அறிவிப்புகளை பூதாகரமாக்காதீர்

    அறிவிப்புகளை பூதாகரமாக

               சித்தரிக்காதீர்

  ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1200

     145-11-18  வியாழன் கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

எந்த ஒரு இயற்கை சீற்றமும் மனிதனிடம் நான் வரப்போகிறேன் என்று முன்னறிவிப்பு செய்து விட்டு ஏற்படுவது இல்லை

சாத்தியமான சில அறிகுறிகளை வைத்து சில விசயங்களை மனிதன்  உருவாக்கிய  கருவியின் மூலம்  முன்னறிப்பு செய்ய முடியுமே தவிர

மனிதன் அறிவித்த பல விதமான சீற்றங்களின் முன்னறிவிப்புகள் இறைவனால் பொய்யாக்கப்பட்டே வந்துள்ளது

சுனாமி முன்னெச்சரிக்கை விடபட்ட பல நேரங்களில் அவைகள் சில தினங்களில் வாபஸ் பெறப்பட்டதும் நடக்காமல் போனதும் தான் பரவலாக காண முடிகிறது

எந்தளவுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பும் அறிவியல் நிபுணர்களின் கணிப்பும் பூதாகரமாக்கப்படுகிறதோ
அந்த அளவுக்கு மக்களின் எதிர் பார்ப்பும் அதிகமாகவே இருக்கும்

அந்த எதிர் பார்ப்புகள் தொடர்ந்து பொய்யாகிற போது அதை தொடர்ந்து கூறப்படும் வேறு சில  அறிவிப்புகளும் மக்களின் உள்ளத்தில் வலு இழந்தே காணப்படும்

அதன் வெளிப்பாடுகள் தான் மீம்சுகளின் தாக்கம்

அரசாங்கமும் அறிவிப்பு செய்வோரும் ஒன்றின் தாக்கம் எந்தளவுக்கு அமையுமோ அந்தளவுக்கு மக்களிடம் அதை கொண்டு சென்றால் போதுமானது

மக்களும் அந்த அறிவுப்புகளை அந்தளவுக்கு ஏற்று கொண்டால் போதுமானது

முன்னேற்பாடுகளை செய்வதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து விட்டு 

மழையை பேய் மழை என்று இல்லாத ஒன்றை கூறி  பூதாகரமாக சித்தரிப்பதும்

புயலுக்கு அரக்கனை போன்று  பூதாகரமாக பெயர்களை சூட்டுவதும் தேவையற்ற அச்ச உணர்வையே அதிகரிக்கும்

இறைவனின் நாட்டம் அமையாது எந்த ஒரு இழப்பும் மனித சமுதாயத்திற்க்கு ஏற்பட போவது இல்லை

وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌  وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْبِطُوْنَهٗ مِنْهُمْ‌ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏ 

மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்

அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால்

அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள்

அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்

      (அல்குர்ஆன் : 4:83)

        நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்