நாசமாக்கப்படும் வரிப்பணங்கள்
நாசமாக்கப்படும் நாட்டு
!! மக்களின் வரிப்பணங்கள் !!
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1195
01-11-18
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
(Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும்
குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட வாழ்வில் பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள்
கிராமங்களில் வாழும் ஒருவரின் சராசரி ஒரு நாள் வருமானம்
14 . 3 ரூபாய்
நகரங்களில் 21. 6 ரூபாய்
அந்த வகையில் HDI கணக்கின் படி இந்தியாவில் 75. 6 சதவிகிதம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது
இந்நிலையில் குடிமக்களிடம் இருந்து பல வகைகளில் பெறப்படும் கோடான கோடி வரிப்பணங்கள் குடி மக்களுக்கு எவ்வகையிலும் பயன் தராத அரசியல்வாதிகளின் சிலைகளுக்கும் சமாதிகளுக்கும் மணிமண்டபங்கள் எழுப்ப படுவதற்க்கு தான் வீண் விரயம் ஆக்கப்படுகிறது
அரசாங்க கணக்கின் படி ஒரு மனிதன் 5 இலட்ச ரூபாயில் அவன் குடும்பம் தங்குவதற்க்கு சிறிய அளவு வீடு எழுப்ப முடியும் என்று வழிகாட்டுதல் உள்ளது
அந்த வகையில் சமீபத்தில் எழுப்பப்பட்டுள்ள படேல் சிலைக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவழித்த தொகை 3000 கோடி ரூபாய் ஆகும்
இனி இதை தொடர்ந்து அதை பராமரிக்கவும் வருடா வருடம் புதுப்பிக்கவும் பல கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தொடர்ந்து செலவு செய்யப்பட்டு வரும்
இதனால் இந்திய குடிமக்களின் ஒருவருக்கு ஒரு நேரமாவது பசி ஆறுமா ? அல்லது அவர்களின் தாகம் தீருமா என்றால் நிச்சயமாக இல்லை
அந்த 3000 கோடி ரூபாயில் ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் குறைந்த செலவில் குறுகிய இடத்தில் ஒரு குடும்பத்திற்க்கு வீட்டை கட்டி கொடுத்து இருந்தால்
3000 கோடியில் 5 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60.000 வீடுகளை வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 60.000 குடும்பத்திற்க்கு தாராளமாக இலவசமாகவே கட்டி கொடுத்து இருக்கலாம்
அவ்வாறு கட்டி கொடுத்திருந்தால் நம் நாட்டில் எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபங்கள் சமாதிகள் சிலைகளின் தொகையை வைத்தே பல இலச வீடுகளை வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாகவே கட்டி கொடுத்து இருக்கலாம்
இது போன்ற சிந்தனை இல்லாதவர்கள் அல்லது அதன் மூலமும் கொள்ளை அடிப்பதை வழக்கமாக்கி கொண்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை நம் நாட்டின் முன்னேற்றம் என்பது புதை குழியை நோக்கியே இருக்கும்
இது போல் வரிப்பணங்களை வெட்டி செலவுகள் செய்யும் அரசியல்வாதிகளை குடி மக்கள் தான் எதிர் வருகின்ற தேர்தல்களிலே வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment