இறையச்சம் எனும் பர்தா
இறையச்சம் எனும் பர்தாவே
இறைவன் விரும்பும் பர்தா
உணருவார்களா முஸ்லிம் பெண்கள்
!!========================!!
07-05-18- திங்கள் கிழமை
*********************
கட்டுரை எண் 1152
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இறைவனின் கட்டளைக்கு பயந்து அணியப்படும் பர்தா ஒரு வகை
குடும்பவியல் கட்டமைப்புக்காக அணியப்படும் பர்தா ஒரு வகை
பேஷனுக்காக அணியப்படும் பர்தா ஒரு வகை
கணவனின் திருப்தியை பெறுவதற்காக அணியப்படும் பர்தா ஒரு வகை
சமூகத்தின் அவல நிலையை கருத்தில் கொண்டு அணியப்படும் பர்தா ஒரு வகை
திருட்டு குற்றத்தில் தன்னை மூடி மறைப்பதற்காக அணியப்படும் பர்தா ஓர் வகை
காதலனோடும் கள்ள காதலனோடும் மறைமுகமாக ஊர் சுற்றுவதற்காக அணியப்படும் பர்தா ஒரு வகை
வேசி தொழில் செய்யும் நடிகைகள் வெளியில் நடமாடும் போது பிறர்களின் கண்ணில் படாமல் சுதந்திரமாக ஊர் சுற்றுவதற்காக அணியப்படும் பர்தா ஒரு வகை
பர்தா எனும் பெயரில் அந்நிய ஆடவர்களை சுண்டி இழுக்கும் வண்ணம் இறுக்கமாகவும் மெல்லிசாகவும் கலை வண்ணத்துடனும் கவர்ச்சி பொங்கும் விதமாகவும் அணியப்படும் பர்தா
ஒரு வகை
இப்படி இஸ்லாமிய பெண்களும் முஸ்லிம் அல்லாத சில பெண்களும் அணியும் பர்தா (ஹிஜாப்) எனும் ஆடையின் பின்னனியில் பல காரணங்கள் அறிந்தும் அறியாமையினாலும் பினைந்துள்ளது
பர்தா எனும் பெயரில் இவைகளை நியாயப்படுத்தி உலக மக்களின் எதிர் வாதங்களை இது போன்ற பெண்கள் தட்டி கழித்தாலும் பர்தாவின் சட்டத்தை நமக்கு வழங்கிய ஏக இறைவனின் பார்வையில் இவைகளில் எந்த ஒன்றும் மறுமையின் தண்டனைகளில் இருந்து எவரையும் தப்பிக்க வைக்காது
காரணம் உருவத்தை பார்த்தும் அதற்க்கு ஏற்ற நடைமுறையை பார்த்தும் ஓரளவு எடை போடுபவனே இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் ஆவான்
ஆனால் உள்ளத்தில் ஒளிந்துள்ள எண்ணங்களை எடை போட்டு அதற்க்கு ஏற்ற நிலையில் வெளியில் உள்ள செயல்களையும் புடம் போட்டு தீர்வு சொல்லும் ஞானமானவனே நம்மை படைத்த இறைவன்
(உருது வார்த்தையில் )பர்தா என்பதும் அரபு வார்த்தையில் ( ஹிஜாப் )என்பதும் ஒன்றை முழுமையாக மறைக்க வேண்டிய முறையில் மறைப்பதற்க்கு தான் சொல்லப்படுகிறது சுருக்கமாக சொன்னால் திரை அல்லது தடை பொருள் என்று பொருள் ஆகும்
பெண்கள் தங்கள் உடலை வெளியுலகில் மூடி மறைப்பதற்காக பர்தா அணிவதற்க்கு முன் அவர்களின் உள்ளத்தில் இறையச்சம் என்ற பர்தாவை முதலில் அணிவதற்க்கு பயிற்சி கொடுங்கள்
உள்ளத்தின் ஆசாபாசங்களை ஒழுக்க கேடுகளை வெறுத்து ஒதுக்கி பர்தா அணிவதற்க்கு பயிற்சி கொடுங்கள்
ஈமானில் சிறந்த சஹாபிய பெண்கள் தங்கள் வாழ்வில் அணிந்ததும் பர்தா தான்
தற்காலத்தில் சினிமாவில் கவர்ச்சி ஆட்டம் போடும் மும்தாஜ் தமன்னா புவனேஸ்வரி போன்ற நடிகைகள் வெளியுலகில் தங்களை மறைத்து நடக்க அணிந்து நடப்பதும் பர்தா தான்
இதில் சினிமா நடிகைகளை முன்னுதாரணமாக கொண்டு நடக்கும் பெண்களுக்கு உபதேசங்கள் எடுபட போவது இல்லை
இறையச்சத்தை வளர்த்தி மறுமையில் அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஈமானிய பெண்களுக்கு தான் இவ்வகையான உபதேசம் பயனளிக்கும் இன்ஷா அல்லாஹ்
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ يَقُوْلُ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَخْرُجُ فِيْ آخِرِ الزَّمَانِ رِجَالٌ يَخْتِلُوْنَ الدّنُيْاَ باِلدِّيْنِ، يَلْبَسُوْنَ لِلنَّاسِ جُلُوْدَ الضَّاْنِ مِنَ اللِّيْنِ، اَلْسِنَتُهُمْ اَحْلي مِنَ السُّكَّرِ، وَقُلُوْبُهُمْ قُلُوْبُ الذِّئَابِ يَقُوْلُ اللهُ : اَبِيَ يَغْتَرُّوْنَ اَمْ عَلَيَّ يَجْتَرِئُوْنَ؟ فَبِيْ حَلَفْتُ لَأَبْعَثَنَّ عَلي اُولئِكَ مِنْهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيْمَ مِنْهُمْ حَيْرَانًا
கடைசிக்காலத்தில் சிலர் தோன்றுவார்கள், அவர்கள் மார்க்கம் என்னும் போர்வையில் உலகச் செல்வங்களை வேட்டையாடுவார்கள் (தம்மை உலக ஆசையற்றவர்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் என்பதற்காக) ஆடுகளின் மிருதுவான தோலினாலான ஆடை அணிவார்கள்
அவர்களின் நாவுகள் சர்க்கரையைவிட இனிமையானதாக இருக்கும்
ஆனால், அவர்களுடைய உள்ளமோ ஓநாய்களின் உள்ளத்தை போன்றிருக்கும்
நான் இவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்திருப்பதால் இவர்கள் ஏமாந்து விட்டார்களா? அல்லது என்னைப் பற்றிய பயமின்றி என்னுடன் மோத இவர்கள் துணிந்துவிட்டார்களா?
என் மீது சத்தியமாக! நான் இவர்களிலிருந்தே இவர்களுக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்துவேன்
அது இவர்களிலுள்ள அறிவாளிகளையே திகைக்கச் செய்துவிடும்
என்று அல்லாஹுதஆலா கூறுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا، اَلْبَسَهُ اللهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ اَلْهَبَ فِيْهِ نَارًا
எவர் பிரபல்யம் என்ற ஆடையை உலகில் அணிவாரோ
கியாமத் நாளன்று அல்லாஹ் அவருக்கு கேவலம் என்னும் ஆடையை அணிவித்து
அதற்கு நெருப்பை மூட்டிவிடுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் இப்னு மாஜா
***********************
குறிப்பு - பர்தா தொடர்பான சட்டங்கள் அதை பற்றியான கட்டுரைகள் மேலும் ஆடவர்களுக்கும் பர்தா தேவை
என்பன போன்ற தலைப்புகளில் இது வரை பத்து கட்டுரைகளுக்கு மேல் வெளியிட்டுள்ளோம்
அதில் ஒரு பகுதியாக மாறுபட்ட பார்வையில் எழுதப்பட்ட கட்டுரையே இந்த சிறு ஆக்கம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment