ஞானோதயம் பெற்றுவரும் தவ்ஹீத்வாதிகள்
ஞானோதயம் பெற்று வரும்
தவ்ஹீத்வாதிகள்
----------------------------
09-07-18- திங்கள் கட்டுரை 1161
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பிறர்களின் மானத்தில் அல்லது அவர்களது மார்க்க நடைமுறையில் அல்லது அவர்களது தனிப்பட்ட விவகாரத்தில் இஸ்லாம் விதித்து தந்த மார்க்க நெறிமுறைகளை மீறி கடுமையாக பொதுதலத்தில் விமர்சித்து அதன் மூலம் தங்களை மார்க்க பிடிப்புள்ளவர்களாக தூயவர்களாக காட்டி கொள்ளும் நபர்கள் ( தவ்ஹீத்வாதிகள்)
சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்களே அந்த நிலையை சந்தித்து அதன் பின் அவர்கள் பிறர்களை விமர்சித்தது போல் இவர்களும் விமர்சிக்கப்படும் பொழுது தான்
பிறர்களின் மானமும் கண்ணியமும் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை இவர்களே உணர துவங்குகின்றனர்
இனிமேலும் நாம் நமது நிலையை இவ்வாறு வைத்து கொள்ள கூடாது என்பதை அவர்களை சார்ந்தோரிடம் ஏதோ புதிதாக மார்க்க ஞானோதயம் பெற்றதை போல் அவரை சார்ந்த பிறர்களுக்கும் அறிவுரை கூறவும் முற்படுகின்றனர்
ஆனால் இதே அறிவுரையை பல ஆண்டுகளாக வேறு பலர்கள் இவர்களுக்கு ஆதாரங்களோடு நியாயங்களோடு சொல்லும் போது அதை கூட கடுமையாக விமர்சித்தும் ஏளனம் செய்தும் பல இடங்களில் பேசியவர்களும் எழுதியவர்களும் இவர்கள் தான் ( தவ்ஹீத்வாதிகள்)
தமிழகத்தில் குறிப்பிட்ட சில இயக்கத்தவர்கள் இந்த விசயத்தில் பல ஆண்டுகளாக இதே நிலையை தான் கையாண்டு வருகின்றனர்
ஒருவரிடம் மார்க்க ரீதியில் தவறான பல அணுகுமுறைகளை கண்டால் அதை ஆதாரங்களோடும் அக்கரையோடும் நளினத்தோடும் சம்மந்தப்பட்டவர்களிடம் முறையாக எடுத்து சொல்வது மட்டும் தான் இஸ்லாமிய மார்க்கம் பிறர்களது தவறை சுட்டி காட்ட நமக்கு கற்றுத் தந்த எல்லையே தவிர
ஏதோ தனது சொந்த சொத்தை அல்லது தனது சொந்தமானவர்களின் உரிமைகளை அபகரித்து விட்டது போல் பிறர்களை எப்போதும் தூற்றி கொண்டிருப்பது நபிகள்( ஸல்) அவர்களின் மார்க்க எதிரிகளான அபூஜஹ்ல் உத்பா சைபா போன்ற மக்கத்து காஃபிர்களிடமும் கூட காணப்படாத தீய குணமாகும்
ஒரு விதத்தில் இவ்விசயத்தில் மக்கத்து முஸ்ரிகீன்களே இவர்களை விட மேலானவர்கள்
பொதுதளத்தை சமூகத்தை பிளக்கும் தளமாகவும் சமுகத்தை அவமானப்படுத்தும் தளமாகவும் தனிப்பட்ட மனிதனின் அந்தரங்கத்தை பரப்பி அதை ரசிக்கும் தளமாகவும் எப்போதும் பயன் படுத்தும் அறிவீன முஸ்லிம்கள் இனிமேலாவது சிந்தித்து பார்க்க முன் வர வேண்டும்
இல்லையானால் இதே போன்ற ஒரு அவமானத்தை நிச்சயம் நீங்களும் சந்திக்க நேரிடும் என்பதை மறவாதீர்
காரணம் உங்களால் பாதிக்கப்பட்டவனின் அந்தரங்க பிராத்தணை எப்போதும் ஏக இறைவனால் வீண் அடிக்கப்படாது
அதன் விளைவை காண உங்களுக்கு நாட்கள் வேண்டுமானால் நீடிக்கலாம் ஆனால் உங்கள் வாழ்நாளிலேயே பாதிக்கப்பட்டவன் மனமுறுகி செய்த பிராத்தணையின் விளைவை நிச்சயம் சந்திப்பீர்கள் நீங்களே சான்றுகளாக மாறுவீர்கள்
**************
பாதிக்கப்பட்டவனின் துஆ பிரயாணத்தில் செல்பவனின் துஆ தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ மறுக்கப்படுவது இல்லை
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1828
***************
இந்த (துல்ஹஜ்)மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த(அரஃபா) நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர்உடமைகள் புனிதமானவை
ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புகாரி 1652
لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَيْنَ النَّاسِ
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை
(அல்குர்ஆன் : 4:114)
நட்புடன் . J இம்தாதி
Comments
Post a Comment