வாகன விபத்து

  வாகன விபத்துகளை தவிர்ப்பீர்

                  ஓட்டுனர்களே

12-07-18- வியாழன்  கட்டுரை 1162
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

உலகில் ஏற்படும் மரணங்களில் இயற்கை மரணத்தை விட செயற்கை மரணங்களே தற்காலத்தில் அதிகம்

அதில் வாகன விபத்துகளால் ஏற்படும் இழப்புகளும் மரணங்களும் அதிகமாக உள்ளது

வாகனத்தை விரைவாக செலுத்துவதில் திறமை இல்லை காரணம் ஆக்ஸ்சுலேட்டர் பகுதியை சிறு குழந்தை முறுக்கினாலும் வாகனத்தின் வேகம் அதிகரிக்கவே செய்யும்

சாலை விதிமுறைகளை மதித்து வாகனத்தை ஓட்டுவதும் விபரீதங்கள் ஏற்படாத வண்ணம் கவனத்தோடு ஓட்டுவதும் தான் தேர்ச்சி பெற்ற ஓட்டுனருக்கு எடுத்து காட்டாகும்

மதுபானத்தை அருந்தி தனது இரு கால்களையே சரியாக பூமியில் ஊன இயலாதவன் வாகனத்தை ஓட்டி அதன் மூலம் ஒரு உயிர் போவதற்க்கு காரணியாக இருந்தால் அவனும் இஸ்லாமிய பார்வையில் கொலை குற்றவாளியே

காரணம் ஒரு மனிதனின் மரணத்திற்க்கு பின்னால் அல்லது ஒருவரின் தவறான வாகன ஓட்டுதலின் காரணமாக விபத்தின் மூலம் ஒருவர் முடமாக்கப்பட்டதற்க்கு பின்னால் அவனை நம்பி ஒரு குடும்பமே சிரமப்படும் என்பதை மறந்து விட கூடாது

பாசமான பிள்ளை கத்தியை வாங்கி கேட்கும் போது கத்தியை  முறையாக நமது பிள்ளை  பயன்படுத்துவானா ? என்று யோசிக்கும் பெற்றோர்கள் தனது பிள்ளை முறையாக பயிற்சி பெறாமலேயே இரு சக்கர வாகனத்தை வாங்கி கேட்கும் போது அதை பற்றி சிந்திக்காது உடனடியாக இரு சக்கர வாகனத்தை வாங்கி கொடுப்பது  கண்டனத்திற்க்கு உரியதாகும்

விபத்துகளுக்கு பின்னால் லட்சங்ளை செலவு செய்து தனது உடல் உறுப்பை சீர் செய்தாலும் அது நமது வாழ்வில்  இயற்கை போல் செயல்படாது என்பதை வாகன ஓட்டுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

நமக்கு நன்றாக ஓட்ட தெரியுமே என்று நம்பிக்கை வைக்காது நம்மை சுற்றி வரும் இதர வாகனங்களை ஓட்டி வருவோரில்  சரியாக முறையாக பயிற்சி பெறாதவர்களும் வாகனத்தை ஓட்டி வருவார்கள்  என்ற முன்னெச்சரிக்கை நம்பிக்கையே நம்மை வாகன விபத்துகளில் இருந்து காப்பாற்றும் என்பதை பொது மக்களும் உணர வேண்டும்

வாகன விதிமுறைகளை விதிக்கும் அரசாங்கம் அந்த வாகனத்தை பயணிக்க செய்யும் சாலைகளை எப்போதும் சீராக அமைத்திருப்பதும் கண்காணிப்போடு செயல்படுவதும் அரசாங்கத்தின் முக்கியமான கடமை என்பதை உணர வேண்டும்

                 ------------------------
  பயிற்சி பெற்ற வாகனம் பயிற்சி
   பெறாத வாகனம் இரண்டுக்கும்
        பாதைகள் ஒன்று அல்ல
                            ******

420. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது பயிற்சி பெற்ற குதிரைகள் 'ஹஃப்யா' என்ற இடத்திலிருந்து 'ஸனிய்யதுல் வதா' என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும்

பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் ( மக்கள் நடமாட்டம் குறைந்த)  'ஸனியதுல் வதா' என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள்

அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்

   நூல் - ஸஹீஹ் புகாரி
                       **********

وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏ 


நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள்

நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 4:29)

            நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்