நன்மைகளையே சிந்திப்பீர்
நன்மைகளையே சிந்திப்பீர்
****************
18-12-18- செவ்வாய்
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1215
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
நன்மையான காரியங்களை அதிகம் தூண்டுவதின் மூலமே தீமையான காரியங்களில் ஈடுபடும் நபர்களின் மனோநிலையை மாற்றிட அதிகம் முயற்சிக்க வேண்டும்
அதனால் தான் நன்மையை ஏவுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கும் திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்திலும் தீமைகளை தடுப்பதை இறைவன் இரண்டாம் நிலையில் மட்டுமே கூறி காட்டுகிறான்
இந்த கருத்தை உள்வாங்காது எப்போதும் பிறர்கள் செய்யும் தீமைகளில் மாத்திரம் அதிகமாக கவனம் செலுத்தி அவைகளை கண்டிப்பதையே மார்க்கத்தின் தஃவாவாக பலர்கள் கருதுகின்றனர்
இதன் காரணமாகவே பிறர்கள் செய்யும் தீமைகளை மட்டும் துருவி துருவி ஆய்வு செய்யும் நபர்களாகவே இவர்களை சாத்தான் மாற்றி விடுகிறான்
இவர் என்ன செய்கிறார் ?
அவர் என்ன செய்கிறார் ?
இந்த இயக்கம் என்ன செய்தது ? அந்த இயக்கம் என்ன செய்தது ?
என்று கேள்விகளை அறிக்கையாக எழுப்பும் பலர்கள் அவர்கள் செய்யும் நன்மைகளில் சமூக சேவைகளில் கால் பகுதிகளை கூட தங்கள் வாழ்வில் கடை பிடிக்கிறோமா ? என்று ஐந்து நிமிடம் கூட சுய பரிசோதனை செய்வது இல்லை
இந்நிலை தான் இவர்களை பித்னா விரும்பிகளாக சமூகத்தின் பிளவுகளை ரசிப்பவர்களாக மாற்றி விட்டது
இனிமேலாவது இது போன்றோர் சற்று சிந்தனையை மாற்றி அமையுங்கள்
நீங்கள் பிறர்களை துருவுவதை போல் மற்றவர்களும் உங்களை துருவ ஆரம்பித்தால் அதனால் கடுமையான மன உளைச்சல்களை நீங்கள் தான் சந்திக்க நேரிடும்
மனிதன் எனும் முறையில் அனைவருமே பாவங்களுக்கு உட்பட்டவர்கள் தான்
இரு கண்களை கொண்டு நீங்கள் உலகை பார்க்கிறீர்கள்
ஆனால் பல்லாயிரம் கண்கள் உங்களையும் உற்று நோக்கும் என்பதை மறவாதீர்கள்
عَنْ اَنَسٍؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَقِيَ اَبَاذَرٍّ فَقَالَ: يَا اَبَاذَرٍّ! اَلاَ اَدُلُّكَ عَلي خَصْلَتَيْنِ هُمَا اَخَفُّ عَلي الظَّهْرِ وَاَثْقَلُ فِي الْمِيْزَانِ مِنْ غَيْرِهِمَا؟ قَالَ: بَلي يَا رَسُوْلَ اللهِ، قَالَ: عَلَيْكَ بِحُسْنِ الْخُلُقِ وَطُوْلِ الصَّمْتِ وَالَّذِيْ نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا عَمِلَ الْخَلاَئِقُ بِمِثْلِهِمَا
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள் அமல் செய்வதற்கு மிக எளிதானதும் நன்மைகளை எடைபோடும் தராசை, மற்ற செயல்களைவிட பாரமாக்கக் கூடியதுமான இரு பழக்கங்களை அபூதரே! உமக்கு அறிவிக்கட்டுமா?
என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்
யாரஸூலல்லாஹ் அவசியம் அறிவியுங்கள்' என ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
( 1 ) நற்குணத்தையும்
(2) அதிகம் மவுனமாக
இருப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
முஹம்மது (ஸல்) அவர்களின் உயிர் எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எல்லாப் படைப்புகளின் செயல்களிலும், இவ்விரண்டு செயல்களைப் போன்ற நல்ல செயல் வேறில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் பைஹகி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment