அரசியல்வாதியும் அப்பாவிகளும்
அரசியல் அறிவிலிகளும்
ஆதாயமடையும் அரசியல்வாதிகளும்
••••••••••••••••••••••••••••••••••••••••
09-08-18 செவ்வாய் கட்டுரை 1172
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
அரசியல்வாதிகளை மக்கள் தான் கட்சி ரீதியாக தலைவர் ரீதியாக தனித்து பார்க்கின்றனர்
அரசியல் தலைவர்களோ மக்களை ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்ப்பர்
வெற்றி கிடைத்து பதவி கிடைக்க வேண்டுமானால் யாரும் யாரோடும் சந்தர்ப்பத்திற்க்கு ஏற்று கூட்டு சேரும் வேடதாரிகள் தான் நமது அரசியல்வாதிகள்
நாம் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் நாம் வெறுக்கும் நபர்களோடும் கூட
கூட்டு வைத்து நம் தலையில் அடிக்கடி மிளகாய் தூவி அதற்க்கு சமாதானமும் கூறி நம்மையும் அவர்களின் அடிமைகளாகவே வைத்திருக்கவே முயற்சி செய்வார்கள்
ஆனால் அப்பாவி மக்களோ அரசியல்வாதிகளின் வெற்று கொள்கையே எங்கள் தலைவன் என்றும் தானை தலைவி என்றும் உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என்றும் கோஷம் போட்டு சுற்றுவார்கள்
தலைவனின் சாவுக்காக தீ கொழுத்தி மடமைத்தனமாக செத்துப்போன தொண்டர்கள் அறிவிளிகள் ஏராளம் ஆனால் அந்த தலைவனின் குடும்மோ அவர்களின் குடும்ப சாவை கூட மூலதனமாக்கி பதவிக்கு வந்ததே தாராளம்
கழிவறை முதல் பயணிக்கும் வாகனம் வரை ஏசியில் வரும் அரசியல் தலைவனை நடுரோட்டின் தூசியிலே வெயில் கடுக்கும் நேரத்தில் காத்திருந்து வாகனத்தின் கண்ணாடி ஓரமாக அவர்கள் முகம் பார்ப்பதை கூட புண்ணியமாக கருதும் அரசியல் அறிவிலிகள் நம் நாட்டு குடிமக்களில் ஏராளம்
பரம எதிரிகளை போல் மேடைகளில் வீரம் பேசி விட்டு வைபவங்களிலும் கருமாறி நிகழ்ச்சிகளிலும் கைகோர்த்து போஸ் கொடுத்து தங்கள் அரசியல் இனம் தான் உலகில் சூடு சொரணை இல்லாத ஒரே இனம் என்று அன்றாடம் அவர்களே வெளிப்படுத்தினாலும் அதன் மூலமும் விழிப்புணர்வு பெறாத அப்பாவி மக்களே நம் நாட்டு குடிமக்கள்
இது போன்ற நிலைபாட்டை நம் நாட்டு மக்கள் மாற்றாத வரை இங்கு ஆளுபவர்கள் தான் மாறி மாறி வருவார்களே தவிர
ஆளும் முறையில் மக்களுக்கு பயன் இருக்காது
உள்ளத்தில் இருக்கும் அரசியல்வாதி மோகத்தை குப்பையில் வீசுங்கள் இல்லாவிட்டால்
நம் நாடு குப்பைமேடாகவே தொடரும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment