டெல்லி மதரசா விவகாரம்
டெல்லி மதரசா தொடர்பான
பாலியல் குற்றச்சாட்டை முஸ்லிம்கள்
கண்டு கொள்ளாதது ஏன்
========================
01-05-18- செவ்வாய் கிழமை
*********************
கட்டுரை எண் 1151
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
ஒரு தகவல் எந்தளவுக்கு கொடூரமாக சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு அதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருமே மக்களின் பார்வைக்கு அம்பலப்படுத்த படுவார்கள் என்பது தான் உலக இயல்பு
பிக்பாக்கெட் திருடனையும் கொலை குற்றவாளிகளையும் ஒரே தரத்தில் விளம்பரம் செய்யப்படுவது இல்லை
ஆசிபா கற்பழிப்பு படுகொலை குற்றவாளிகளின் விவகாரம் தற்போது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில்
டெல்லியில் காசியாபாத்தில் அமைந்துள்ள ஒரு மதரசாவில் பத்து வயதுடைய இந்து மதத்தை சார்ந்த சிறுமியை பதினேழு வயதுடைய ஒரு முஸ்லிம் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அதை அந்த மதரசாவில் உள்ள இஸ்லாமிய மதகுருவே மூடி மறைத்ததாகவும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர்களால் முரண்பட்ட தகவல்களும் ஜோடிக்கப்பட்ட செய்திகளும் அடையாளம் தெரியாத நபர்களால் பரப்பப்பட்டு வருகிறது
அதே போல் இந்த செய்தியை பார்த்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு என்பவர்
கடவுளின் பெயரால் வாழும் இவரை போன்றவர்களை வெறி நாய்களை விட்டு கடித்துக் குதற வைக்க வேண்டும்
அவர்களுக்கு வாழவே உரிமை இல்லை என்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை போட்டிருப்பதாகவும் தகவல் இணைத்து பரப்பப்படுகிறது
உலகமே அறிந்த ஆசிபாவின் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை பற்றி இது வரை அறவே கண்டனத்தை பதிக்காத நடிகை குஷ்பு
இஸ்லாமிய மதரசாவோடு தொடர்பு படுத்தி சொல்லப்படும் இந்த விவகாரத்தில் இந்தளவு காட்டமான பதிவை போட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது ஒரு புறம் இருந்தாலும்
இவ்வாறு ஒரு சம்பவம் உண்மையில் நடைபெற்று இருந்தால் அதை முஸ்லிம் சமூகமும் கண்டிக்க தயங்காது என்பது முஸ்லிம்களின் மதநல்லிணக்க நடைமுறைகளை இஸ்லாமிய வழிகாட்டுதல்களை அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள்
அதே நேரம் சமூகவலை தளங்களில் பரப்பப்பட்டு வரும் மதரசா தொடர்பான வீடியோ செய்தியில் பல சந்தேகங்களும் ஆட்சேபனைகளும் நீடிக்கவே செய்கிறது
1- மதரசா தொடர்பாக பரப்பப்படும் வீடியோவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பத்து வயது இந்து சிறுமியின் வீடியோ மற்றும் அவரது புகைப்பட பதிவுகள் ஏதும் இல்லை
2-பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்படும் பதினேழு வயது வாலிபனின் புகைப்படமோ அல்லது அவனது வீடியோவோ அதில் இல்லை
3- இந்த பாலியல் குற்றத்திற்க்கு உறுதுணையாகவும் இந்த குற்றத்தை மறைப்பதற்க்கு மூல காரணமாகவும் இருந்ததாக பரப்பப்படும் அந்த மதரசா மவுலவியின் புகைப்படமோ அல்லது வீடியோக்களோ அதில் இல்லை
4-மதரசா விவகாரத்தில் சம்மந்தப்பட்ட எவர்களது பெயர்களும் அவர்களின் ஊர் மற்றும் பெற்றோர் சம்மந்தப்பட்ட இதர விபரங்களும் அந்த வீடியோ பதிவில் இல்லை
5 -இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் மதரசாவின் புகைப்படம் மற்றும் அதை சுற்றி இருக்கும் வேறு எந்த ஒரு ஆதாரங்களும் அந்த வீடியோவில் காட்டப்படவில்லை
6-காவல்துறை அதிகாரிகள் பதினேழு வயது குற்றவாளியை கைது செய்யும் விதமாக எந்த ஒரு சான்றும் அந்த வீடியோவில் இல்லை
7- போலீஸ் அதிகாரிகள் இஸ்லாமிய மதகுருவை கைது செய்வதை போல் அந்த வீடியோவில் காட்டப்படும் காட்சியில் குற்றவாளியின் பின் தலை மட்டுமே புகைப்படமாக காட்டப்படுகிறது
அவரது முகத்தை வேண்டுமென்றே அந்த வீடியோ புகைப்படத்தில் மறைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாகவே தெரிகிறது
சுருக்கமாக சொன்னால் மதரசா தொடர்பாக பரப்பப்படும் வீடியோவில் செய்தி வாசிக்கும் பெண்ணிண் பின்னனி ஓசை தான் தெளிவாக உள்ளதே தவிர
வேறு எதுவும் அந்த வீடியோவில் தெளிவாக முரண்பாடில்லாது புரியும் விதத்தில் காட்சிகள் இல்லை
9-பாலியல் வழக்குகளில் சிக்கி பீஜேபி கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து ஊடகங்களில் அம்பலப்பட்டு வரும் சூழலில்
குறிப்பாக ஆசிபா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பிப்பதற்க்கு மறைமுகமாக உதவி செய்தார்கள் என்று பீஜேபி ஆட்சி மீது நாட்டு மக்களின் கோப பார்வை இருக்கும் இந்த சூழலில்
டெல்லியில் மதரசாவில் இது போன்ற ஒரு குற்றம் வெளியாகி உள்ளது என்று அறிந்தால் அதை பெரிது படுத்தியே தங்களது பாலியல் குற்றங்களை மக்கள் உள்ளத்தில் இருந்து மூடி மறைக்க முடியும் என்ற நிலையில்
டெல்லி மதரசா தொடர்பான விவாதங்களோ அல்லது கண்டன அறிக்கைகளோ இந்நாள் வரை பீஜேபி கட்சியை சார்ந்த நபர்களாலும் அவர்கள் நடத்தும் ஊடகங்களாலும் குறிப்பாக தமிழகத்தில் செயல்படும் எந்த தொலை காட்சியிலும் அதிகாரப்பூர்வமாக வெளி வரவில்லை
CCTV கேமரா மூலம் பதிவாகியுள்ள டெல்லி மதரசா தொடர்பாக பரப்பப்படும் வீடியோவிலும் எந்த காட்சியும் தெளிவாக புரியும் விதம் இல்லை
எனவே ஆசிபாவுக்கு குரல் கொடுத்த முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள்
டெல்லி மதரசா விசயத்திற்க்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று தகவலை பரப்புவதே முஸ்லிம்களின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சிலர்களுக்கு உள்ள காழ்ப்புணர்வாகும்
மேற்கூறிய எந்த விபரங்களுக்கும் தெளிவுகள் கிடைக்காது முஸ்லிம்கள் இவ்விசயத்தில் இதை பற்றி விவாதிக்காது இருப்பதே அறிவார்த்தமான விசயமாகும்
ஒரு வேளை டெல்லி மதரசா தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் குற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்பதில் முஸ்லிம்களுக்கு எவ்வித மாற்று கருத்தோ ஆட்சேபனையோ இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்
காரணம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற விசயத்தில் உலகிலேயே அதிகமாக வலியுருத்தி அதை அரபு நாடுகளில் பல இடங்களில் இன்று வரை நடை முறையிலும் வைத்திருக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்
-------+++-+++++------
ஆசிபா தொடர்பான இதர ஆக்கம்
ஆசிபா விவகாரத்தை மூடி மறைக்க கீதா கதாபாத்திரம் http://yaseenimthadhi.blogspot.com/2018/04/blog-post_27.html
++++++++++++++++++++
ஆசிபா விவகாரம் வீரியம் http://yaseenimthadhi.blogspot.com/2018/04/blog-post_26.html
++++++++++++
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment