தேடல்களே தேர்சி தரும்

   தேடல்களே தேர்ச்சியை தரும்

               ==================

    ♦♦♦♦♦♦♦♦♦♦♦

                       17-10--18

கட்டுரை எண்1190 புதன்கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************

                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
          
         ★★★★★★★★★★★

தேடல்களை நோக்கி ஒரு மனிதனின் ஓடுதல் எந்தளவு வீரியம் அடைகிறதோ அந்தளவு அவ்விசயத்தில் அவன் ஞானம் பெற்றவனாக தெளிவு பெற்ற நிலையில் இருப்பான் என்பதே நடை முறை உண்மை

முஸ்லிம்களில் பலர்களுக்கு மார்க்க ஞானம் மிகவும் குறைந்து காணப்படுவதற்க்கு இதுவே மூல காரணம்

இறைவனை ஏற்று இருப்பார்கள் ஆனால் அந்த இறைவனை எந்த முறையில் ஏற்க வேண்டுமோ அந்த முறையில் ஏற்று இருக்க மாட்டார்கள்

இறைதூதரை நம்புவார்கள் ஆனால் அந்த இறை தூதரை எந்த முறையில் நம்ப வேண்டுமோ அந்த முறையில் நம்பி இருக்க மாட்டார்கள்

இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை  முதல் அநேகமான விசயங்களிலும் இது தான் முஸ்லிம்களின் நிலைமை 

இந்நிலை மாற வேண்டுமானால் மார்க்கத்தின் தேடல் எண்ணங்களை முஸ்லிம்கள் அதிகப்படுத்த வேண்டும்

ஒரு நாளின் 24 மணிநேரத்தில் ஒரு மணி நேரத்தை  கூட மார்க்கத்தை அறிந்து கொள்வதற்க்கு  நேரம் ஒதுக்குவோர் மிகவும் அரிது

சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதனிடம் உள்ள சிந்தனை தேடல்களே அவனது தேர்ச்சிக்கு சரியான வழிமுறைகளை உருவாக்கும்

عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ طَلَبَ عِلْماً فَأَدْرَكَهُ كَتَبَ اللهُ لَهُ كِفْلَيْنِ مِنَ اْلاَجْرِ وَمَنْ طَلَبَ عِلْماً فَلَمْ يُدْرِكْهُ كَتَبَ اللهُ لَهُ كِفْلاً مِنَ اْلاَجْرِ

எவரொருவர் மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் ஈடுபட்டு பின்பு அந்தக் கல்வியை அடைந்து கொண்டாரோ, அவருக்கு அல்லாஹ் இரண்டு கூலியை எழுதுகிறான்

எவரொருவர் இல்மைத் தேடி அதை அடைந்து கொள்ள முடியவில்லையோ, அவருக்கு அல்லாஹ் ஒரு கூலியை எழுதுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

          நூல்  இப்னு மாஜா

عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: تَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ فَإِنِّي امْرُؤٌ مَقْبُوضٌ وَإِنَّ الْعِلْمَ سَيُقْبَضُ حَتَّي يَخْتَلِفَ الرَّجُلاَنِ فِي الْفَرِيضَةِ لاَ يَجِدَانِ مَنْ يُّخْبِرُهُمَا بِهَا

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள்

மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள், மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள்

வாரிசுரிமைச் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள், அதை மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள்

ஏனேனில், என் உயிர் கைப்பற்றப்படும். மார்க்க அறிவு மிகக் குறைந்து விடும் மார்க்க கல்வியும் விரைவில் உயர்த்தப்பட்டுவிடும்

ஒரு பர்ளான சட்டம் பற்றி இருவர் தர்க்கித்துக் கொள்வர், அந்தச் சட்டத்தின் சரியான விளக்கத்தைத் தருவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்

என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

             நூல்  பைஹகீ

        நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்