ரமலான் என்றால் என்ன

        ரமலான்  என்றால் என்ன ?
                    !! 23-06-17
                -----------------------------
               J. யாஸீன் இம்தாதி
                       !+++++++++!

                கட்டுரை எண் 1103
                  بسم الله الرحمن الرحيم.     
   →←→←→←→←→←→←→←→  

ரமலான் வரும் முன் ரமலானை வரவேற்ப்பதில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்களுக்கும் பல வருடங்களாக ரமலான் மாதத்தில் கடமையான நோன்புகளை நோற்க்கும் முஸ்லிம்களுக்கும் ரமலான் என்ற வார்த்தைக்கான விளக்கங்களும் பொருளும் அறியாமல் இருப்பது ஆச்சரியங்களில் ஒன்று தான்

ரமலான் என்பது அரபு வார்த்தையா ? அல்லது ரம்ஜான் என்பது அரபு வார்த்தையா ? என்பதும் கூட அறியாதவர்களே முஸ்லிம்களில் மிகவும் அதிகம்

மாற்றார்களில் ஒருவர் ரமலானுக்கு என்ன பொருள் என்று கேட்டால் மாத்திரமே ரமலானுக்கு என்ன பொருள் என்று அஜ்ரத்மார்களிடம் பொருள் கேட்டு சுற்றுவார்கள் என்றே தோணுகிறது

காரணம் மார்க்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் முஸ்லிம் சமூகத்திடம் மிகவும் குறைவாக காணப்படுவதே இதற்க்கு மூல காரணமாகும்

இஸ்லாத்தை பற்றி மாற்றார்கள் சந்தேகம் கேட்கும் போது அதற்கான பதில்களை உடனடியாக சொல்லும் திறன் பெற்றவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டுமே தவிர மாற்றார்கள் கேட்டதற்க்கு பிறகு அதற்க்கு விடை தேடி சுற்றும் நபர்களாக முஸ்லிம்கள் இருக்க கூடாது அவ்வாறு சுற்றினால் அவர் இஸ்லாத்தின் பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் தகுதியை பெற்றவர் அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

   ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

ரமலான் என்பதற்கு கரித்தல், பொசுக்குதல், சாம்பலாக்குதல் என்று பல வகையில் விளக்கம் தரப்படுகிறது

கோடைகால வெப்பத்தின் அனல் காற்றை நாம் அனுபவிக்கின்றோமே தவிர அந்த வெப்பத்திற்க்கு மூல காரணமாக திகழும் சூரியனின் நேரடி நெருப்பு ஜுவாலையை நாம் அனுபவிப்பது இல்லை அவ்வாறு அனுபவிப்பது சாத்தியமும் இல்லை சுருக்கமாக சொன்னால் தீயும் அதன் கங்குகளும் நேரடியாக படாமல் ஒரு பொருளை அதன் வெப்பம் தாக்கி கரிப்பது என்பது தான் (ரம்லா) என்ற வார்த்தையின் விளக்கமாகும்

அந்த வார்த்தையின் உடன் பிறப்பே ரமலான் என்பதாகும்

      +++++++++++++++++++++++

ரமலான் மாதம் என்பது முஸ்லிம்கள் மறுமையில் வெற்றி பெறுவதற்க்கு நன்மைகளை தருவதை போலே அந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நன்மைகளாலும் தவ்பா எனும் பாவமன்னிப்பாலும் நாம் அந்த மாதம் வரை நம் வாழ் நாளில் செய்த பாவங்கள் அழிக்கப்படுகிறது அதாவது இறைவனின் கருணையால் அந்த பாவங்கள் கரிக்கப்பட்டு விடுகிறது இதற்க்கு பொருத்தமாக ரமலான் எனும் வார்த்தையும் அமைந்து இருக்கிறது என்பது தான் எதார்த்தம்

    ++++++++++++++++++++++++

ஒரு பொருள் கரிவதாக அதாவது சாம்பலாகுவதாக இருந்தால் அந்த பொருளை சாம்பலாக்கும் நெருப்பு எனும் சாதனம் அல்லது அதன் உஷ்னம் மிகவும் தேவையானதாகும் அந்த அடிப்படையில் ரமலானில் நமது பாவங்கள் சாம்பலாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு வருடமும் ரமலானை குதூகலமாக வரவேற்றால் மட்டும் போதாது

மாறாக அந்த பாவங்களை கரிக்கும் அளவு நெருப்பு எனும் அமல்கள் நம்மிடம் அதிகம் வெளிப்பட வேண்டும்
அந்த சாதனங்கள் தான்

1- தொழுகை

2- நோன்பு

3- தான தர்மங்கள்

4- தஸ்பீஹ்கள்

5- திருக்குர்ஆன் ஓதுதல்

6- இஃதிகாப் கடை பிடித்தல்

7- தவ்பா செய்தல்

8- ஜகாதுல் பித்ரை நிறைவேற்றல்

9- இறையச்சத்தை வளர்த்தல்

10- நல்லுபதேசங்களை செவிமடுத்தல்

وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا‏

மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்

ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்

(அல்குர்ஆன் : 4:27)

وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى‏

எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்

(என்று கூறினோம்)

(அல்குர்ஆன் : 20:82)

நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

     நூல் - ஸஹீஹ் புகாரி

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔ اِنَّهٗ كَانَ تَوَّابًا

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 110:3)

                நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்