JAQH பீஜேவை விவாதத்திற்க்கு அழைத்தார்களா
JAQH பீ .ஜைனுல் ஆப்தீனை
விவாதம் செய்ய அழைத்தார்களா ? அரவணைக்க
!! அழைத்தார்களா !!
||===================||
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1197
03-11-18 சனி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
சென்னையில் நடை பெற்ற ஜாக் அமைப்பு சார்பாக நடந்த மார்க்க கூட்டத்தில் பீஜே ( உலவி) அவர்களுக்கு விவாத அழைப்பு தரப்பட்டதால் தான்
பீஜே (உலவி) அவர்கள் JAQH அமைப்பை விவாத அழைப்புக்கு தேதி குறிப்பிட்டு பதில் தந்தார் என்றே பீஜேவாலும் அவரை சார்ந்த சிலர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது
உண்மையில் ஜாக் அமைப்பு அவ்வாறு விவாத அழைப்பு தந்த பின் பீஜே (உலவி)அவர்களின் பதிலுக்கு பின் வாங்கினால் அது விமர்சனத்திற்க்கு உரியதே என்பதில் நமக்கு மாற்று கருத்துக்கு இடம் இல்லை
ஆனால் ஜாக் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட சென்னை மார்க்க விளக்க கூட்டத்தில் பேசப்பட்ட உரைகளில் பீஜே ( உலவியை) எவரும் விவாதத்திற்க்கு அழைக்கவில்லை என்பதை தற்போது தான் நாமே கேட்டு தெரிந்தோம்
பீஜே ( உலவி) அவர்களின் தற்போதைய மார்க்க நிலை தவறானது என்றும் அந்நிலையை கைவிட்டு துவக்க காலங்களில் இருந்ததை போல் கொள்கையில் பயணிக்கலாம் என்று தான் மேடையில் பேசிய பேச்சாளர்கள் அழைப்பு கொடுத்துள்ளார்
காரணம் JAQH எனும் தாயக அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர் தான் பீஜே ( உலவி ) என்பதை அவர் மறந்தாலும் JAQH அதை மறக்காது மறக்கடிக்கவும் முடியாது
தற்போதைய சூழலில் பீஜே (உலவி) அவர்களை எந்த ஒரு இயக்கமும் குறிப்பாக அவர் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத் கூட அவரை கைவிட்ட சூழலில் அவரை பரம எதிரி போல் விமர்சித்து வரும் சூழலில் அவரையும் அரவணைக்க நாகரீகமாக கண்ணியமாக அன்பான அழைப்பு கொடுத்ததும் JAQH எனும் தாயக அமைப்பு தான் என்பதை அவர் ஏனோ சிந்திக்க மறந்து விட்டார்
விவாதம் செய்தே பழக்கப்பட்ட பீஜே ( உலவி) அவர்கள் JAQH அமைப்பின் அழைப்பையும் விவாத பார்வையில் பார்த்தது தான் தற்போதைய விவகாரங்களுக்கு மூல காரணம்
பீஜே (உலவி ) JAQH அமைப்பில் இருந்து விலகி சென்றதில் இருந்தே விவாதங்களில் JAQH பங்கு கொள்வதில்லை அதன் வழிமுறைகளையும் விரும்பி ஏற்பது இல்லை என்று நன்றாக தெரிந்திருந்தும் பீஜே( உலவி) அவர்கள் அன்பான அழைப்புகளையும் விவாதம் போன்று சித்தரிப்பது புரியாமை பார்வையாகும்
இஸ்லாத்தில் விவாதங்கள் கூடாது என்பது JAQH அமைப்பின் பார்வை அல்ல
மாறாக விவாதங்கள் தற்காலத்தில் அந்தளவு உபயோகம் தருவது இல்லை என்ற நிலைபாடு தான் காரணம்
பீஜே ( உலவி)யின் துவக்க கால விவாத நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை அஸ்திவாரமே JAQH தான் என்பதற்க்கு இரண்டாம் முறையாக பீஜே( உலவி) அவர்கள் வெளியிட்ட ஜாக்கின் சந்தர்ப்பவாதம் என்ற அவரின் விளக்க பதிவிலும் சான்றுகள் உள்ளது
இனி இது போன்றவைகளை பற்றி விவாதித்து கொண்டிருக்காமல் இரு தரப்பினர்களும் தங்களால் இயன்ற பணிகளை தஃவாக்களை செய்யுங்கள் அதுவே நம் மறுமை வாழ்வுக்கு பயன் தரக்கூடிய விசயமாகும்
الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدٰٮهُمُ اللّٰهُ وَاُولٰٓٮِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ
அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்
அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்
(அல்குர்ஆன் : 39:18)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment