கேள்விகளின் திசையை மாற்றுவீர்

     கேள்விகளின் திசையை

           திசை திருப்புவோம்

   ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1199

     14-11-18  புதன் கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

நீ அதை செய்கிறாயா ?
நீ இதை செய்கிறாயா  ?

அவர்கள் ஏன் அதை செய்யவில்லை  ?

அவர்கள் ஏன் இதை செய்தார்கள்  ?

ஏன் இப்படி செய்தால் என்ன ?

ஏன் அப்படி செய்திருக்க கூடாது ?

என்பன போன்ற கேள்விகளில் மாத்திரம் எப்போது ஒரு மனிதனின் சிந்தனை செயல் படுகிறதோ

அன்று முதல் அவன் செய்ய வேண்டிய கடமைகளில் மற்ற  பணிகளில் இருந்து பலவீனப்பட்டு விடுகிறான்

தனது முன்னேற்றத்திற்க்கு பயன்படுத்த  வேண்டிய அவனது  சிந்தனையை பிறர்களின் செயல் முறையை ஆய்வு செய்வதற்கே பயன் படுத்த துவங்கி விடுகிறான்

இந்த செயல்பாடுகள் தான் அந்த  மனிதனை நன்மையின் பக்கம் இழுத்து செல்லாமல் தீமைகளின் பக்கமும் பயனற்ற விவாதங்களின் பக்கமும் திசை திருப்பி அவனது மறுமை வாழ்வை நாசமாக்க காரணமாக அமைந்து விடுகிறது

மேற் கூறப்பட்ட கேள்விகளை ஒரு மனிதன் தன்னை நோக்கியும் தன் குடும்பத்தாரை நோக்கியும் எப்போது எழுப்ப துவங்குகிறானோ அப்போது தான் அவன் நன்மைகளின் பக்கமும் பயனுள்ள செய்கைகளின் பக்கமும் கவனம் செலுத்த துவங்குகிறான்

இதன் மூலம் தன்னிடம் உள்ள ஈமானிய பலவீனங்களை சீர் செய்ய முற்படுகிறான்

சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதனின் எண்ணத்தில் உதிக்கும் கேள்விகளை பிறர்களின் திசை நோக்கி கேட்காமல் தனது திசை நோக்கி திருப்புகின்ற பொழுது தான் அவனது வாழ்கை தரம் மேம்படுகிறது

மறுமை வாழ்கைக்கு தேவையான விடயங்களில் அவனை  ஈடுபட வைக்கிறது

இதை தான் இஸ்லாம் சுயபரிசோதனை என்று சொல்கிறது

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே
நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்

       (அல்குர்ஆன் : 61:2)

كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏ 

நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது

       (அல்குர்ஆன் : 61:3)

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‌ ‌ ‏ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள் நிராகரிப்பவர்கள் தாம் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

       (அல்குர்ஆன் : 8:55)

       நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்