பிறை விவாதங்கள்

       ^^   பிறை விவாதங்களால்  ^^

      பாழாகும் ரமலான் நன்மைகள்

             !! ================!!

   Bismillahir Rahmanir Raheem
                 •============•

           *J.யாஸீன் இம்தாதி*
                 --------------------

இந்த கட்டுரை பிறை விசயத்தில் யாருடைய நிலைபாடு சரி என்பதை விளக்கும் கட்டுரை அல்ல

மாறாக வருடா வருடம்  பிறை கருத்து வேறுபாடுகளால் சரியான முடிவை எடுக்க முடியாமல் திணறும் பாமரர்கள் தங்கள் நிலை பாட்டை எந்த முறையில் அமைப்பது மார்க்க முறையில்  சிறந்தது

மேலும்  நம் சமூகத்திற்க்கு தற்காலத்தில் எது  உவந்தது என்பதை ஆதாரத்தோடு சொல்லும் கட்டுரையே  


இதை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பமே

   இப்படிக்கு J.யாஸீன் இம்தாதி

           (++++++++++++++++)

ரமலான் மாதம் பிறக்கும் போதே பிறை வாதமும் அதை ஒட்டிய குற்றசாட்டுகளும் காரசாரமாக நடப்பதை கடந்த பல வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம்

இதில் அரிதான சில நபர்கள் வருடம் முழுவதும் பிறைகளை பற்றி பேசியும் எழுதியும் வருகின்றனர்

ஆனாலும் இது போல் பேச்சுக்கள் எழுத்துக்கள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திற்க்கு இடையில் பிளவை ஏற்படுத்தியதோடு மாற்றார் பார்வையில் இஸ்லாமியர்களை பற்றிய ஒரு குருகிய பார்வையயும் தான் ஏற்படுத்தி உள்ளது

இத்தகைய சூழலில் ஒரு நடுநிலை போக்கை கடை பிடிப்பதே பலர்களின் எண்ணமாக பிரதி பலிக்கிறது அதுவே தற்போது தேவையான ஒன்றாக உள்ளது

அப்படிப்பட்ட மக்களுக்கே இந்த சிறு பதிவு என்பதை முதலில் நினைவு படுத்துகின்றேன்


இஸ்லாத்தை பொறுத்தவரை கடமைகள் மூன்று  வகைப்படும்

ஒன்று மார்க்க வணக்க வழிபாடுகளை  நினைக்கும் போது அதை தனியாகவே நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் உள்ள தனிப்பட்ட  வணக்க வழிபாடுகள்

உதாரணமாக தொழுகை தர்மம் போன்றவையாகும்

இவைகளை நிறைவேற்றுவதற்க்கு யாருடைய துணையும் அவசியம் இல்லை

மற்ற ஒன்று ஒரு முஸ்லிம்  நினைத்தாலும் அதை தனியாக நிறைவேற்ற முடியாத சூழல் உள்ள செய்கைகளாகும்

உதாரணமாக  திருமணம் செய்தல் பெருநாள் கொண்டாடுதல்  நோன்பு நாளை துவக்குதல்   போன்றவைகளாகும்

முன்றாவது  இஸ்லாமிய  ஆட்சி அதிகாரம்  இருக்கும் சூழலில் மட்டும் செய்ய இயலும் என்ற நிலையில் உள்ள காரியங்களாகும்

உதாரணமாக இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் அந்த நாடுகளின்  நிர்வாக முறை சீர்திருத்தங்கள்

       +++++++++++++++++++

இதில் எதற்க்கு நமக்கு வலிமை இருந்தும் அதை செயல் முறை படுத்த முயற்சிக்கவில்லையோ  அது போன்ற காரியங்களை செய்யாது வேண்டுமென்றே  புறக்கணித்தால் மட்டுமே இறைவனின் பார்வையில் நாம் குற்றவாளி ஆவோம்

ரமலான் பக்ரீத் பிறையை பொருத்த வரை அதில் எதை   நாம் தனிப்பட்டு முடிவு செய்தாலும் அதை ஒரு ஜமாத் முறையில் நம்மால் நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை

ஒரே ஜமாத் நிர்வாகிகள் கூட  இந்த விசயத்தில் கருத்து  வேறு பட்டால் கூட அப்போதும் ஜமாத்துகளில் குழப்பம் ஏற்படும் சூழலை பார்க்கிறோம்

ஒரு வேளை பெருநாள் பிறையை தனிப்பட்டு முடிவு செய்தாலும் பெருநாள் தொழுகையை  நம்மால் தனியாக நின்று  தொழ முடியுமா?

அவ்வாறு கொண்டாடினாலும் அதில்  எதார்த்தமான பெருநாள் மகிழ்வை நம்மால்  அடைய முடியுமா?

அல்லது இந்த ஒன்றை காரணம் காட்டி எந்த ஜமாத்தில் நாம் அங்கம் வகிக்கின்றோமோ அந்த ஜமாத்தை முற்றிலும் புறக்கணிப்பது  தேவைதானா?

இத்தகைய சூழலில் நம் தனிப்பட்ட முடிவால் நம் சமூகத்திற்க்கு பலன் என்ன?

இதில் வீராப்பு காட்டி நம் சமூகம் சாதித்தது என்ன?

என்பதை தனியாக முடிவு செய்ய இயலாத சூழலில் இருக்கும் பாமரர்கள் புரிய கடமை பட்டுள்ளனர் 


அது போக பெருநாள் ஹதீஸ்களை பொருத்தவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைதூதராக இருக்கின்ற காரணத்தால்  சமூகத்தின் சூழலுக்கு ஏற்ற அற்புதமான ஒரு பொன்மொழியை கூறியே சென்றுள்ளனர்

அந்த ஹதீசை  நிதானமாக சிந்தித்தால்  மக்களுக்கு  அதன் மூலம் ஒரு தெளிவை நிச்சயம் ஏற்படுத்தலாம்

     +++++++++++++++++++++

1- பெருநாள்  தினம் என்பது ஒட்டு மொத்த முஸ்லிம்  சமூகத்தின்  மனமகிழ்வை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவே மாத்திரம்  உள்ளது

2- சமூக தலைவர்கள் முடிவு செய்யும் ஒரு நாளையே பெருநாள் தினமாக கணிப்பதிலும் அதை மக்கள் ஏற்று  கொண்டாடுவதிலும் குற்றம் இல்லை

                     --------------
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பாகும்
நோன்பு பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்பு பெருநாளாகும்

ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும் என நபி
( ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கின்றனர்

      நூல்  திர்மிதீ  பாடம் நோன்பு
              ------------------------------

இந்த ஹதீசை உற்று நோக்குபவர்களுக்கு அடிப்படையாக ஒரு கருத்தை ஆழமாக புரிய முடியும்

அதாவது பிறை தொடர்பான  பல கருத்துகள் நிலவினாலும் அதன் இறுதி  முடிவு சமூக தலைவர்கள் எடுப்பது தான்

எனவே நீங்கள் உங்கள் ஊரில் எந்த ஜமாத்தில் அங்கமாக உள்ளீர்களோ அந்த ஜமாத் தலைவர்கள் எடுக்கும் முடிவின் பிரகாரமே இவ்விசயத்தில்  செயல் படுங்கள்  

அதே நேரம் உங்கள் கருத்தையும் முன் வையுங்கள்

உங்கள் கருத்து நியாயமாக இருக்கும் பட்சத்தில்  அந்த கருத்தை அவர்கள் அங்கீகரிக்காத சூழலில் அதன் மறுமை கேள்விகளுக்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர நீங்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

இதற்காக சண்டையிடுவதோ அல்லது இதற்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டு திரிவதோ நமது ரமலான் நன்மைகளை தான் பாழ்படுத்தும் 

فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرًا لِّأَنفُسِكُمْ ۗ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்

(அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்
அவனுக்கு வழிபடுங்கள்

(அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்

அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்

         (அல்குர்ஆன் : 64:16)

            நட்புடன் J.இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்