பாபர் மஸ்ஜிதை கட்டியது யார்

  பாபர் மஸ்ஜித் யார் கட்டியது
        
   ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1205

        01 -12-18  சனி கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                           بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது  யாரால்  ?  என்ற கேள்விக்கு அநேகமானவர்கள் அறிந்து வைத்திருக்கும் விடை
பாபர் மஸ்ஜிதை கட்டியவர் முகலாய மன்னர் பாபர் என்பதே ஆகும்

முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பதற்க்கு இதை விட ஆதாரம் தேவை இல்லை

பாபர் மஸ்ஜித் உருவானதற்க்கும் முகலாய மன்னர் சாஹிருத்தீன் பாபருக்கும் எந்த விதமான நேரடி  சம்மந்தமும் இல்லை

முகலாய மன்னர் சாஹிருத்தீன் பாபர் வாழ்ந்த காலத்தில் பாபர் மஸ்ஜித் முழுமையாக கட்டப்படவும் இல்லை

கி.பி.1528 ஆண்டில் முகலாய மன்னர்  பாபர் அவர்களின் போர் படை தலைவர் மிர்பக்கி என்பவரால் தான் பாபர் மஸ்ஜித் பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது

அவ்வாறு கட்டப்பட்ட பின் மிர்பக்கி என்ற சாஹிருத்தீன் பாபரின் போர் படை தளபதி தனது மன்னர் சாஹிருத்தீன்  பாபரை கண்ணியம் செய்யும் விதமாக அவருடைய பெயரையே கட்டி முடிக்கப்பட்ட  பள்ளிவாசலுக்கு பெயராக சூட்டுகின்றார்

இது தான் உண்மையான வரலாறு

இந்தியாவில் இன்றும்  கூட முஹ்யத்தின் மஸ்ஜித் என்ற பெயரில் பல பள்ளிவாசல்கள் இருக்கின்றது

அதாவது முஹ்யத்தீன் என்ற மகானின் நினைவாக பள்ளிவாசல் கட்டியவர்களால்  சூட்டப்பட்ட பெயர் முஹ்யத்தீன் மஸ்ஜித்களே தவிர முஹ்யத்தீன் என்ற மகானுக்கும் அவர் பெயரில் இயங்கும் தற்போதைய  பள்ளி வாசல்களுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை

மேலும் ஒருவர் ஒரு இடத்தில் பிறந்தார்  என்பதற்காக அவர் பிறந்த இடம்  அவருக்கே  சொந்தமாகி விடும் என்பது அறிவீனர்களின் வாதமாகும்

அதை நியாய படுத்த துவங்கினால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறந்த இடத்தை சொந்தம் கொண்டாட அனுமதிக்க வேண்டும்

இது எல்லாவற்றிக்கும் மேல் ராமர் என்பவர் ஒரு கற்பனை பாத்திரமே தவிர

உண்மையில் அவ்வாறு ஒருவர் பிறந்தார் என்பதற்கோ அல்லது வாழ்ந்தார் என்பதற்கோ எந்த விதமான அரசாங்க சான்றுகளும் பர்த் சர்ட்
பிகேட்களும் இல்லை

கடவுளின் பெயரால் சமூகத்தை பிளந்து அரசியல் இலாபம் பெற துடிக்கும் கயவர்களின் சூழ்சியே இந்த நாடகம்

அதனால் தான் பீஜேபி ஆட்சியில் இருக்கும் போது ராமரை பற்றி பேசாது  மவுனம் சாதித்து விட்டு
அவர்களின்  ஆட்சி நிறைவடையும் தருவாயில் மதத்தை மூலமாக வைத்து சிலர்களை தூண்டி அயோத்திக்கு அனுப்பி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய பார்க்கின்றனர்

இந்து அன்பர்களிடம் இருக்கும் தெய்வபக்தியில் கால் பகுதி கூட இந்துத்துவம் பேசும்  இவர்களிடம் இல்லை என்பதை மாற்றார்கள் புரிந்து கொள்ள வேண்டும்

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌  وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌  وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ  اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏ 

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்

எங்களுடைய இறைவன் ஒருவன்தான் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை)

மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்

அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்

நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும் (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 22:40)

       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்