சினிமா மோகமும் அரசியல் கோமாளிகளும்
சினிமா மோகமும்
அரசியல் கோமாளிகளும்
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1198
11-11-18 ஞாயிறு கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அறிவுப்பூர்வமான அரசியல் கருத்துக்களை மேடைகளில் வீரியத்தோடு பேசி குடி மக்களின் உள்ளத்தை கவருவதை விட அர்ப்பமான ஒரு செய்தியை அல்லது கருத்தை
சினிமாவின் மூலம் வெளிப்படுத்தி மக்களின் உள்ளத்தை எளிதாக கவர இயலும்
காரணம் சினிமாவில் காட்டப்படும் எந்த ஒரு விவகாரங்களுக்கும் அதில் நடிக்கும் கதாநாயகன் மூலம் மூன்றே மணி நேரங்களில் பல சாதனைகளை தியாகங்களை செய்வது போல் காட்டி கதாநாயகன் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டி விட்டதாகவே சினிமாவின் மூலம் அதன் இறுதி காட்சியில் சித்தரிக்கப்படும்
சினிமா தியேட்டர்களில் இருட்டறையில் சினிமா ரசிகர்களின் கண்களும் சிந்தனையும் ஒளிபரப்பப்படும் சினிமா திரையை நோக்கியே இருப்பதால் சிந்தனையாளர்கள் சாதனையாளர்கள் புரட்சியாளர்கள் தியாகிகள் சாதித்து காட்டும் உண்மைகளை விட சினிமாவில் கதாநாயகன் சாதித்து விட்டதாகவே மன ரீதியான பிரம்மையில் சினிமா அடிமைகள் கற்பனையில் மிதக்க துவங்குகிறார்கள்
ஒரு நாள் முதல்வர்
எனும் கதாபாத்திரத்தில் மூன்று மணிநேர சினிமா காட்சியில் தமிழ்நாட்டை புரட்டி போட்ட சினிமா நடிகனின் திறமை கூட எதார்த்த வாழ்வில் பல வருடமாக ஆட்சி செய்யும் நம் நாட்டு முதல்வர்களுக்கு அந்த தகுதி இல்லை என்று நினைக்க துவங்குகிறான்
இதன் விளைவே கோடான கோடி சுகபோக வாழ்வில் நிம்மதியாக வாழ்நாளை கழிக்கும் சினிமா நடிகர்களுக்கு அன்றாடம் 500 கூட சம்பாரிக்க வழியில்லாதவன் அவனுடைய உழைப்பில் ஈட்டிய தொகையில் சினிமா நடிகனுக்கு கட்டவுட் எழுப்பி கோமாளிகளை பால் அபிஷேகம் செய்கிறான்
சிந்திக்க தெரியாத சிறுவன் சிறுமி முதல் பல்லு போன கிழவன் கிழவி வரை சினிமா மோகத்தில் சுற்றி திரியும் நம் நாட்டு குடி மக்கள் இருக்கும் வரை எந்த விதமான மாற்றமும் எற்பட போவது இல்லை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை
சுருக்கமாக சொன்னால் இவர்களே நம் நாட்டு அரசியல் கோமாளிகள்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment