சஹ்ரு நேர தொலைகாட்சி நிகழ்ச்சி

        புனித ரமலான் மாதத்தில்
               இபாதத்துகளை
         குறைக்கும் சஹ்ரு நேர

         ♦சிறப்பு நிகழ்ச்சிகள்♦

   ============================

           J.யாஸீன் இம்தாதி
   Bismillahir Rahmanir Raheem

             *******************

                    
وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ

இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!

          (அல்குர்ஆன் : 52:49)

اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏ 

அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே  பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும்

ஸஹர் நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்

           (அல்குர்ஆன் : 3:17)

                 ****************

ரமலான் புனிதமான மாதம் என்பது  அனைவரும் அறிந்த ஒரு தகவலேயாகும் 

இந்த ரமலான் மாதத்தில்  இபாதத் செய்வதின் மூலமாகத்தான் இறைவனை அதிகம் நாம் நெருங்க முடியுமே தவிர

இபாதத்தோடு நேரடி தொடர்பில்லாத எந்த ஒன்றையும் இந்த ரமலான் மாதத்தில் நபி ஸல் அவர்கள் செய்தார்கள் என்றோ அல்லது   செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள் என்றோ எந்த ஹதீசிலும் ஆதாரம் இல்லை

                    ***********

சில வருடங்களுக்கு முன்னால் மக்களை சஹ்ருக்கு எழுப்புகிறோம் எனும் பெயரிலே விடிய விடிய தெருக்களில் பாடல்களை பாடி வருவதும்  விடியும் வரை விழித்து இருந்து அரட்டையடிப்பதுமாய் மக்கள் ரமலான் இரவுகளை குறிப்பாக சஹ்ரு நேரத்தை வீணாக்கி வந்தனர்


அந்த மோசமான நிலை மாறி  இன்று முஸ்லிம் சமூகத்தில் ரமலான் என்று சொன்னாலே விஷேசமான பயான்களை ஏற்பாடு செய்வது தான் ரமலானின் முக்கிய இபாதத்தாக நடைமுறையில் கருதப்பட்டு வருகின்றது

நன்மையான தகவல்களை கேட்பது என்ன குற்றமா என்ற கேள்வி தான் இதற்க்கு தரப்படும் ஆதாரமாக இருக்கின்றதே தவிர

மற்றபடி நபி (ஸல் ) அவர்கள் இவ்வாறு தான் ரமலான் இரவுகளில் குறிப்பாக சஹ்ரு நேரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி காட்டினார்கள் என்பதற்க்கு எந்த விதமான சான்றுகளும் இல்லை

அதிலும் குறிப்பாக சஹ்ரு என்று சொல்லப்படுகின்ற நேரம் தான்  இறைவனை துதிப்பதற்க்கும் அவனிடம் பிராத்தணை செய்வதற்க்கும் ஏற்றமான நேரமாகும் என்பதை திருக்குர்ஆன் 3-17 வசனம் சந்தேகத்திற்க்கு இடம் இல்லாது தெளிவாக கட்டளை போடுகிறது 

இந்த நேரத்தில் தொலைகாட்சிகளில்  மார்க்க கேள்வி பதில் போட்டிகள் 

அதற்க்குரிய பரிசு அறிவிப்புகள்

என்று பல இயக்கங்களின் சார்பாகவும் தனி நபர்கள் சார்பாகவும் பல வருடம்  நடத்தப்பட்டு வருகின்றது 

சில இயக்கங்களின் நிகழ்ச்சிகள் பள்ளிவாசல்களில்  பஜ்ருக்கு பாங்கு சொல்லிய பின்பும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை  பார்க்கிறோம்


இவைகளில் கவனம் செலுத்தி அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் சுயமாக செய்ய வேண்டிய பல அமல்கள் பாழ்படுத்தப்படுகின்றது

நன்மைகள் எனும் பெயரால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு  பல இயக்கங்களும் ரமலானுக்கு முன்பாகவே  விளம்பரம் செய்ய தொடங்கி  விடுகின்றனர்

பேசும் சொல் போனால் திருப்பி எடுக்க இயலாது என்பது அக்காலம்  ஆனால் தற்போதைய அறிவியல் காலத்தில் யாருடைய பேச்சையும் எப்போது வேண்டுமானாலும் கேட்க முடியும் என்ற சூழலே உள்ளது

பயான் கேட்க ஆர்வம் உடையோர் அவைகளை வேறு பல நேரங்களில்  கேட்டு கொள்ளுங்கள் அதற்க்கு இந்த புனிதமான சஹ்ரு நேரத்தை பயன்படுத்தாதீர்கள்


மார்க்கத்தை அறிவது குற்றமா என்ற வாதம் அவசியமற்றது காரணம் மார்க்கத்தை இந்த சஹ்ரு நேரத்தில் தான் அறிய வேண்டும் என்ற ஒரு நிர்பந்தம் இல்லை

அது போக இபாதத்துகளில் கவனம் செலுத்த வேண்டிய  ஒவ்வொரு ரமலான் சஹ்ரு நேரத்தையும்  மார்க்கத்தை அறிவதையே குறிக்கோளாக வைத்து செயல் பட்டால்   எத்தனை வருடங்கள் இதை தொடர்ந்து கொண்டே இருப்பது ?

ரமலானில் தான் மக்கள் மார்க்கத்தை கேட்பதற்க்கு தயாராக இருக்கின்றார்கள் என்பதற்காக மார்க்கம் சொல்லும்  எதார்தத்தை மறைப்பது முறை அல்ல என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் உணர வேண்டும்


قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا

இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக

          (அல்குர்ஆன் : 73:2)

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا

இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்

          (அல்குர்ஆன் : 17:79)

37 நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

     நூல்  - ஷஹீஹ் புகாரி

             ******************
        திருக்குர்ஆன்  ஓதுதல்
                    ---------------

1902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்

ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார்

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள் ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்

         நூல் - ஷஹீஹ் புகாரி

         *********************

எனவே சிறப்பிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து  கடமையில்லாத காரியங்களுக்கு வக்காலத்து வாங்கும் மனப்போங்கை தவிர்ப்போம்

காரணம்  இது போல் நிகழ்வுகளை கண்டாலே ஏதோ ரமலான் மாதத்தின் நன்மைகளை பெற போவதாக அநேக மக்கள் புரிந்து ரமலானில் செய்ய வேண்டிய இபாதத்துகளை புறக்கணித்து வருவது தான் உண்மை



        நட்புடன்   J.இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்