வானிலை அறிக்கை
வானிலை அறிவிப்புகளின்
எதார்தத்தை உணருவீர்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1201
16 -11-18 வெள்ளி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அய்யோ நேற்று வரை கஜா புயலுக்கு வக்காலத்து வாங்கி பூதாகரமாக அறிவிப்பு செய்து விளம்பரம் செய்தோமே
ஆனால் கஜா புயல் நாம் எதிர் பார்த்தளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது நம் எதிர்பார்பை நிறைவேற்றாது போய் விட்டதே
இனி நான் எந்த முகத்தில் மக்கள் மன்றத்தில் போய் முழிப்பேன் என்று சிலர்களுக்கு உளவியல் ரீதியான அவமானம்
கஜாவெல்லாம் சும்மா
அதனால் பலமான காற்றும் கூட அடிக்க போவது இல்லை என்று அறிக்கைகளை போட்டு மக்களின் எண்ணங்களை திசை திருப்ப சப்பை கட்டு கட்டினோமே ஆனால் இப்போது கஜா புயல் மூலம் லேசான காற்றும் மழையும் ஏற்பட்டு தானே இருக்கின்றது
இனி எந்த முகத்தில் நான் மக்கள் மன்றத்துல முழிப்பது என்றும் சிலர்களுக்கு உளவியல் ரீதியான அவமானம்
சுருக்கமாக சொன்னால் கஜா புயலின் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும்
கஜா புயலின் மூலம் அறவே பாதிப்புகள் ஏற்பட்டு விட கூடாது என்று ஒரு சாராரும் சமூகவலை தளங்களில் அழுது புலம்பியே அறிக்கை போட்டனர்
ஆனால் இவையாவும் இறைவனின் தீர்மானித்தில் தான் நடை பெறும் என்ற ஆழமான ஈமானிய நம்பிக்கை இரு சாராரிடமும் குறைந்திருப்பதே இது போல் புலம்பல் அறிக்கைகளுக்கு மூல காரணம்
இனி இது போல் வானிலை அறிக்கைகளை எல்லாம் பூதாகரமாக்காது அமைதியாக இருந்தால் போதுமானது
கியாமத் நாள் நெருங்கி விட்டது போல் நினைத்து கொண்டு ஆபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று சில இயக்கங்களின் சார்பாக விளம்பரங்கள் ஒரு புறம்
பள்ளிகளுக்கு விடுமுறை வேலைக்கு சென்றிருப்போர் மாலை மூன்று மணிக்கே வீடு திரும்புங்கள் என்று அரசாங்கத்தின் சார்பாக உளவியல் பயமுறுத்தல் ஒரு புறம்
ஆனால் இந்த அறிவிப்பை எதார்த்தமாக எடுத்து கொண்ட எவரும் இதில் தடுமாறவில்லை நிலை குலைந்து போகவுமில்லை என்பது தான் உண்மை
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது
அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை
தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான்
அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்
(அல்குர்ஆன் : 10:107)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment