நீங்கள் தனலட்சுமி எந்திரம் வாங்கியாச்சா
நீங்கள் தனலட்சுமி எந்திரம்
வாங்கியாச்சா ?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
09-12-18- ஞாயிறு
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1211
***************
தனலட்சுமி தாயத் 1500 மட்டுமே !!
நீங்கள் ஆடர் செய்து இதை வாங்கி அணிந்து கொண்டால் உங்கள் வாழ்வில்
!! வறுமை ஒழியும் !!
!! செல்வம் கொட்டும் !!
பல தொழில் நிறுவனங்களுக்கு முதலாளிகளாக மூன்றே மாதத்தில் நீங்கள் மாறுவீர்கள்
என்ற போலியான அறிவிப்புடன் அது போல் பலர் மாறியதாகவும் சிலரை கொண்டு பேட்டி எடுத்து தொலைகாட்சிகள் அன்றாடம் இது போல் ஏமாற்று பித்தலாட்டங்களுக்கு விளம்பரம் செய்கிறது
படிக்காதவன் முதல் படித்தவன் வரை இந்த எந்திரத்தை காசு கொடுத்து வாங்கி கைகளில் அணியவும் ஆசை படுகின்றனர்
தனலட்சுமி எந்திரத்தை வாங்கி அணிபவர்களுக்கே செல்வம் கொட்டுகிறது என்றால் தனலட்சுமி எந்திரத்தை பல பூஜைகளை செய்து தயாரிக்கும் ஆன்மீகவாதிகளுக்கு அதன் நிறுவனங்களுக்கு எந்தளவு செல்வம் கொட்டி இருக்க வேண்டும் ?
ஆனால் இந்த தனலட்சுமி எந்திரத்தை விளம்பரம் செய்து விற்பனை செய்யும் போலி ஆன்மீகவாதிகள் கூட
இந்த தனலட்சுமி எந்திரத்தை விற்பனை செய்ய ரூபாய் 1500 என்று கட்டணத்தை மூச்சு விடாமல் விளம்பரம் செய்கின்றனர்
ஏன் இந்த தனலட்சுமி எந்திரம் இவர்களுக்கு மட்டும் செல்வத்தை தராதா ? மக்களிடம் கை ஏந்தாத சூழ்நிலையை ஏற்படுத்தி தராதா ?
தனலட்சுமி எந்திரத்தை ரூபாய் 1500 க்கு விற்பனை செய்து தான் இவர்களால் அப்பாவி மக்களின் வறுமையை நீக்க இயலுமோ ?
என்ற சாதாரண பகுத்தறிவு கூட இல்லாது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு அறிவாளிகள் ( ? ) உள்ளனர்
ஏமாறுபவனை தண்டிப்பதோடு உழைப்பே இல்லாது தனலட்சுமி எந்திரத்தால் பணத்தை வாரி எடுக்கலாம் என்று நினைக்கும் பண பேராசை பிடித்தவர்களை தான் முதலில் தண்டிக்க வேண்டும்
பணம் ஒன்றே உலகில் ஒரு மனிதனின் யோக்கியதனத்தை நிரூபிக்கிறது என்பதற்க்கு இதுவும் சரியான சான்று
اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்
நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்
(அல்குர்ஆன் : 29:62)
لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன
தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான்
(தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான்
நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்
(அல்குர்ஆன் : 42:12)
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment