பீஜே விவாத அழைப்பு
பீஜே( உலவி ) யின்
விவாத அழைப்பும்
!! JAQH சிந்திக்க வேண்டிய !!
ஆலோசனையும்
♦♦♦♦♦♦♦♦♦♦
01-11-18
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இஸ்லாத்தில் விவாதங்களுக்கு அனுமதி இருந்தாலும் சீரிய சொற்பொழிவுகள் கருத்தரங்கு நிகழ்வுகள் தனிமனித சந்திப்புகள் தஃவாக்கள் தரும் பலன்களை
விவாத நிகழ்வுகள் அந்தளவுக்கு பலன் தந்தது இல்லை என்பதே நடை முறை உண்மையாகும்
பட்டிமன்றங்களை போல் இரு தரப்பினர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை மட்டும் எடுத்து சொல்லி
அல்லது குற்றச்சாட்டுகளை எடுத்து சொல்லி
கலைந்து செல்வது தான் நடைமுறையில் உள்ளது
பேச்சு கலையில் தந்திரம் பெற்றவர்கள் தான் இது போன்ற நிகழ்வுகளில் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதை போல் ஒரு பிரம்மையை வழக்கமாகவே உருவாக்கி சென்றுள்ளனர்
மேடைகளில் பேசும் நபர்கள் கருத்துக்களை ஆதாரங்களோடு மக்களுக்கு எத்தி வைத்தால் போதுமானது
எதற்கெடுத்தாலும் விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பது முபாஹலாவுக்கு அழைப்பு விடுப்பது நடை முறை நிகழ்வுகளை காணும் போது தேவையற்றதாகவே தோணுகிறது
தற்போது பீஜே ( உலவி) என்பவர் அவர் மீது சொல்லப்படும் ஒழுக்க குற்றச்சாட்டுகளுக்கு அது நான் அல்ல என்று மட்டும் மறுப்பு சொல்லும் சூழலில் முதலில் அந்த விவகாரத்தை முறையாக சட்டப்பூர்வமாக அல்லது யாரை வைத்து இவர் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதோ அந்த குடும்பத்தார்களோடு அல்லது ஆபாச ஆடியோ வெளியீடு செய்தவர்களோடு அதை வீரியத்தோடு எதிர் கொள்ளட்டும்
காரணம் இது தான் தற்போது அவருடைய முக்கிய கடமையாக உள்ளது அவருடைய கண்ணியம் சார்ந்த விசயமாகவும் உள்ளது
மார்க்கம் பேசுவதற்க்கு அவர் தகுதியற்றவர் என்று அவர் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தே அவரோடு விவாதிப்பதை தவிர்க்கும் சூழலில்
அவருக்கு மார்க்கம் சொல்லும் தகுதி உண்டு விவாதிக்கும் தகுதியும் உண்டு என்பதை பறை சாற்றும் விதமாக JAQH அமைப்பு அவருடைய விவாத அழைப்பை ஏற்பது அவசியமற்றது
சஹாபாக்களின் தியாகங்களை கூறி மக்களுக்கு ஈமானிய உணர்வு ஊட்டுவதற்க்கு முக்கியதுவம் தருவதை தவிர்த்து விட்டு
சஹாபாக்கள் தப்பு செய்தார்களா இல்லையா ?
மார்க்க வரம்பை மீறி சஹாபாக்கள் செயல் பட்டார்களா இல்லையா ?
மார்க்கத்தை அறியாது மார்க்க சட்டங்களை மார்க்கத்திற்க்கு மாற்றமாக சஹாபாக்கள் சொன்னார்களா இல்லையா ?
என்று பீஜே ( உலவி) கூறும் தலைப்பில் (1) விவாதிக்க சம்மதம் தெரிவிப்பதே அவசியம் இல்லாத போக்காகும்
காரணம் சஹாபாக்களின் மீது உள்ள கண்ணியம் முஸ்லிம் சமுதாயத்தில் இன்றளவும் இதயத்தில் கடுகளவும் குறையவில்லை
அவ்வாறு குறைந்திருந்தால் அதை விவாதிப்பதில் அர்த்தம் உள்ளது
கருத்து ஒற்றுமை ஏற்பட்டால் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயல்படுவோம் என்ற பீஜே ( உலவியின்) வார்த்தை கூட மக்களை கவரும் சூழ்ச்சி தானே தவிர அதில் உண்மை இருப்பதாக நமக்கு தோணவில்லை
காரணம் அவருடைய கடந்த கால செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு கொண்ட எவரோடும் சுமூகமாக பேசி அவர் ஒன்றிணைந்த வரலாறே இல்லை என்பதை துவக்க கால தவ்ஹீத்வாதிகள் அனைவரும் அறிந்த ஒன்று தான்
தற்போதைய அவருடைய பேச்சுக்கள் கூட ஊர் ஊருக்கு தனித்து செயல்படுங்கள் என்று தான் உள்ளதே தவிர
அவர் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தை கூட அவர் ஒரே அணியில் மீண்டும் திரட்ட முயற்சிக்கவில்லை என்பதையே பரவலாக அவர் பேச்சின் மூலம் அறிந்து வருகிறோம்
அவரவர் தங்களால் இயன்ற பணிகளை தஃவாக்களை வீரியமாக செய்யுங்கள் அதுவே நம் சமுதாயத்திற்க்கு தேவையாறது போதுமானது
மார்க்க செய்திகள் மக்கள் பார்வைக்கு பரவலாக வந்து போகும் சூழலில் எந்த ஒன்றையும் விவாதித்து தான் புரிந்து கொள்ள இயலும் என்ற நிலையில் மக்களின் மனோநிலையும் இல்லை
அது போக விவாதத்தில் எடுத்து வைக்கும் கருத்துக்களை தான் தற்போது மேடைகளிலும் எழுத்துகளிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்
சுருக்கமாக சொன்னால் இவைகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கிய நிலையில் தான் மக்கள் உள்ளனர்
இது எனது தனிப்பட்ட கருத்தே தவிர JAQH இயக்கத்தின் கருத்து அல்ல
இறுதி முடிவுகளை JAQH அறிக்கையாக வெளியிடட்டும் இன்ஷா அல்லாஹ்
மற்றபடி தனிப்பட்ட ரீதியில் விவாதங்களை எதிர்கொள்ள நினைப்போருக்கு தடை போட வேண்டிய அவசியமும் இல்லை
அது அவரவர்கள் விருப்பம் சார்ந்த உரிமையாகும்
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
(நபியே!) இன்னும் சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது
நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்
என்று கூறுவீராக
(அல்குர்ஆன் : 17:81)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment