யாரெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர் என்று பார்த்த பிறகு தான் தனது  படுக்கையை விட்டு எழுவதாக  தொண்ணூறு சதவிகித இளைய சமூகத்தின் எதார்த்த நிலையை உளவியல் ஆய்வு கழகம்  வெளியிட்டுள்ளது

அந்தளவுக்கு மொபைல் எனும் மோகம் இளைய சமூகத்தின் இதயங்களில் ஈட்டியாய் பாய்ந்து உள்ளது

ஈட்டிமுனை தாக்கினாலும் ஈமானை இழக்க மாட்டோம் என்ற வாசகத்தை மொபைல் எனும் ஈட்டி தாக்கி இளைய சமூகத்தின் ஈமானையே சிதைத்து  விட்டது என்பதை மறுக்க முடியாது

மதுபான போதையில் சிக்கி தவிக்கும் மனிதனை போலே மொபைல் போதையில் இளைய சமுதாயம் தனது நேரத்தையும் உழைக்க வேண்டிய தருணத்தையும் சிந்திக்க மறந்து நொடிபொழுதில்  வீணாக்கி வருகின்றனர்

எதிர்காலத்தில் சுமைகள் கூடும் போது கடந்த காலத்தை  பாழாக்கி விட்டோமே என்று நினைத்து வருந்தும் நிலையை நிச்சயம் இன்றைய இளைய சமூகம் அனுபவித்தே தீரும்

وَالْعَصْرِۙ‏ 
காலத்தின் மீது சத்தியமாக

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏ 

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏ 

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து

மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர
(அவர்கள் நஷ்டத்திலில்லை)

     (அல்குர்ஆன் : 103:1-2-3 )

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்