கருணாநிதியும் சமாதியும்

    சாதனையாளனுக்கு சமாதிகள்

                        எதற்க்கு

நிலை தடுமாறி பேசும் முஸ்லிம்கள்

      ••••••••••••••••••••••••••••••••••••••••

   07-08-18 திங்கள்  கட்டுரை 1170
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ

சுகமோ துக்கமோ

எதை வாழ்வில் சந்தித்தாலும் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய வட்டத்தையும் அதன் சட்டத்தையும்  தாண்டி செல்வதும் அவ்வகையில் பேசுவதும் எழுதுவதும் ஈமானிய உணர்வுக்கு அழகானது அல்ல

யாருடைய பிறப்பும் யாருடைய இறப்பும் மறுமையை நம்பும் ஒரு முஸ்லிமுக்கு  சமமானவையே

நபிகள் நாயகம் ( ஸல்)  அவர்களின் மண்ணறைக்கே கட்டிடம் கட்ட அனுமதி இல்லாத போது

கருணாநிதியின் சமாதியை மெரினாவில் எழுப்ப வேண்டும் என்று தன்னிலை புரியாது பேசுவதே மார்க்க அறிவீனமாகும்

நம் நாட்டு அப்பாவி  குடிமக்களின்  பொருளாதாரம் அரசியல் தலைவர்களின்  சிலைகளுக்கும் அவர்களின்  சமாதிகளுக்கும் தான்  வீணாக்கப்படுகிறது என்பது உலகம் அறிந்த உண்மை

இவைகளால் நாட்டு மக்களில் ஒருவருக்கும் கூட எவ்வகையிலும் உபயோகம் இருந்தது இல்லை இனி இருக்க போவதும் இல்லை

அவ்வகையில் இவ்விசயத்தில் கருத்து சொல்வதே முஸ்லிம் என்ற நிலையில் அவசியமற்றது

அதே நேரம் அரசாங்கத்திற்க்கு என்று ஒரு வரைமுறை உள்ளது அந்த வரைமுறையை உருவாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகளே

அந்த வரைமுறையை தாண்டி அவர்களே முரண்பட்டு  பேசுவது துக்கமான சூழலை பயன்படுத்தி நாட்டு  மக்களின் சிந்தனையை திசை  திருப்புவது  குழப்புவது என்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கை வந்த கலையாகும்

தற்போதைய தமிழக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய  இடம் தர மறுப்பதை போல் கருணாநிதியின் ஆதி  காலத்தில் வேறு பலருக்கு அவரே மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் சமூகவலைதளங்களில்  உலா வரவே செய்கிறது

இவ்விசயத்தில் எந்த முடிவை அரசாங்கம் எடுத்தாலும் அதை பற்றி நமக்கு கவலை தேவையே இல்லை

அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கி பேசி நாமும் அரசியல்வாதிகள் போலவே நம்மையும் அறியாது மாறி விட வேண்டாம்

ஜனனம் மரணம் இயல்பானது

ஒரு மனிதனின் மரணத்திற்க்கு பின் அவனது சீரிய சரித்திரமே உலகில் அவனது புகழை நீடிக்க வைக்கும்

இறந்ததற்க்கு பின்னால் அவர்களின் உடலுக்கு மேல் எழுப்பும் மண்ணறைகளும் வீணாண  மணிமண்டபங்களும் அதை காணும் நபர்களுக்கு கூட அதற்க்கு உரியவர்களின் வரலாற்றை நிச்சயம் நினைவு படுத்தாது

அவ்வகையில் உலகில் சீரிய வாழ்கை வாழ்ந்து  சாதாரண மனிதனாகவே மரணித்து சாதாரண மனிதனை போலவே அடக்கமும் செய்யப்பட்டு இன்று வரை இந்த நிமிடம் வரை கோடான கோடி இதயங்களில்

      வாழ்ந்தவர்      வாழ்பவர்

    இனியும் இதயங்களில் வாழ

                     இருப்பவர்

மாமனிதர்  நபிகள் நாயகம் ( ஸல்)

              !! அவர்கள் மட்டுமே ! !

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ‏ 

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்

             (அல்குர்ஆன் : 94:4)


           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்