இஸ்லாமிய பார்வையில் வசிக்கும் இல்லம்

   இஸ்லாமிய பார்வையில் வசிக்கும்
                     இல்லங்கள்

      தொடர் கட்டுரை பாகம் ஒன்று

             ••••••••••••••••••••••••••••

      ஆடம்பரமாக வீடு கட்டலாமா  ?

             -----------------------------
    01-07-18- ஞாயிறு- கட்டுரை 1159
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************

                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

ஒரு மனிதன் வெயில் மழை போன்ற இன்னல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளவும்

குடும்ப வாழ்வை மகிழ்வாக நடத்தவும் தேவையான ஒன்றே வீடு

இதற்க்கு ஏற்ற நிலையில் ஒரு மனிதன் தனது வீட்டை கட்டினால் அதுவே அவனுக்கு போதுமானது

வீடு கட்டும் போது அதை தனது வசதிகளுக்கு ஏற்று சிறியதாக பெரியதாக ஆடம்பரமாக கட்டி கொள்ளும் நிலை தான் தற்போது  உள்ளது 

இஸ்லாமிய பார்வையில் தேவைக்கு மிஞ்சிய நிலையில் ஆடம்பரமாக ஒரு மனிதன் தனது வீடுகளை கட்டுவது கூடுமா ? கூடாதா ?  என்று முஸ்லிம்களிடம் கேள்வி  கேட்கப்பட்டால் அதற்க்கு பதில் கூடாது என்பதே அநேகமானவர்களின் கருத்தாக  வெளிப்படும்

இவ்வாறு கூறுவதற்க்கு சில பலவீனமான ஹதீஸ்கள் அவர்களுக்கு காரணமாக இருந்தாலும் மார்க்கத்தின் ஆய்வு அடிப்படையில் சிந்திக்கும் போது ஒரு மனிதன் தனது வசதிகளுக்கு ஏற்று எப்படி வேண்டுமானாலும் தனது வீட்டை கட்டிக்கொள்ளலாம் என்பது தான் சரியான மார்க்க முடிவாகும்

அதே வேளை  இஸ்லாமா ? அல்லது ஆசையாக கட்டிய  இல்லமா ?  என்ற சூழ்நிலையும் கேள்வியும் வாழ்வில்  ஏற்படும் போது அந்த நேரத்தில் வீட்டுக்கு முக்கியத்துவம் அளித்து இஸ்லாத்தை இரண்டாம் பட்சமாக கருதுவது தான் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட காரியமாகும்

நபி சுலைமான் (அலை)அவர்களின்  அரண்மனையை அண்டை  நாட்டு மகாராணி கண்ட  போது அந்த மகாராணியே ஆச்சரியப்படும் அளவு நபி சுலைமான் (அலை) அவர்களின் அரண்மனை  பிரமாண்டமாக உயரிய பளிங்கு கற்களால் கட்டப்பட்டு இருந்தது என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்

இறைவனின் கோபத்தால்  ஆது கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட பின் அவர்களின் பின் தோன்றல்களாக வாழ்ந்த சமூகம் தங்களது வீடுகளை தேவைக்கு மீறிய  மாளிகைகளாக அமைத்திருந்ததையும் அவ்வாறு அமைத்து இருந்ததை இறைவன் அவர்களுக்கு வழங்கிய பாக்கியமாகவும் இறை அருளாகவும் திருகுர்ஆனில்  குறிப்பிடுகிறான்

மதீனாவில் பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இறையில்லத்தின் விசாலமான நிலத்தை கூட நபி (ஸல்) அவர்கள் தனது சொந்தமான நிலத்தில் இருந்து தான் அல்லாஹ்வுக்காக வழங்கினார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்

ஒரு மனிதனுக்கு தேவையான இருப்பிடத்தை விட கூடுதலான இருப்பிடத்தை நபி( ஸல்) அவர்கள் மதீனாவின் துவக்க காலத்திலே பெற்றிருந்தார்கள் என்று சொன்னால் அதே இடத்தில் ஹலால் ஆன முறையில் தனது வீட்டை வசதிக்கு ஏற்று  பெரிதாக கட்டி கொள்வதில் குற்றம் ஏதும் இல்லை

இனிமேல் கட்டும் இல்லங்களை ஆடம்பரமாக கட்டி கொள்ளுங்கள் என்பதை வலியுருத்துவதற்காக எழுதப்பட்டுள்ள கட்டுரை அல்ல இது

மாறாக தனது வசதிக்கு ஏற்ற நிலையில் ஒரு மனிதன் தனது வீட்டை கட்டினால் அதை கூடாது என்று குறை சொல்லக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவாகும்

அதே நேரம் கோடிகளை கொட்டி மாளிகைகளை எழுப்பி அடையும் மகிழ்ச்சியை விட

அந்த கோடிகளை மறுமையில் நிலையான நன்மைகளை பெறுவதற்க்கு பல விதங்களில் மார்க்கம் கற்று தந்த முறையில் செலவு செய்ய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது

தன்னை சுற்றியுள்ள உற்றார் உறவினர் மற்றும் அண்டை வீட்டில் வாழும் மக்கள் அவர்களின் வாழ்வில் சிரமப்படுவதை கண்ணால் கண்ட பிறகும் அவர்களை தங்களது பொருளாதாரத்தால் கவனிக்காது தனது சுயநலத்தை மாத்திரம் லட்சியமாக கொண்டு வாழ்வதும் முஸ்லிம்களின் நல்ல பண்பாடு அல்ல

    *******************************
  நபி சுலைமான் (அலை) அவர்களின்
                   அரண்மனை
                          ------------

قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌  فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏ 

அவளிடம் இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக என்று சொல்லப்பட்டது

அப்போது அவள்
(மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்

எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்

(இதைக் கண்ணுற்ற ஸுலைமான்) “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான் என்று கூறினார்

(அதற்கு அவள்) இறைவனே நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன் அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்

(அல்குர்ஆன் : 27:44)

       ****************************
     மாளிகையும் இறையருள்
                ***************

وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا‌  فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‏ 
இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்)

          (அல்குர்ஆன் : 7:74)

   தொடரும்  நட்புடன் J .இம்தாதி





Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்