நடை பயிற்சி
நீங்கள் நடை பயிற்சி விரும்பியா
!! ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ !!
J .Yaseen imthadhi
09-10-18
**************
உடலை ஆரோக்யமாக வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டாமா
அன்றாடம் அதிகாலை உடற்பயிற்சி செய்வது தான் உடலுக்கு ஆரோக்யமானது
அதிகாலை நடை பயிற்சியே உடலுக்கு வலுவை சேர்க்கும்
என்றெல்லாம் பிறர்களின் உடல் ஆரோக்யத்தில் அக்கரை கொண்டு பேசும் பலர்கள்
அதிகாலை நான்கு மணிக்கே ரோடுகளில் வியர்வை சிந்தி தொங்கோட்டம் ஓடுவதை பரவலாக காண முடிகிறது
ஆனால் அவர்களின் உடலை மறுமையில் நரகம் தீண்டாது இருக்க யோசிப்பதே இல்லை
பள்ளிவாசல் கடந்தும் உடலை மெருகூட்ட பாதம் கடுக்க வாக்கிங் செல்வோர்
அதே பள்ளிவாசல் நுழைந்து தொழுகையின் மூலம் அவர்களின் ஈமானை மெருகூட்ட முயற்சிப்பது இல்லை
கட்டுக்கோப்பாக வளர்த்தும் நமது உலக உடல் மண்ணுக்கே சொந்தம் ஆனால் அதே உடல் தான் மறுமையில் நமக்கு சொந்தம்
இனியாவது சிந்திப்பார்களா ?
அல்லது இந்த பதிவையும் நிந்திப்பார்களா
பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ
அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்
(அல்குர்ஆன் : 44:47)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
(அல்குர்ஆன் : 66:6)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment