நரமாமிசம் உண்ணும் முஸ்லிம்கள்
செத்த மனித மாமிசம் உண்ணும்
முஸ்லிம்கள் சதவிகிதம் அதிகரிப்பு
•••••••••••••••••••••••••••••••••••••••••
14-07-18- சனி கிழமை கட்டுரை 1163
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பன்றி இறைச்சி உண்ணுவது ஹராம் அதை உண்ணுவதால் மறுமையில் தண்டனை உண்டு
ஆனால் அதற்க்கு நிறந்தரமான நரகம் இல்லை
ஏன் மனிதனின் மலம் உண்ணுவதும் கூட ஹராம் தான்
ஆனால் அதை ஒருவன் உண்டு விட்டால் கூட மறுமையில் அதற்காக நிறந்தரமாக நரகில் நுழைக்கப்பட மாட்டான்
ஆனால் கொலை செய்தல் பெரும்பாவங்களில் ஒன்றாகும் நிறந்தரமாக ஒரு மனிதனை நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்கும் காரியமாகும்
அந்த கொலையில் மிகப் பெரிய கொலை என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்வது ( பித்னா ) என்ற சமூக குழப்பத்தை எற்படுத்துவதை தான்
இந்த பித்னா என்பது இன்று மார்க்க அறிந்த முஸ்லிம்களிடம் கூட சர்வ சாதாரணமாகி விட்டது
நான்கு நபர்கள் ஒன்றிணைந்தால் அவர்கள் பிறர்ளை பற்றி பித்னா ( அதாவது கோள் புறம் அவதூறு கிண்டல் கேலி போன்றவைகளை மட்டும் ) தான் பேசுவார்கள் என்பதே தற்போது வாடிக்கையாகி விட்டது
பன்றி இறைச்சியை வெறுக்கும் இவர்கள் மனிதனின் மலத்தை உண்ணுவதை வெறுக்கும் இவர்கள் பன்றி இறைச்சியை விட மனிதனின் மலத்தை விட மோசமான செத்துப்போன மனித இறைச்சியை உண்ணுவதை ஒரு பாவமாக கூட கருதாமல் இருப்பது மிகவும் வேதனைக்கு உரிய விசயமாகும்
குறைகளை பேசுவதையே தங்களது ஈமானின் அடையாளமாக கருதுகின்றனர்
ஒரு மனிதன் ஒரு பாவத்தை ஒரு முறை செய்தால் அதே பாவத்தை பல முறை பல இடங்களில் விமர்சித்தே இவர்கள் பாவிகளாக வலம் வருகின்றனர்
பாவிகளில் மிகப்பெரியவன் பிறர் பாவத்தை எப்போதும் பேசி கொண்டிருப்பவனே என்ற ஹதீஸ் கலை வல்லுனர்களில் கூற்றை உண்மை படுத்தி வரும் முதலாம் பாவிகள் இவர்களே
அவர் நல்லவரா இவர் நல்லவரா என்று ஆராயும் இவர்களுக்கு இவர்கள் நல்லவர்களா என்று சுய பரிசோதனை செய்ய கூட நேரம் கிடைக்கவில்லை
சுருங்க சொன்னால் பாவங்களுக்கே அப்பாற்பட்ட பிறவிகளாக இவர்கள் தங்களை நினைத்து கொள்வது தான் இதற்க்கு மூல காரணம்
இவர்கள் மறுமையில் வருந்த போகிறார்களே தவிர வாழ்நாளில் திருந்தப்போவது இல்லை என்றே நினைக்க தோணுகிறது
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்
ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்
அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்
உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!)
அதனை நீங்கள் வெறுப்பீர்கள்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்
(அல்குர்ஆன் : 49:12)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment