ஆன்ட்ராய்ட் மொபைல் சாதனை

         ஆன்ட்ராய்ட் மொபைல்

   !! சாதனையின்  வேதனைகள்  !!

    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

                       07-10--18

கட்டுரை எண்1189-ஞாயிறு  கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************
                        بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
           ★★★★★★★★★★★


கடந்த காலங்களில் அழகாக கைகளால் எழுதும் பலர்கள்
இன்று அந்த எழுத்து வடிவத்தை இழந்து போனதற்க்கு மூல காரணம் ஆன்ட்ராய்ட் மொபைலே

கடந்த காலங்களில் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற்ற பலர்கள் இன்று அந்த ஆற்றலை இழந்து இருப்பதற்க்கும் மூல காரணம் ஆன்ட்ராய்ட் மொபைலே

முகமே தெரியாத அந்நியர்களிடம் ஆனந்தமாய் பேச வைத்து
ரத்த உறவுகளிடம் பிரிவினையை ஏற்படுத்துவதில்  முதல் பங்கு வகிப்பதும் ஆன்ட்ராய்ட் மொபைலே 

எதார்த்த கோழைகளை மறைமுக வீரர்களாகவும்  ஜிஹாதிகளாகவும்  எழுத்து வடிவில் சித்தரிக்கும் பெரும்பங்கு பெற்றுள்ளதும் ஆன்ட்ராய்ட் மொபைலே

உறக்கத்தை இழக்க வைத்து பகல் காலங்களில் கண் கிரக்கத்தை ஏற்படுத்தி வரும் நோய்களின் தாயகமும் ஆன்ட்ராய்ட் மொபைலே

அந்தரங்க ரகசியங்களை அலங்கோலமாக காண வைத்து பருவமில்லாத வயதினரையும் காமத்தில் முதிர்ச்சி பருவமாக்கிய ஒழுக்க கேடுகளுக்கு உரம் போடும் வழிகேடுகளின் உச்சகட்டமும் ஆன்ட்ராய்ட் மொபைலே

இல்லறத்தின் ஈர்ப்பு எனும் அழகை படுகொலை செய்து  கள்ளத்தனமான உறவுகளை அவ்விடம்  ஒட்டி வைத்து  உணர்வோடு விஷத்தை  கலந்து விடும் வைரஸ்களின் கூடாரமும் ஆன்ட்ராய்ட் மொபைலே

ஆன்ட்ராய்ட் மொபைல் மூலம் ஏற்பட்டுள்ள நன்மைகளை  விட தீமைகளே முதலிடம்

ஆன்ட்ராய்ட் மொபைல் சாதனைகளை பட்டியல் போடுபவனை விட அதன் வேதனைகளை பட்டியல் போடுபவனே கின்னஸ் சாதனையை தட்டி செல்வான்

சுருக்கமாக சொன்னால் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உளவியல் நோயாளிகளை ஊரெல்லாம் பரவச்செய்து தீமைகளின் தீக்குச்சிகளாய் மனிதசமூகத்தை மாற்றி வரும் விஞ்ஞானத்தின் பெயரில் அஞ்ஞானம் கற்பிக்கும் மூல  சாதனம் ஆன்ட்ராய்ட் மொபைலே

இதில் தெரிந்தே வழுக்கி விழுந்தவர்களை விட  திடீரென  சறுக்கி விழுவோரே ஏராளம்

இனி வரும் காலங்களில் ஆன்ட்ராய்ட் மொபைலை  தலாக் செய்வது தான் திருமணத்தின் முதல் தகுதி என்ற நிபந்தனைகளே சட்டமாகலாம்

عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ قَالَ: جَاءَ رَجُلٌ اِلَي النَّبِيِّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ ﷺ اَوْصِنِيْ، فَقَالَ: (فِيْمَا اَوْصَي بِه۞): وَاخْزُنْ لِسَانَكَ اِلاَّ مِنْ خَيْرٍ فَاِنَّكَ بِذلِكَ تَغْلِبُ الشَّيْطَانَ

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ்

எனக்கு ஏதேனும் அறிவுரை பகருங்கள்'' என்று வேண்டினார்

நபி (ஸல்) அவர்கள் சில அறிவுரைகள் வழங்கினார்கள்

அவைகளில் ஒன்று நல்லவை அல்லாத காரியங்களைவிட்டும் உமது நாவை பாதுகாத்துக் கொள்ளவும்

அப்படிச் செய்தால் நீர் ஷைத்தான் மீது ஆதிக்கம் செலுத்துவீர்'

என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

      நூல்  மஜ்மஉஸ் சவாயித்

         நட்புடன்  J  .  இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்