ரெட் அலர்ட் எச்சரிக்கை
!! ரெட் அலர்ட் எச்சரிக்கையும் !!
அணுகுமுறையும்
==================
♦♦♦♦♦♦♦♦♦♦♦
06-10--18
கட்டுரை எண்1189-சனி கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
எதிர் வரும் (7-10-18) ஏழாம் தேதி ரெட் அலர்ட் முறை எச்சரிக்கை எனும்
வானிலை தகவலை ஊடகங்கள் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறது
அறிவியல் சார்ந்த அறிக்கையாக வானிலை அறிக்கை இருந்தாலும் ஏனைய எச்சரிக்கை அறிக்கைகளை போன்று இதை பெரிதாக மக்கள் கற்பனை செய்ய தேவை இல்லை
சுனாமி எச்சரிக்கையை பொறுத்த வரை அதில் அதிகமான அறிவியல் சார்ந்த நம்பக தன்மை உண்டு
காரணம் பூகம்பம் ஏற்பட்டதற்க்கு பின்னால் தான் கருவிகளின் மூலம் உடனடியாக தகவலை பெற முடிகிறது
அதிலும் குறிப்பாக மூன்றே நிமிடங்கள் மட்டுமே அதன் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வாய்ப்பு உண்டு
ஆனாலும் அது போன்ற பல எச்சரிக்கை அறிக்கைகள் கூட பொய்யாகியுள்ளது
வானிலை அறிக்கையை பொறுத்த வரை மேக கூட்டங்களின் அழுத்தத்தை மையமாக வைத்து சொல்லப்படும் தகவல் மட்டுமே
காற்றின் திசை மாறுகிற போது வானிலை அறிக்கையும் பொய்யாக மாறி காற்றோடு காற்றாக பறந்து விடும்
அதிலும் குறிப்பாக நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பே சொல்லப்படும் வானிலை எச்சரிகைகள் பெரும்பாலும் நடந்தது இல்லை என்பதை உற்று கவனித்திருப்போர் உணர முடியும்
இயற்கை சீற்றங்கள் எப்போதும் சொல்லிவிட்டு வருவது இல்லை
அவ்வாறு வந்தாலும் அதன் பாதிப்புகளை ஓரளவே மனிதனால் எதிர் கொள்ள முடியும்
அபாய அறிக்கைகளின் மீது முழு நம்பிக்கை வைத்து இறைவனை மறந்து பேசாமல்
இறைவனின் ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து சர்வ நாயகனாகிய இறைவனிடம் மனிதசமுதாயம் முன்னெச்சரிக்கையாக கையேந்துவதே இதற்கான சரியான தீர்வு
மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டு
அய்யோ பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வோம்
என்று போலி ஒப்பாரி வைத்து நாடகம் ஆடாது
பொழியும் மழை நீரை சேகரிக்கும் அனைகளை விரிவு படுத்தவும் புதுமையாக பல அனைகளை ஏற்படுத்தவும் பல கட்ட முயற்சிகளை இனிமேலாவது நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் செய்யட்டும்
மக்களின் கோடான கோடி வரிப்பணத்தை செத்ததுப்போன அரசியல் வாதிகளின் சிலையை எழுப்பவும் சமாதிகளை எழுப்பவும் மணிமண்டபங்களை எழுப்பவும் ஊதாரித்தனமாக செலவு செய்யாது நாட்டு மக்களுக்கு நலன் தரும் விசயங்களில் அக்கரை செலுத்தட்டும்
அனைகள் நிரம்பியதால் வேறு வழியின்றி திறந்து விட உத்தரவு போட்டோம் என்று நாட்டு மக்களை சாகடிப்பதற்க்கு நியாயம் கற்பித்து ஏசி அறைகளில் நிம்மதியாக இருந்து கொண்டு அரசியல்வாதிகள் பேட்டிகளை கொடுக்க வேண்டாம்
காரணம் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளை விட விபரமான மக்களே நம் நாட்டு குடிமக்கள் என்பதை இனியாவது அரசியல்வாதிகள் உணரட்டும்
*******************
பலத்த காற்று அடிக்கும்போது
**********
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க கைரஹா, வ கைர மா ஃபீஹா,
வ கைர மா உர்ஸில்த பிஹி
வ அஊது பிக மின் ஷர்ரிஹா
வ ஷர்ரி மா ஃபீஹா வ ஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
பொருள் :
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்ப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன்
இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
ஆதாரம் : முஸ்லிம், புகாரி
**************
தேவைக்கு அதிகமாக மழை
பெய்யும்போது
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபாலி வல் ஆஜாமி வள்ளிராபி வல் அவ்திய(த்)தி வ மனாபிதிஷ் ஷஜரி
பொருள் : யா அல்லாஹ் ! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment