தனி இயக்கம் காணுவதும் சமுதாய பிளவே

        தனி இயக்கம் காணுவதும்

                சமுதாய பிளவே

                  -----------------------------

     07-07-18- சனி  கட்டுரை 1160
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

மனிதனின் சிந்தனைகள் நபருக்கு நபர் மாறுபட்டிருக்கும் போது எந்த சமூகத்திலும் அல்லது இயக்கத்திலும் ஒரே கருத்து எப்போதும் நிலவாது

மாற்று கருத்துக்களையும்  உள்வாங்கி கொண்டு அதில் உடன் பாடு இல்லாத பட்சத்தில் அவைகளுக்கு செவி சாய்க்காது உடன்பாடு இருக்கும் விசயங்களில் ஒன்றாக இணைந்து பயணிப்பதே முஸ்லிம்  சமூகத்தின் கண்ணியத்திற்க்கு உவந்ததாகும்

கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி அல்லது விருப்பு வெறுப்புகளை காரணம் காட்டி மாற்று வழிகளை தேர்வு செய்து  பயணித்தால் நாளுக்கு நாள் இயக்க பிளவுகளும் மாறுபட்ட தலைமைகளும் தான் மாறி மாறி உருவாகுமே தவிர நமது சமுதாயத்தின் வீரியம் நிச்சயம் மடிந்தே போகும்

கடந்த 25 வருடங்களாக நமது தமிழக முஸ்லிம்களிடம் இவ்விசயத்தில் தான் சைத்தான் தந்திரமாக வெற்றி கண்டு வருகிறான்

இதற்க்கு மூல காரணம் பாமர மக்களின் மார்க்க அறியாமையாகும்

குறிப்பாக இவ்விசயத்தில் மக்களை மூளை சலவை செய்யும் இடத்தில் சில மார்க்க அறிஞர்களே முன்னிலை   வகிப்பது கண்டனத்திற்க்கு உரியதாகும்

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மக்களின் அறிமுகமும் பிரபல்யமும் பெற்றிருந்தால் உடனடியாக இது போன்ற அறிஞர்களுக்கு  சமுதாயத்தை  பிளவு படுத்தி தந்திரமாக  தனி இயக்கத்தை உருவாக்குவது  வாடிக்கையாகி விட்டது

ஒரு இயக்கத்தில் அங்கமாக இருக்கும்  வரை அந்த இயக்கத்தை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது

அதன் பின் அந்த இயக்கத்தில் இருந்து வேறு பல காரணங்களால் பிரிந்து விட்டால் அல்லது நீக்கப்பட்டு விட்டால் அந்த இயக்கத்தை எதிரிகளை போல் தூற்றியும் அதுவரை கடுமையாக விமர்சித்த  பிற இயக்கங்களின் விசயத்தில் மென்மையை கடை பிடிப்பதும் இவர்களின் தந்திரமாகும்

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு இயக்கம் கருத்துக்களை சொன்னால் அதற்க்கு உடன்பட வேண்டும் அதற்க்கு மாற்றமான கருத்துக்களை சொல்லும் போது அவ்விசயத்தில் தனிமையாக செயல் படுவது குற்றம் இல்லை

அதே நேரம் அதற்காக வேறு ஒரு இயக்கத்திற்க்கு பின்னால் தாவி  சென்றாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை

காரணம் நாம் அறிந்த முறையில் முஸ்லிம்களாக வாழ்வதை எந்த ஒரு  இயக்கமும் நம்மை நிர்பந்தமாக தடுக்க இயலாது

அதை மீறி தடுத்தால் தனித்து இயங்கவோ அல்லது அதற்க்கு ஏற்ற நிலையில் இயங்கி கொண்டுள்ள வேறு பல இயக்கங்களில் அங்கம் வகிப்பதே நமக்கு போதுமானது

பிறர்களை தூற்றவும் அல்லது போற்றவும் அல்லது ஜால்ரா அடித்து கொண்டு அவர்கள்  இழுக்கும் இடம் எல்லாம் பின் செல்வதற்க்கு நாம் செம்மறியாட்டு கூட்டம் அல்ல என்பதை உணரும் வரை நம் சமூகம் இன்னும் பல இயக்கங்களுக்கு பின்னால் சென்றே மறுமை இலட்சியத்தை நாசமாக்கி விடுவர்

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا  وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ 

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்

நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்  உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து

அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள் இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்

நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்

         (அல்குர்ஆன் : 3:103)

இதை பற்றிய சிறு வீடியோ உரையை Yaseen imthadhi YouTube link கீழே தரப்பட்டுள்ளது

https://youtu.be/vCXYd20yYRA

           நட்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்