விலைவாசி நாடகம்
விலைவாசியை குறைப்போம்
அரசியல்வாதிகளின் டயலாக்
============================
10-09-18- திங்கள்
***************
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்போம் என்று சூளுரைக்காத எந்த அரசியல்வாதியும் இல்லை
இவர்களின் கயமைத்தன பேச்சை சிந்திக்காத அரசியல் அடிமைகளோ ஆம் உண்மை தான்
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை நிச்சயம் குறைப்பார்கள் என்று அவர்களுக்காக இவர்கள் விளம்பரம் செய்து கொண்டிருப்பார்கள்
ஆனால் உண்மை என்ன. ?
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டை ஆண்ட ஆளுமை செய்து கொண்டுள்ள எந்த ஆட்சியாளனும் எந்த விலைவாசியையும் இதுவரையிலும் குறைத்தது இல்லை
அத்தியாவசியமான ஒரு பொருளின் விலையை குறைத்து விட்டு அதன் மூலம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக நாட்டு மக்களின் காதில் பூவை சுற்றி விட்டு அதற்க்கு பதிலாக வேறு ஒரு பொருளின் விலையை விளம்பரம் இன்றி தந்திரமாக விலையை குறைத்த பொருளின் சருகலை ஈடு கட்டி கொள்வார்கள்
இந்த உண்மையை புரியாத வரை அரசியல்வாதிக்கு கூஜா தூக்கும் குடிமக்களின் அறிவீனத்தை எவராலும் சீர் செய்ய இயலாது
விலைவாசி ஏறுவதற்க்கும் நியாயமான சில காரணங்களும் உண்டு மறுக்க இயலாது
அதே நேரம் பொருளாதாரத்தை நாசமாக்கும் வட்டி
மக்களை பிச்சைக்காரர்களை போல் கருதி தரப்படும் இலவசங்கள்
ஒழுக்க கேடுகளை கற்று தரும் சினிமாக்களுக்கு வரி விலக்குகள்
இயற்கையாக செத்துப்போன அரசியல்வாதிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சமாதிகளை மணிமண்டபங்களை சிலைகளை நிறுவுவது
மக்கள் தொண்டன் என்று பீற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து தரப்படும் ஏராளமான சலுகைகள்
வேலைக்கு மீறிய அரசியல்வாதிகளின் சம்பளங்கள்
தங்களது பெருமையை விளம்பரம் செய்ய ஆட்சியாளர்கள் எனும் போர்வையில் நடத்தப்படும் அரசு விழாக்கள்
குற்றம் நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கொடுப்பதை தவிர்த்து விட்டு கொலையாளிகளை ரவுடிகளை சமூக விரோதிகளை புது மாப்பிள்ளை போல் ஜெயிலுக்கு அழைத்து சென்று மக்கள் வரிப்பணத்தில் அந்த அயோக்கியர்களுக்கு எல்லா விதமான செலவுகளையும் செய்வது
இது போல் பல அம்சங்களை சுத்தமாக ஒழிக்காது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்போம் என்று வீரவசனம் பேசுவது
சிந்தனையுள்ள நாட்டு குடிமக்களிடம் எடுபடாது
நாட்டை ஆளும் அரசியல்வாதிகளை விட ரோட்டில் பிளாட்பார்ம் வியாபாரம் செய்யும் எத்தனையோ குடிமக்கள் சிந்தனையாளர்கள் என்பதை அரசியல்வாதிகள் தான் புரிந்து கொள்ளவில்லை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment