விரோதங்களை விரட்டி அடிப்பீர்
விரோதங்களை விரட்டி அடிப்பீர்
!!========================!!
12-05-18- சனி கிழமை
*********************
கட்டுரை எண் 1153
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஒரு மனிதனின் மீது எந்தளவு நாம் தேவையற்ற வெறுப்பை நமது உள்ளத்தில் மூடி வைத்துள்ளோமோ அந்தளவு அவன் விசயத்தில் மார்க்க வரம்புகளையும் அநாகரீகமான செயல்பாடுகளையும் அரங்கேற்றம் செய்வோம்
நேரடியாக நம்மால் அவ்வாறு நடக்க இயலாவிட்டாலும் மறைமுகமாகவோ அல்லது பிறர்களின் வஞ்சனை துணை கொண்டோ அநாகரீகமாக நடப்பதற்க்கு தான் சாத்தான் அதிகமாக நமக்கு உறுதுணை செய்வான்
இதன் விளைவாக நமக்கோ அல்லது நம்மால் வெறுக்கப்பட கூடிய நபருக்கோ சங்கடங்களையும் மன உளைச்சல்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் குடும்ப பிளவையும் சமூக பிளவையும் நட்பு பிளவையும் ஏற்படுத்தி ரசிப்பது தான் சாத்தானின் முக்கிய பணியாகும்
இந்த மோசமான நிலையில் இருந்து நம்மை நாம் விடுவிப்பதாக இருந்தால் அதற்க்கு இஸ்லாம் கற்று தரும் நற்போதனைகள் மிகவும் எளிமையானது
1- பிறர்களின் தனிப்பட்ட வாழ்வில் அல்லது தனிப்பட்ட விவகாரங்களை பேசும் சபைகளிலோ அல்லது பேசும் நட்புகளையோ விட்டு எப்போதும் நாம் தூரம் விலகி இருக்க வேண்டும்
2- ஒருவரை பற்றி தெளிவான ஞானம் இன்றி பரப்பப்படும் அல்லது மூன்றாம் நபரால் கேள்வி படும் தகவல்களை எல்லாம் அவசியமின்றி ஆராய்வதற்க்கும் விவாதிப்பதற்க்கும் நம் நேரத்தை எப்போதும் ஒதுக்க கூடாது
3- நம்மால் மனஉளைச்சல்களுக்கு உள்ளாக்கப்படும் நபர்களின் நிலையில் இருந்து அவர்களின் தரப்பை நேர்மையாக சிந்திப்பதற்க்கு முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்
4- யார் விசயத்தில் நாம் தலையீடு செய்தாலும் அந்த விசயத்தில் நாம் தலையீடு செய்வதால் மறுமையில் நமக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்ன அல்லது அவ்வாறு தலையீடு செய்யாமல் இருப்பதால் மறுமையில் நமக்கு கிடைக்கவிருக்கும் தண்டனைகள் என்ன என்பதை ஒரு நாளில் சில முறையேனும் மார்க்க ரீதியில் உரசி பார்க்க வேண்டும்
குறிப்பாக பணம் அதிகாரம் புகழ் போன்ற பாக்கியங்களை பெறும் போது தான் இந்த தீய குணங்களில் மனிதன் அதிகமாக மூழ்கி விடுகிறான்
யா அல்லாஹ் எனக்கு நற்குணத்தை தருவாயாக என்று அன்றாடம் பிராத்தணை செய்வதோடு பிறர்களின் விசயத்தில் தேவையற்று நுழைவதிலும் எனக்கு வெறுப்பை தருவாயாக என்று பிராத்தணை செய்ய கற்று கொள்ளுங்கள்
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
முஃமின்களே!
(சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்
ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்
அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்
உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன் மிக்க கிருபை செய்பவன்
(அல்குர்ஆன் : 49:12)
عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مِنْ حُسْنِ اِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيْهِ
ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment