சீரிய சிந்தனையே சரியான சிந்தனை

      சீரிய சிந்தனையே சரியான

                        சிந்தனை

     ••••••••••••••••••••••••••••••••••••••••

05-08-18 ஞாயிறு  கட்டுரை 1171
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

பல்லாயிரம் கோடிகளுக்கு
ஊர் எதை சொன்னாலும் அதற்க்கு மாற்றமாக கருத்து கூறுவதையே தனித் திறமையாக கருதும் சாரார் ஒரு புறம்

மாற்று கருத்து சொன்னால் தன்னை ஒதுக்கி விடுவார்களோ அல்லது  விமர்சனம் செய்து விடுவார்களோ என்று அஞ்சி அப்பட்டமான தவறான கருத்துக்களுக்கு கூட அங்கீகாரம் கொடுக்கும் சாரார் ஒரு புறம்

ஊர் வம்பு நமக்கு எதுக்கு என்று தனது இயலாமையை பேடிதனத்தை மூடி மறைக்க எதிலும் ஒதுங்கியே ஓடி ஒழியும் சாரார் ஒரு புறம்

கேள்வி படும் கருத்துக்களை சீர்தூக்கி பார்த்து நடைமுறை ரீதியாக யோசித்து அறிவியல் அதை  ரீதியாக உரசி பார்த்து இயன்ற வரை அதற்க்கு ஆதரவும் ஆலோசனையும் தரும் அணுகுமுறையே சீரிய சிந்தனைவாதிக்கு அழகாகும்

மனிதனால் கண்டுபிடிக்கப்படும் செயற்கை பொருளில் ஒரு சில எதிர் விளைவுகளும் இருக்கவே செய்யும் என்று தெரிந்து கொண்டே அனைவரும் இயற்கை நிலைக்கே  மாறுங்கள் என்று நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத செயற்கை பொருள்களை எல்லாம் உதாசீதனமாக கருதி கருத்து சொல்வோரும்

பணம் ஒன்றைய குறிக்கோளாக கொண்டு தயாரிக்கப்படும்  பொருள்களுக்கு  இயற்கை ரசம் இருப்பதை போல்  தரமானது வலுவானது என்று விளம்பரம் செய்து கருத்து கூறுவோரும் நாம் மேல் கூறியுள்ள இரு சாராரை சார்ந்தவரே

உணவே மருத்துவம்

(கடவுளுக்கும் நோய் நிவாரணத்திற்க்கும் சம்மந்தம் இல்லை எனும் மறைமுக நாத்தீக  வார்த்தையே உணவே மருத்துவம் எனும் சொல் )

என்று கூறி மருத்துவமே முட்டாள் தனம் என்று சாத்தியம் இல்லாது வாதிப்பதும்

மருத்துவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக கருதி கொண்டு தலைவலி போன்ற அர்ப்பமான விசயங்களுக்கெல்லாம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிட்சை செய்வதை  சிறப்பாக்கி  கருத்து கூறுவதும் இவ்வகையே

சுருக்கமாக சொன்னால் தோணுவதை  எல்லாம் சிந்திக்காது மாற்று கருத்தும் மறுப்பு கருத்தும் சொல்வது திறமை அல்ல

மாறாக நியாயமான வாதங்களை மனப்பூர்வமாக ஏற்று கொள்வதே சரியான சிந்தனை சீரிய சிந்தனை

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌  فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏ 

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை

எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன

(அல்குர்ஆன் : 22:46)

مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَـصِيْرِ وَالسَّمِيْعِ‌  هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا‌  اَفَلَا تَذَكَّرُوْنَ‏ 

இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்(ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

(அல்குர்ஆன் : 11:24)


           நட்புடன்  J . இம்தாதி








Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்