காலை கடன் கற்று தரும் பாடம்

   காலை கடன் கற்று தரும்
          இயற்கை பாடம்

       []××××××××××××××××[]

ஆக்கம் -- J.யாஸீன் (இம்தாதி)
   வெளியீடு  10-11-17- சனி

                        بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ                
      ★-★-★-★-★-★-★-★-★-★

எந்த ஒரு மனிதனும் இயற்கை அமைப்புக்கு மாற்றமாக நடக்கவே இயலாது என்பதை அனுபவ ரீதியாக இறைவன் மனிதன் மூலம் வெளிப்படுத்தும் ஒன்றே காலை கடன்

ஆத்திரத்தை அடக்கும் மனிதனுக்கு அவன் உடலில் உருவாகும் மூத்திரத்தை அடக்க இயலாது என்ற பழமொழியும் இதை தான் சுட்டி காட்டுகிறது

ஒரு ஆணோ பெண்ணோ தன்னை பக்தியாளராக வெளிப்படுத்தி காட்டி கொண்டாலும் கட்டுப்பாடு மிகுந்தவர்களாக தங்களை காட்டி கொண்டாலும் அவர்களிடமும் இனகவர்ச்சி எனும் இயற்கை தேடல்கள் நிச்சயம்  இருந்தே தீரும் என்பதே உண்மை

நான் ஒரு அந்நிய பெண்ணை தங்கையாக மட்டுமே பார்ப்பேன்

நான் ஒரு அந்நிய ஆடவனை அண்ணணாக மட்டுமே பார்ப்பேன்

என்று பகல் வேஷம் போடும் அனைவரும் இந்த இயல்புக்கு முரணாகவே வாதிக்கிறார்கள் என்பது தான் முற்றிலும் உண்மை

இதனால் தான் கற்பழிப்புகள் ஏமாற்றங்கள் படுகொலைகள் அதிகமாக நடந்து வருகிறது

இயற்கை பலவீனங்களை படைத்த இறைவன் அந்த பலவீனங்களை எதிர் கொள்ள அதற்கான இயற்கை வழிமுறைகளையும் சுலபமாக எளிமையாக உருவாக்கியே தந்துள்ளான்

அவ்வழிகளை நாமும் புரிந்து இளைய சமூகத்திற்க்கும் புரிய வைக்க முயற்சிப்போம்

திட்டமிட்டு தவறுகளை செய்யும் மனிதனை விட இயல்புக்கு மாற்றமான நடைமுறைகளை உண்மை என்று நினைத்து தவறுகளில் சிக்கி தவிக்கும் மனிதனே மிகவும் அதிகம்

இதில் ஆணும் விலக்கு இல்லை பெண்ணும் விலக்கு இல்லை

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்