புத்தி இருப்போர் திருந்தட்டும் அல்லது வருந்தட்டும்

   புத்தி இருப்போர் திருந்தட்டும்

            அல்லது வருந்தட்டும்

              !!  NO PROBLEM !!

         ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

02-09-18- ஞாயிறு கட்டுரை எண் 1180
                 ***************
            !!J . Yaseen iMthadhi !!
                   **************

                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

மறுமைக்கு உதவாத மறுமையில் நஷ்டம் தருகின்ற விடயங்களிலும் அது தொடரான  விவாதங்களிலும் முழு முயற்சியை செலுத்தி தங்கள் மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்ளும்  நபர்களில் தமிழக முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக தங்களை  ஏகத்துவவாதிகளாக காட்டி கொள்ளும் தவ்ஹீத்வாதிகள்  முன்னனி வகிப்பதை சமீபத்தில் பரவலாக காண முடிகின்றது

சமூகவலைதளங்களில் அங்கம் பெற்றுள்ள பலர்களுக்கு இதுவே அவர்களின் வாழ்நாளின் இலட்சியமாகவும் மாறிவிட்டது

எது தவறு எது சரி என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய ஆலீம்கள் மற்றும்  தாஃயிக்கள் கூட பாமரர்களை போல் அவர்களோடு வெட்டி விவாதங்களில் இணைந்து கொண்டு கீழ்த்தரமான பதிவுகளை போட்டு  பயணிப்பது விவாதிப்பது  அருவருப்பாகவும்  அவமானமாவும் உள்ளது

தனிப்பட்ட ஒரு மனிதனை அல்லது ஒரு அறிஞனை அல்லது  ஒரு இயக்கத்தை தூய்மை படுத்தி நமது நேரங்களை செலவழிப்பதாலோ

அல்லது அவைகளை இழிவு படுத்தி  விவாதிப்பதாலோ அல்லது மாறி மாறி சர்ச்சை செய்து  நிரூபிப்பதாலோ கடுகளவு நன்மையும் மறுமையில் நமக்கு கிடைக்கப்போவது இல்லை

காரணம் யாரும் எவருக்கும் மறுமை வெற்றியை பெற்று தர இயலாது

அநேகமானவர்களிடம் குருட்டு பக்தியும் வெறுப்புணர்ச்சியும் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டே வருகிறது

ஒரு காலத்தில் குர்ஆன் ஹதீசை பேசிய நாவுகளும் அவைகளை பற்றி ஆக்கப்பூர்வமாக எழுதிய அவர்களின்   கரங்களும் இன்று தரம் தாழ்ந்து  மறுமைக்கு உதவாத  பித்னா பதிவுகளையும் அதை சார்ந்த செய்திகளையும்  தூக்கி சுற்றுவது அவர்களிடம் பழையநிலை மார்க்க மடமை குடி கொண்டு வருவதை தான் காட்டுகிறது

ஒரு நாளின் 24 மணிநேரத்தில் 12 மணி நேரத்தை தூங்கியே கழித்து அதில் 8 மணி நேரத்தை உலக வாழ்வியலின்  பொருளாதாரத்தை தேடியே கழித்து மீதமுள்ள 2 மணி நேரத்தை கூட இது போன்ற கீழ்த்தர செயலுக்கு செலவழிக்கிறோம்  என்று சொன்னால் இறைவனின் படைப்பில்  நம்மை விட நன்றி கெட்டவர்கள் கேடுகெட்டவர்கள்  எவரும் இருக்க இயலாது

இங்கு யார் தூய்மையானவர்கள் எந்த இயக்கம் தூய்மையானது  என்று  ஆராய்சி செய்து நேரங்களை வீணாக்காதீர்

அவர்களை விட நான் தூய்மையை  பின்பற்றி வாழ்கிறேனா என்று மட்டும் சுய பரிசோதனை செய்யுங்கள்

நம்மில் யாரெல்லாம் நரகவாதிகள் என்று ஆராய்ச்சி செய்யாதீர்கள்

மாறாக அந்த நரகத்திற்க்கு உரிய விறகு கட்டைகளாக நாம் மாறி விடுவோமா என்று அஞ்சுங்கள்

புத்தி இருப்போம் சிந்திக்கட்டும் தங்களுக்கு  இறை பக்தி இருப்பதாக நினைப்போர் இனிமேலாவது திருந்தட்டும்

அல்லது வரப்போகும்  மறுமையில் நாளில் வருந்தட்டும்

  !! நோ பிராப்ளம் நோ பிராப்ளம் !!

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌  فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்

              (அல்குர்ஆன் : 7:8)

           நட்புடன் J  . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்