கருத்து வேறுபாடுகளை சாதகமாக்கும் சந்தர்ப்பவாதிகள்

     கருத்து வேறுபாடுகளில்

குளிர் காயும் சந்தர்ப்பவாதிகள்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1196

     03-11-18   சனி கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************

                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

கருத்து வேறுபாடுகளே இல்லாது பயணிக்க வேண்டுமானால் இறைவனால் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் சிந்தனை திறன் ஒரே அமைப்பில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்

அல்லது அனைவரும் குர்ஆன் ஹதீசை மட்டும் ஏற்று கொண்டால் மட்டுமே இயலும் ஆனால் அதுவும் சாத்தியம் இல்லை என்றே இஸ்லாம் சொல்கிறது  அதனால் தான் 73 கூட்டத்தார் உருவாகுவார்கள் என்று நபிகளாரின் முன்னறிவிப்பு உள்ளது

இந்நிலையில் கருத்து வேறுபாடுகளை சிந்தனைக்கு உரமாக பயன்படுத்த வேண்டுமே தவிர

கருத்து வேறுபாடுகளை வைத்து ஒருவர் ஒருவர் தூற்றவும் போற்றவும் பயன்படுத்த கூடாது

சமீப காலமாக கருத்து வேறுபாடுகளை காரணமாக வைத்து சாத்தான் முஸ்லிம் சமூகத்தின் மீது பாய் போட்டு சவாரி செய்கிறான் என்றே புரிய முடிகிறது

குறிப்பாக ஏகத்துவ பிரச்சாரத்தை  பல காலம் எதிர் கொள்ள இயலாதவர்கள் இந்த வாய்ப்பை  பயன் படுத்தி குளிர் காய்கிறார்கள் என்பது தான் அதிகமாக தென்படுகிறது

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கீழ்த்தரமான செய்கைகள் பலர்களிடம் வெளிப்படுகிறது

24 மணி நேரமும் தங்கள் முகநூல்களை பிறர்களை அநாகரீகமாக மார்க் வரம்பை மீறி  விமர்சிக்கும் தளமாகவே பலர்கள் வைத்துள்ளனர்

இதில் இருந்து விடுபட்டுள்ள நபர்கள் மிகவும் அரிதாகவே தென்படுகின்றனர்

இந்நிலை தொடருமானால் நரகத்தின் கொள்ளி கட்டைகள் நாம் தான் என்பதை மறந்து விட வேண்டாம்

ஆயிரத்தில் ஒருவர் தான் சுவனம் செல்வார் என்பதே நபிமொழி

அந்த ஒருவரில் நாம் இருப்போமா என்பதை சிந்திப்பதை தவிர்த்து விட்டு நரகத்திற்க்கு செல்லும் 999 நபர்கள் யார் என்பது நமக்கு அவசியமில்லாத ஆராய்சியாகும்

يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌  وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏ 
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்

அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்

மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை

     (அல்குர்ஆன் : 4:120)

                **************

3348. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

       ( ஹதீஸ் சுருக்கம்)

அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி

ஆதமே என்பான்

அதற்கு அவர்கள் இதோ வந்துவிட்டேன் கட்டளையிடு காத்திருக்கிறேன் நலம் அனைத்தும் உன் கரங்களில் தான் என்று கூறுவார்கள்

அப்போது அல்லாஹ் நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான்

ஆதம்(அலை) அவர்கள், எத்தனை நரகவாசிகளை ? என்று கேட்பார்கள்

அதற்கு அவன் ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்தி தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்) என்று பதிலளிப்பான்

என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள்  அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி

      நட்புடன்  J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்