நரகில் தள்ளும் தீய குணம்
நரகில் தள்ளும் தீய குணம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
11-12-18- செவ்வாய்
J . Yaseen iMthadhi
கட்டுரை எண் 1212
***************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
***********
நமக்கு சொந்தம் இல்லாதவன் நம் ஊரை சாராதவன்
நம்மை விட பெயர் எடுத்தவன்
நம்மை விட வசதி பெற்றவன்
நம் கட்டளைக்கு இணங்காதவன்
நம் தவறை சுட்டி காட்டியவன்
நம் பதவிக்கு வேட்டு வைத்தவன்
என்பன போன்ற தீய எண்ணங்கள் தான் ஒரு மனிதனை தீய வழிமுறைகளை பின்பற்றுவதற்க்கு மூலமாக அமைகிறது
இந்த தீய பண்புகளை எப்போது ஒரு மனிதன் தன்னுள் ஏற்படுத்தி கொள்கிறானோ அப்போதே அவனுடைய உள்ளத்தில் பழி கூறும் எண்ணமும் பலி வாங்கும் எண்ணமும் பற்றி கொள்கிறது
கடுகு போல் காணும் தவறை கூட இமயமலை போல் பூதாகரமாக்கி அதை வைத்தே பிறர்களை மட்டப்படுத்த துவங்கி விடுவான்
அமர்ந்து பேசி தீர்க்க வேண்டிய விவகாரங்களை கூட காவல்துறை நீதிமன்றங்களை நாடி செல்லும் அளவு தனது வெறுப்புணர்வை வளர்த்தி கொள்வான்
தனது விபரம் அறியாத சந்ததிகளையும் கூட பிறர்களுக்கு ஜென்ம விரோதியாக்கி அதன் மூலமே பல வம்சங்கள் குரோதத்தில் வெட்டி சாவ மூல காரணமாக மாறி விடுவான்
சாத்தானிய செயல்பாடுகள் இவர்களுக்கு இனிமையாகவே தென்பட துவங்குகிறது
இதன் விளைவாக உளவியல் நோய்களுக்கு உள்ளாக்கப்பட்டு பல விதமான வரம்பு மீறல்களை சாதாரணமான காரியமாகவே செய்ய துவங்கி விடுகிறான்
பிறர்கள் கூறும் அறிவுரைகளை கூட தனக்கு எதிரான திட்டங்களாக சிந்திக்க துவங்கி அறிவுரை கூறுவோர்களையும் தனது எதிரிகளாக்கி அவர்களிடம் இருக்கும் நட்பை கூட முறித்து கொள்ள முற்படுவான்
இறுதியில் இது போன்ற மனிதன் மறுமை நாளில் அவன் உலக வாழ்வில் சேகரித்த சில அர்ப்பமான நன்மைகளை கூட முற்றிலும் இழந்து
நரகத்தை அடையும் நிலைக்கே தள்ளப்படுவான்
காரணம் இஸ்லாத்தில் இணைவைத்தல் என்ற பாவமும் மனிதன் விசயத்தில் வரம்பு மீறும் பாவமும் இறைவனிடத்தில் கொடூரமான பாவமாகும்
மார்க்க சட்டங்களை பேணாத மனிதனை கூட விரும்பினால் மன்னிக்க தயாராக இருக்கும் இறைவன்
பிற மனிதனின் விசயத்தில் வரம்பு மீறும் எந்த செய்கைகளையும் மன்னிக்க தயாராகுவது இல்லை
அதனால் தான் பிறர் மானமும் உடமையும் கூட ஒரு முஸ்லிமுக்கு ஹராம் என்று நபியவர்கள் இறுதி பேருரையில் அழுத்தமாக போதனை செய்தார்கள்
عَنْ جَابِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: تُعْرَضُ اْلاَعْمَالُ يَوْمَ اْلاِثْنَيْنِ وَالْخَمِيْسِ، فَمِنْ مُسْتَغْفِرٍ فَيُغْفَرُ لَهُ، وَمِنْ تَائِبٍ فَيُتَابُ عَلَيْهِ، وَيُرَدُّ اَهْلُ الضَّغَائِنِ بِضَغَائِنِهِمْ حَتَّي يَتُوْبُوْا
அல்லாஹுதஆலாவின் சமுகத்தில் ஒவ்வொரு திங்களன்றும், வியாழனன்றும் அடியார்களுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன மன்னிப்பு வேண்டுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் தௌபா செய்பவர்களுக்கு பாவ மீட்சி அளிக்கப்படும்
(ஆனால்) பகைமை கொண்டவர்களை, அவர்களுடைய பகைமையின் காரணத்தால் ( மன்னிக்காமல்) விட்டுவைக்கப்படும் அவர்கள் (பகைமையிலிருந்து விலகி தவ்பாச் செய்யும் வரை) அவர்களுடைய இஸ்திஃபார் (பாவ மன்னிப்பு) ஒப்புக் கொள்ளப்படுவதில்லை
என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் தப்ரானி
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்
ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்
அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்
உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!)
அதனை நீங்கள் வெறுப்பீர்கள்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்
மிக்க கிருபை செய்பவன்
(அல்குர்ஆன் : 49:12)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment