கருணாநிதியும் காதர்மைதீனும்

             கருணாநிதிக்காக
       
முஸ்லிம்களையும் மார்க்கத்தையும்

             அடமானம் வைக்கும்

            கே எம்  காதர் மைதீன்

   ×××××××××××××××××××××××××××
            2-08-18- வியாழன் 

            J .யாஸீன் இம்தாதி

        --------------------------------------

( துஆ )பிராத்தணை என்பது இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் நடைபெறுகின்ற ஒரு ரகசிய வேண்டுதல் ஆகும்

தனக்காக ஒருவர் வேண்டினாலும் அல்லது பிறருக்காக ஒருவர் வேண்டினாலும் அதை பிறர்கள் அறிய வேண்டும் என்று நினைப்பதே அவசியமற்ற செயல்பாடாகும் இஸ்லாமிய மார்க்கம் கண்டிக்கின்ற நடை முறையாகும்

இந்த பிராத்தணை கூட தற்போது அரசியல் லாபத்திற்காக தனி மனித பக்திக்காக  வெளிப்படுத்தும் விதம் முஸ்லிம்களில் சிலர்கள் நடந்து கொள்வது அருவருப்பாக உள்ளது

குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி  அவர்களின் உடல் நலத்திற்க்காக சமூகவலை தளங்களில் ஒப்பாரி வைத்து அறிக்கை போடும் அளவு சிறப்பு பிராத்தணை எனும்  துஆ மஜ்லிஸ் நடத்தும் அளவு மார்க்கம் சிலர்களால்   எள்ளி நகையாடப்படுகிறது

குறிப்பாக  இந்தியன் முஸ்லீம் லீக் (சென்னை மாவட்டம்  சார்பாக ) அக்கட்சியின்  அகில இந்திய  தலைவர் கே எம் காதர் மைதீன் அவர்கள் தலைமையில்

சில  உலமாக்கள் அங்கீகரத்தோடு 2-08-18 வியாழன் காலை 10-30 மணியளவில் கூட்டு பிராத்தணை நடை பெற்றதாக சமூகவலை தளங்களில் அதன் வால்போஸ்டர்கள்  பரவி வருவது வேதனைக்குரிய விசயமாகும்

முஸ்லிம் சமூகத்தை ஒன்று கூட்டி வால்போஸ்ட் அடித்து துஆ மஜ்லிஸ் நடத்தும் அளவு கருணாநிதி அவர்கள் இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் அரும் பாடுபட்டு அதனால் இஸ்லாமிய எதிரிகளால் தாக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை

மாறாக எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக ஏற்படும் முதிர்சியின் பலவீனத்தை தான் கருணாநிதி அவர்கள்  சந்தித்து உள்ளார்

அவருடைய பண பலமும் படை பலமும் அதிகார பலமும் அவரை எப்போதும் சூழ்ந்து தான் உள்ளது

இதற்காக இந்தளவு நீலிக்கண்ணீர் வடிக்கும் அவசியம் என்ன வந்து விட்டது  ?

பல வருடங்களாக முஸ்லிம் என்பதற்காக  கைது செய்யப்பட்டு நீதி கிடைக்காது இன்று வரை சிறைச்சாலைகளில் மருத்துவத்திற்க்கு கூட வழி இல்லாது வாடும் பாதிக்கப்பட்டோருக்காக அவர்களின் குடும்பத்திற்காக அதனால் ஈமானோடு உயிர் இழந்த சகோதரர்களுக்காக மனம் வருந்தி  இது போன்ற ஒரு  துஆ மஜ்லிசை இவர்கள்  ஏற்பாடு செய்திருப்பார்களா  ?

இதய நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்கான மருத்துவத்திற்க்கு கூட  வழி இல்லாது சிரமப்பட்டு வரும் ஏழ்மை  மக்களுக்காக இவர்கள் இது போல் துஆ மஜ்லிஸ் நடத்தி இருப்பார்களா ?

அதை பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாத இவர்களுக்கு கருணாநிதியின் மேல் இந்தளவு கரிசனம் ஏன்  ?

அல்லது இவர்கள் பிராத்தணை செய்து அதனால் கருணாநிதி  அவர்கள்  சுகமடைந்து மீண்டும் இளமை பருவத்தை அடைந்து  அரசியல் சிம்மாசனத்தில் அமர போகிறாரா ?

அல்லது அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தால் தான் தமிழ் நாடே தலை நிமிறுமா

தற்போதைய சூழ்நிலையில் கருணாநிதி அவர்கள் முழுமையாக சுகம் அடைந்தாலும் அவருடைய முதிர்சியின் காரணமாக அவர் வாழும்  இல்லத்தை கூட அவரால் ஆள இயலாது என்பதே உண்மை

இது போன்ற தவறான வழிமுறைக்கு அங்கீகாரம் தந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம் பெருமக்கள் மற்றும் உலமாக்கள் அனைவருமே இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்

கருணாநிதியின் நலனில் அந்தளவு அக்கரை இருப்பது போல் பாவனை காட்டும் நீங்கள் இறைவனை மறுத்து நாத்தீகனாகவே வாழ்ந்து அதே நிலையில் மரணித்து விட்டால் மறுமையில் வெற்றி பெறவே முடியாது என்ற உண்மையை இந்த நேரத்திலாவது கருணாநிதி அவர்களுக்கு உங்களால் இயன்றால்  உணர வையுங்கள் அதன் மூலம் கலிமாவை மொழிய வைக்க முயற்சி செய்யுங்கள்  இது தான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி


இதை கண்டு கொள்ளாது நீங்கள் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக இருப்பதை போல் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும்  மார்க்கத்தையும் இழிவு படுத்தினால் அதை வன்மையாக கண்டிப்போம்

اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌  اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்  வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை

        (அல்குர்ஆன் : 7:55)

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا   وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏ 

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்

மிக மன்னிப்பவன்

(அல்குர்ஆன் : 67:2)

رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌  فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌  تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 

“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய் வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்

முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக

இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக

(என்று அவர் பிரார்த்தித்தார்.)

(அல்குர்ஆன் : 12:101)


             நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்