வெளிநாடு பணிகள்
வெளிநாடுகளில் வேலை
பார்க்கும் நபரா நீங்கள்
||^^^^^^^^^^^^^^^^^^^^^^^||
14-10-18- ஞாயிறு கிழமை
•••••••••••••••••••
J . யாஸீன் இம்தாதி
*************
எதிர் பார்க்காது வாழ்வில் ஏற்படும் சிரமம் ஒரு புறம்
வாழ்கையில் எதிர் பார்த்தே ஏற்று கொள்ளும் சிரமங்கள் ஒரு புறம்
வெளிநாடுகளில் வேலை பார்க்க செல்லும் பலர்கள் அவர்களாகவே அந்த நிலையை விரும்பி தேர்வு செய்து கொண்டது தானே தவிர
இதில் யாருடைய நிர்பந்தமும் அழுத்தமும் இல்லை
ஆனால் இது போன்ற நிலையில் உள்ள பலர்கள் இறைவனின் மூலம் அவர்கள் அதிகம் சோதிக்கப்படுவதை போலவும் உள்நாட்டில் வேலை பார்க்கும் மக்களே அவர்களை விட நிம்மதியான வாழ்வை அனுபவித்து வாழ்கிறார்கள் என்று புலம்பியும் அடிக்கடி அறிவிப்பு போடுவதை பார்க்கிறோம்
எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் இரை தேடி பறந்து செல்லலாம் யாருடைய அச்சுறுத்தல் இல்லாமலும் பறந்து செல்லலாம் என்ற நிலையில் இருக்கும் எந்த பறவைகளும்
காடுகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் எந்த விலங்கினங்களும் அவைகள் பிறந்த பகுதியில் இருந்து அந்நிய பகுதிக்கு எப்போதும் இரை தேடி அலைவது இல்லை
காரணம் அவைகளுக்கு இருக்கும் இறை நம்பிக்கை மனித சமுதாயத்தை விட வலுவானது
தேவைகளுக்கு ஏற்று உழைத்து இருக்கும் இடத்தில் கிடைக்கும் பொருளாதாரத்தை சிக்கனமாக செலவு செய்து பழகி கொண்டால் அதுவே மனித வாழ்கைக்கு போதுமானதாக இருக்கும்
வெளிநாடுகளில் சென்று பணியாற்ற வேண்டும் என்ற எந்த நிர்பந்தத்தையும் இறைவன் எவருக்கும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை
வலிய சென்று சிரமங்களை எதிர் கொண்டு விட்டு அதை ஒரு சோதனையாக கருதுவதும் உளவியல் சார்ந்த மனநோயாகும்
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَتَوَكَّلُونَ عَلَي اللّٰهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا تُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصاً وَتَرُوحُ بِطَاناً
நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக நம்பிக்கை வைத்தால் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவைகள் நிறைவேற்றப்படுவது போல், உங்களுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும்
அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன
மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
இப்படிக்கு J . இம்தாதி
Comments
Post a Comment